Kaveri Prasanna Maha Ganapathi Temple …

[image]

Thiruvaiaru is a ‘punya bhoomi’ with 5 rivers flowing through it ( Cauvery, Kudamuruti, Vadavaru, Vennaru and Vettaru ). About 9 km from here is Thirupoonthuruthi and a nearby village is ‘Nadukkaveri’.

It was the year 1942. The house of Chinnaswamy Iyer. He has a son, Ramachandran and his wife is Sita.They have been married for some time and longing for a child. They are of course devotees of Periyava.

The Maha Swamy visited the village and walked through the length of it with His sishyas and devotees.

At Chinnaswamy Iyer’s house, Sita was busy doing a ‘Kolam’. Periyava, walking at a brisk pace, suddenly stopped near Sita . She was completely taken by surprise and was speechless. With tears in her eyes she prostrated before Periyava. Periva asked her, “Where is your Raman?. Saying that He entered the house, looked around and opened a room (which was actually a dumping place) which had been kept closed for a long time, dusted off the floor with a ‘thundu’ and sat down.

By this time Raman and Sita were there. He looked at Raman and said ‘go get milk from the udders of the cow in a sombu’.

Raman did as was told. Then Periva did japa and told Rama, ‘go to Kudamuruti river, pour some milk in it and the rest on the banks of the river. Dig where you poured the milk and you will hit a basement. There, you build a temple for Vinayaga. You will live happily’. So saying, He got up and left.

Raman did as Periva said, and indeed found the basement and built a Ganesha temple there. Soon after, Sita delivered a male child and they named him ‘Ganesan’.

Well, the temple ? It still stands there in Nadukkaveri – ‘Kaveri Prasanna Maha Ganapthi temple’.

source: yahoo groups…and kanchi periva forum

Natarajan

Read more:http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3044#ixzz2E36AJPDt

காக்க காக்க நா காக்க !!!!!

source::: input from one of my friends….

Natarajan

மகரிஷி வேதவியாசர் மகாபாரத்தின் கடைசி ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தார். அதை விக்னேஸ்வரர் ஓலைச்சுவடியில் தன் முத்துப் போன்ற அழகிய கையெழுத்தில் எழுதியும் ஆயிற்று. அப்போது வியாசர் சொன்னார்:

விக்னேஸ்வரா! தங்கள் எழுத்தாணி பெரும்பேறு பெற்றது. ஏனெனில் உண்மையில் மகாபாரதத்தை நீங்கள்தான் சிருஷ்டித்தீர்கள்.

ஆனால், உங்கள் எழுத்தாணியைவிட வியப்பளிக்கும் விஷயம், தங்களுடைய இந்த நீண்ட மௌனம்! நீங்களும் நானும் நீண்டகாலமாக உடன் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் நான் 15-20 லட்சம் சொற்கள் சொல்லியிருக்கிறேன். ஆனால், உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூடக் வெளிப்படவில்லை. இது ஏன்?”

விநாயகர் தன் மௌனத்தை விளக்கிச் சொன்னார்:

பாதராயணரே! சில விளக்குகளில் அதிக அளவில் எண்ணெய் இருக்கும்; சிலவற்றில் குறைவு. ஆனால், எந்த விளக்கிலும் தீர்ந்தே போகாத அளவு எண்ணெய் இருப்பது சாத்தியமில்லை.

அதேபோல தேவர்கள், தானவர்கள் போன்ற எல்லோருடைய பிராண சக்தியும் எல்லைக்குட் பட்டது. சிலருக்கு அதிகம், இன்னும் சிலருக்குக் குறைவு. எல்லையில்லாத சக்தி யாருக்கும் கிடையாது.

இந்தச் சக்தியின் முழுப்பயனையும் அடைய வேண்டுமானால், கட்டுப்பாட்டுடன் இதை உபயோகிக்க வேண்டும். கட்டுப்பாடுதான் எல்லா சித்திகளுக்கும் ஆதாரம். கட்டுப்பாட்டின் முதல் படி நாக்கைக் கட்டுப்படுத்துதல் அல்லது மௌனம்.

யார் நாவை அடக்குவதில்லையோ, அவர் வாய் அனாவசியமாக வார்த்தைகளைச் செலவழிக்கிறது. அவசியமற்றுப் பேசிக்கொண்டே போவதால், மனக்கட்டுப்பாடும் அற்றுப் போய் சக்தி விரயமாகிவிடுகிறது.” விநாயகர் சொன்ன இந்த விளக்கம் நம் எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா?

இன்ஸ்டன்ட் கவிதை ….பிள்ளையாரப்பா !!!!!

தகப்பன் சாமிக்கு அண்ணனே என் அப்பன் பிள்ளையார்

அப்பனே ….அப்பமொடு அதிரசம் அவல் பொரியும்

உன் மனம் மகிழ மோதகமும் தப்பாமல் உனக்கு

நான் தருவேன் அப்பா …..

