எங்கும் எதிலும்
————–

எங்கள் வங்கியில் எங்கும் எந்த ஊரிலும்
எந்த கிளையிலும் நீங்க உங்க பணம்
பெறலாம் ..பணம் கட்டலாம் என்று
சொன்னது என் வங்கி …மகிழ்ந்தேன் நான் !
வங்கிக்கு செல்லும் வீண் சங்கடம் எதுக்கு
உனக்கு…. உன் வங்கி கணக்கு விவரம்
இப்போ உன் மடிக் கணினியிலும் கைபேசியிலும்
சொன்னது மீண்டும் என் வங்கி !
வங்கியே என் கையில் இப்போது ..எங்கும் எப்போதும் !
பணம் எடுக்க ATM …எங்கும் எதிலும் எப்போதும் !
விண்ணில் பறந்தேன் நான் …மண்ணில் இல்லை
என் கால் !
எங்கும் எதிலும் எப்போதும் பண பரிமாற்றம் !
உங்க வங்கிக்கு நீங்க வரவே தேவை இல்லை
உங்க வங்கி கணக்கு இப்போ உங்க கையில்
என்றும் சொன்ன என் வங்கி இருக்குதா
அதே இடத்தில் என் பணத்துடன் ?
இன்று சென்று பார்க்க வேண்டும் நான் !
எங்கும் எதிலும் நானாவது கவனமாக
இருக்க வேண்டாமா ? என் வங்கியில்
இருப்பது என் பணம் அய்யா !
Natarajan
in http://www.dinamani.com dated 25th Feb 2018