நினைவு பெட்டகம் 2017
————————-
ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே
கற்கண்டு போல் இனித்த நாளும் உண்டு
கசப்பு மட்டும் காட்டிய நாளும் உண்டு
இனிப்போ கசப்போ …கட்டாயம் சொல்லும் அது
ஒரு பாடம் …நாளும் ஒரு பாடம் கற்று நானும்
மாற்றிக்கொண்டேன் என்னை எல்லா நாளையும்
இனிய நாளாக ஏற்க !
இந்த ஆண்டு நினைவு பெட்டகமும் ஒரு பொக்கிஷமே
எனக்கு … இந்த பெட்டகம் திறக்க தனி ஒரு கடவு சொல்
வேண்டாம் …திறந்து படிக்க ஒரு மடிக் கணிணியும்
வேண்டாம் எனக்கு !
கடவுள் கொடுத்த Memory Power ஒன்று மட்டும்
போதும் எனக்கு இந்த பெட்டகம் திறக்க !
வாழ்வின் ஓவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷமே
இந்த ஆண்டின் பொக்கிஷ நினைவை நான்
அசை போடும் நேரம் புத்தாண்டு விடியலுக்கும்
ஆசையுடன் காத்திருக்கிறேன் நான் !
இனி வரும் எல்லா நாளும் இனிய நாளாக அமைய
வேண்டும் … என் பொக்கிஷப் பெட்டகம்
திறந்து பார்க்க வேண்டும் நான் ஒவ்வொரு
ஆண்டும் இன்று போல் …ஒரு கடவு சொல் ,
மடிக் கணிணி துணை இல்லாமல் !
Natarajan
1st Jan 2018