வாரம் ஒரு கவிதை …..” தொலைந்து போன கடிதம் ” !!!

 

தொலைந்து  போன  கடிதம்
……………………….
நம் முகவரி தேடி  நம்மை  நாடி    ஒரு கடிதம் வந்து  நாம் அதை
பிரிக்கும் நேரம்
பிறந்த குழந்தை ஒன்று நம் கைகளிலே தவழ்வதற்கு சமமான
பெருமித  நேரம் ! ஒரு பொன்னான நேரம் !
“நலம்  நலம் அறிய  ஆவல்”…..  கடிதத்தின் இதமான நுழை
வாயில்  இதில்  நம் கால் பதிக்கும்  நேரம் …  இளம்
 காலை இனிய தென்றல் நம்மை தொட்டு நடனமாடும்
புத்துணர்வு ஒரு ஊற்றாய் சுரக்கும் நம்முள் !
தகவல் தொழில் நுட்ப புரட்சியில் பிறந்த  புது முகம் தன்
முழு முகத்தையும்  காட்டும் முன்னர் , நம் கடித
பரிமாற்றம் எல்லாம் அடங்கின ஒரு அஞ்சல் அட்டையில் !
கிடைக்கும்  இடம் எல்லாம் எழுதி எழுதி கடிதம் அதை
திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் திறன் சிலருக்கு மட்டுமே
கை வந்த கலை !
கைப்பட எழதிய கடிதம் தொடுவது  நம் கைகளை மட்டுமல்ல ..நம்
உள்ளத்தையும்  உணர்வுகளையும்  சேர்த்துதான் ! இன்றைய
கைபேசியும், காண்  ஒளியும் ஒரு அஞ்சல் அட்டைக்கு இணையாகுமா ?
வலையின் அலையில் நாம் தொலைத்து  மறந்த  கடித பரிமாற்றம்
அதே வலையின் அலையால் மீண்டும் ஒரு நாள் கரை வந்து சேரும் !
காத்திருப்போம்  நாம் கரையில்  அதுவரை !
” மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் ஒருவர் வாழ்வில் ” என்னும்
  கூற்றை  மறக்காமல் , மறுக்காமல் !!!
K .Natarajan

One thought on “வாரம் ஒரு கவிதை …..” தொலைந்து போன கடிதம் ” !!!

  1. Sampathkumar K's avatar Sampathkumar K February 1, 2016 / 5:42 am

    nice Kavithai. the art of writing letters is not only lost among the present generation, we ourselves lost it midway. I remember the letters we receive from our father and thatha. Those letters speak to us as if the person wrote the letter is sitting in front of us. It is an emotional experience and cannot be explained. when I was in Mumbai i used to get letters from Sasi & balaji and i feel their presence in my flat in Mumbai. Replying to those letters is lovable experience.

Leave a reply to Sampathkumar K Cancel reply