” வாரம் ஒரு கவிதை” …. ” சுடும் நினைவுகள் “….

சுடும் நினைவுகள்
…………….
…………….
தீயினால் சுட்ட புண் ஆறும் …ஆனால் ஆறாது நாவினால் சுட்ட வடு !
இது வள்ளுவன் வாக்கு !
நாவினால் சுட்ட வடு மட்டுமல்ல மறையாதது ….நம் மனசைத்  தொட்ட,
சுட்ட, சில நினைவுகளும்  அப்படித்தான் ..எப்போதும் நம்மை சுடும்
நினைவாக , ஒரு வடுவாக உருமாறும் !
நம் வாழ்வில் நாம்  சந்திக்கும் சோதனையும் பல வேதனையும்
நம்மை சுடும்
புண்ணே என்றாலும் நம்மை புடம் போட்ட தங்கமாக
மாற்றும் மருந்தும் அந்த சுடு நினைவுதான் அல்லவா !
சுட்டல்தானே பொன் சிவக்கும் … நம் வாழ்வு சிறக்க ,செழிக்க
தேவை நமக்கு ஒரு சூடு சரியான சமயத்தில் !
அது இயற்கையின் நியதியும் கூட !  இந்த நியதியை
ஒரு விதியாக விதைப்பதில் இயற்கைக்கு என்றும் இல்லை ஒரு தயக்கம்!
ஆனால் நம்மால் பிறருக்கு வரும்  சோதனையும்,  வேதனையும்
அவர்   மனத்தை முதலில் சுட்டாலும் , கட்டாயம் அவர் மீள்வார்
அந்த கட்டம் தாண்டி ….தன்   மனதில் சுட்ட புண்ணுடனும்
 சுடு நினைவுடனும் …
இதுவும் அந்த இயற்கையின் நியதியே !
பிறிதொருவர் வாழ்வில் நாம் சுட்ட புண்  நம் மனதில் ஒரு
ஆறாத , வடுவாக மாறி தினம் தினம் நம்மையே திருப்பி
சுட்டெரிக்கும் ஒரு சுடு நினைவாகும் என்பது மட்டும் உறுதி !
இது இயற்கையின் நீதி !
Credit…My Kavithai in  www.dinamani.com …Published in .Kavithai mani….on 21 dec 2015
Natarajan

Leave a comment