வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. ’emergency ‘ கொட்டகையில் இரவு கடுங்குளிராக இருக்கும் என்று எண்ணினார்.
பழுத்த கனபாடிகளுக்கே வழங்கப்படும் சால்வைகளை, அந்த பிஞ்சு வித்யார்த்திகளுக்கே வழங்க செய்தார். அதுகளுக்கு கொள்ளை சந்தோஷம். பாதாள கங்கை சென்றார்.
திடீரென்று அங்கே ஒரு பழுத்த கனபாடிகளே வந்துவிட்டார். தரிசனம் முடிந்தவுடன் புறப்பட வேண்டிய அவசரத்தில் இருந்தார். பெரியவா அவரை சம்மானிக்க சால்வை கொண்டுவர சொன்னார்.
மானேஜருக்கோ அந்த குறுகிய நேரத்திற்குள் முகாமுக்கு சால்வை எதுவும் கொண்டு வரவில்லை. சட்டென்று அன்று பாடசாலை பசங்களுக்கு புது சால்வை கொடுத்தது நினைவு வந்தது. எனவே, பெரியவாளிடம் எதுவும் பிரஸ்தாபிக்காமல், காதும் காதும் வைத்தாற்போல் ஒரு பையனிடமிருந்து சால்வையை திரும்ப பெற்றுவந்து, கனபாடிகளுக்கு கொடுத்துவிட்டார்.
இரவு ஏமாற்றத்துடனேயே கையை காலை முடக்கி கொண்டு, அந்த பையன் தூங்கிபோனான். காலையில் எழுந்திருக்கும்போது,அதி சொகுசும், கதகதப்பும் தன்னை ஆற அணைதிருப்பதால் அதிசயித்தான். அவன் இழந்ததைவிட உயர் ரகமான சால்வை அவன் மீது போர்த்தபட்டிருந்ததே அந்த சுகத்துக்கு காரணம்.
“போர்வை வந்துதாடா?” மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது.
கூர்ந்த திருஷ்டி கொண்ட பெரியவா, கனபாடிகளுக்கு கொடுத்த சால்வை, பாடசாலை சிறுவனுடையது என்று கண்டுபிடித்து விட்டார். அதற்குபின் மாலை அனுஷ்டானம், இரவு பூஜை, எல்லாம் முடிந்ததும், மனேஜரை கூப்பிட்டு விசாரித்தார்.
அவர் செய்தது தனக்கு திருப்தி இல்லை என்றும், தன் சகாக்களுக்கு கிடைத்தது தனக்கு தங்கவில்லையே என்று எப்படி அந்த குழந்தை வருந்தும் என்று விளக்கினார். விட்டால், எங்கே தன்னுடைய சால்வையையே கொடுத்துவிடுவாரோ என்று மனேஜருக்கு கவலை வந்துவிட்டது.
எனவே தாம் முந்திக்கொண்டு “எனக்கு போர்த்திகொள்ள நல்ல கம்பிளி போர்வை இருக்கு. அதையே பையனுக்கு கொடுத்துடறேன்” என்றார்.
“தூங்கிண்டு இருந்தா எழுப்பாதே! நைஸா மேலே போத்திட்டு நீயும் போய் விஸ்ராந்தி பண்ணிக்கோ”
“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை பாலனுக்கு கிடைத்து.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4122#ixzz2RMoinIro