
1. துடிப்பிருக்கும் இதயமல்ல… இரவு பகல் விழித்திருக்கும் கண்ணுமல்ல…
அது என்ன?
2. இளஞ்சிவப்பு ராணி… இரு பதினாறு சிப்பாய் காவல்… இது என்ன?
3. தாய் இனிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள்… இவை என்ன?
4. உருவத்தில் சிறியவன்… படபடவெனப் பொறிவான்… இது என்ன?
5. ஈட்டி படை வென்று, காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு.. அது என்ன?
6. ஊதினால் பறக்கும், அதன் மதிப்பை உலகமே மதிக்கும். அது என்ன?
7. ஐந்து அடுக்கு… நான்கு இடுக்கு…
இது என்ன?
8. இரவும் பகலும் ஓய்வு இல்லை… அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை… இவன் யார்?
9. திறந்து திறந்து மூடினாலும், ஓசை சிறிதளவும் கேட்காது… இது என்ன?
விடைகள்:
1. கடிகாரம்; 2. நாக்கு; 3. பால், தயிர், நெய்; 4. கடுகு;
5. பலாப்பழம்; 6. ரூபாய் நோட்டு; 7. விரல்கள்;
8. இதயம்; 9. கண் இமை.
Source….www.dinamani.com
Natarajan