” கடவுளும், மனைவியும் ஒன்று தெரியமா”?..!!!
” அது எப்படிடா”?…
” இரண்டு பேருமே நாம் சொல்வதை எல்லாம் கேட்பார்கள். ஆனால் அவர்கள் இஷ்டப்படி தான் நடப்பார்கள்”!!…
………………….
என்னய்யா இது?….
வாட்ச்மேனைக் கூட்டிட்டு வந்து
லோன் வேணும்னு கேக்கிறே?”
.
“”செக்யூரிட்டியோட வந்தா
“லோன்” தரேன்னு நீங்கதானே சொன்னீங்க”
…………………..
வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.
” அப்பா இருக்காரா…?”
“இல்ல… வெளியூர் போயிருக்கார்…”
” அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி, இருக்காங்களா..?”
“அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க…”
“அண்ணனையாவது கூப்பிடு…”
” அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்.”
“சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு…”
” அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க…”
வந்தவர் கடுப்பேறி…. நீ மட்டும் ஏன் இருக்கே…? நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே…?’
+
+
“ஆமா…. நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்…
……………………………..
ஹலோ.. சத்தமா பேசுங்க,
கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி கேட்குது!”
*
*
“அங்கிருந்துதான்டி பேசறேன், வந்து காப்பாத்து…”
SOURCE::::: Input from a friend of mine
Natarajan