” சொன்னா நீ வருத்தப் படுவே …” !!!

முழுப்பைத்தியமும் அரையும்!

சைக்காலஜிக்கும், சைக்யாட்ரிக்கும் இருக்கும் வேறுபாடு பலருக்குப் புரியவில்லை.

ஒன்று சாதாரண மனநிலை பற்றிய விஞ்ஞானம், இன்னொன்று அசாதாரண மனநிலையைப் பற்றிய விஞ்ஞானம். என் இந்த எண்ணம் சரிதானா என்று சைக்யாட்ரி தெரிந்த நண்பர் ஒருவரைக் கேட்டேன். அவரும் அதை ஆமோதித்தது சந்தோஷமாக இருந்தது. நீண்ட நாளாக இருந்த என் சந்தேகம் இன்னொன்றையும் உடனே கேட்டேன்.

“ஒருத்தருக்கு சைக்யாட்ரி பிரச்சினை இருக்கு என்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறது?”

“ரொம்ப சுலபம். அது மாதிரி ஆட்கள் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையான மக்கள் இருக்கும் மனநிலையிலிருந்து மாறுபட்டிருப்பாங்க. சின்னச் சின்ன சோதனைகள் பண்ணி கண்டுபிடிச்சிடலாம்” என்றார்.

“உதாரணத்துக்கு ஏதாவது ஒரு சோதனையைச் சொன்னாத்தானே புரியும்?” என்றேன்.

“இப்போ ஒரு ரூம்ல ஒரு பக்கெட் நிறைய தண்ணியை வச்சிட்டு பக்கத்துல ஒரு பிளாஸ்டிக் மக், ஒரு டீ ஸ்பூன் இரண்டையும் வச்சிடணும்”

“சரி”

“சம்பந்தப்பட்ட ஆளை அறைக்குள்ளே அனுப்பி பக்கெட் தண்ணியைக் காலி பண்ணச் சொல்லணும்”

“இண்டரஸ்டிங். அப்புறம்?”

“அவன் சூஸ் பண்ற மெத்தேடே அவனைக் காட்டிக் குடுத்துடும்”

இதைக் கேட்டதும் நான் விலாப்புடைக்கச் சிரித்தேன்.

“ஸ்பூனை யூஸ் பண்ணி மணிக் கணக்கா மொண்டு ஊத்தினா அவன் பைத்தியம்ங்கிறே?”

“எக்ஸாக்ட்லி?”

“பிளாஸ்டிக் மக்கை வச்சி ஒரே நிமிஷத்துல காலி பண்ணா அவன் நார்மல் இல்லையா?”

“இல்லை. அந்த மாதிரி ஆட்களுக்கு வேற பேர் இருக்கு”

“என்னது?”

“சொன்னா நீ வருத்தப்படுவே”

“பரவாயில்லை சொல்லு”
……………….
………………..

“அந்த மாதிரி ஆட்களைத்தான் செமின்னு சொல்வாங்க”

“அப்ப நார்மலா இருக்கிறவன் என்ன பண்ணுவான்?”

“பக்கெட்டைத் தூக்கிக் கவுத்துட்டுப் போய்க்கிட்டே இருப்பான்”

 

source::::unknown… input from a friend of mine

natarajan

Leave a comment