தப்பு என் மீது எது இருந்தாலும் …. நீ

தப்பாமல் என் வீடு வந்து அப்பமெல்லாம் சப்பு கொட்டி

சாப்பிடு அப்பா !!!!! என் அப்பனே பிள்ளையாரப்பா !!!!!!        pillayaru

A poetic welcome to Pillayar on this DAY of GANESH CHATURTHI….

Natarajan

மோதகப் பிரியன் மனம் மகிழ ……

HAPPY BIRTHDAY TO OUR PILLAYAR…. on this day we normally make traditional Kolukattai…A friend of mine from chennai has given ideas for making Modern Kolukattai with different ingredients ….

It will certainly be useful for our people living all over the world…Keeping in mind the ingredients they get in their respective countries!!!!!!

Have a cheerful GANESH POOJA with modern kolukkattai !!!!!!!!

Natarajan

மோதகப் ப்ரியன்’ மகிழும் ‘பலவகை கொழுக்கட்டைகள் !!!

மோதகப் ப்ரியன்’ விநாயகப் பெருமானைப் போற்றி மகிழும் விநாயகர் சதுர்த்தி திருநாளை, பொன்னாளாக கொண்டாட உதவும் வகையில், ‘பலவகை கொழுக்கட்டைகள் இங்கே.

”ஆவியில் வேக வைப்பதால், கொழுக் கட்டை எளிதில் ஜீரணமாகும். எனவே, விருப்பப்படும் நாட்களில் எல்லாம் செய்து பரிமாற… பீட்ரூட் கொழுக்கட்டை, சேமியா கொழுக்கட்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக் கட்டைகள். விநாயகர் அருளால் உங்கள் இல்லத்தில் எல்லா வளமும் நிறைந் திருக்கட்டும்”

புரோட்டீன் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், சோயா பீன்ஸ் – அரை கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.

கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ் பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்… புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: சத்தான, புதுமையான இந்தக் கொழுகட்டை, எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.

பீட்ரூட் கொழுக்கட்டை

தேவையானவை: பீட்ரூட் துருவல், அரிசி மாவு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10.

செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் விட்டு கலந்து… வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, ஆவியில் வேக வைத்து எடுக் கவும். மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.

ஹெர்பல் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கொத்தமல்லி இலை – ஒரு கப், புதினா – கால் கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் (ஒரு கொதி போதுமானது). இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால்… ஹெர்பல் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: இது, நல்ல வாசனை யாகவும் ருசியாகவும் இருக்கும். பித்தத்தை தணிக்கும். பசியைத் தூண்டக்கூடியது.

பஞ்சரத்ன கொழுக்கட்டை

தேவையானவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி விட்டு, அரைத்து எடுத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்கவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கலந்து எடுக்கவும்.

காரடையான் நோன்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், காராமணி – கால் கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – அரை டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுத்து வேகவிட்டு எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்கவிடவும். இத்துடன் வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு, ஏலக்காய்த் தூள், நெய் கலந்து… கொதிக்கும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் ஈர கையினால் கலவையை நன்கு பிசைந்து கலக்கவும். சிறிதளவு கலவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள ஃப்ரெஷ் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் வைத்து பரிமாறவும்.

ஏகாதசி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி ரவை, தேங்காய் துருவல் – தலா ஒரு கப், வெல்லத்தூள் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். உடனே அரிசி ரவையைப் போட்டு கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி ரவை கலவையில் இருந்து சிறிய கமலா ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டி, நடுவில் குழி செய்து 2 டீஸ்பூன் அளவு தேங்காய் கலவை வைத்து மூடி, வட்டமாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: நம் முன்னோர்கள் ஏகாதசிக்கு இதை மட்டுமே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்தனர். அதனால்தான் இந்தப் பெயர்!

சேமியா கொழுக்கட்டை

தேவையானவை: சேமியா – 200 கிராம், தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் – 2 கப், அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது), கடுகு, சீரகம், எள் – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவை வறுத்து, பாலில் 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிள காய் ஆகியவற்றை வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்கவும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகிய வற்றையும் அதில் கலக்கவும். கையினால் நன்கு மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பாஸ்தா மசாலா கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம், குடமிளகாய், கேரட் – தலா ஒன்று, பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாஸ்தாவில் கொதிநீர் விட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் வறுத்து… உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துண்டுகள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். வெந்து சேர்ந்தாற்போல் வந்ததும், பாஸ்தாவை அதில் சேர்த்து கலந்துவிடவும். ஆவியில் வேக வைத்த அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து, லேசாக கலக்கவும். நிறைவாக, தக்காளி சாஸ், புதினா, கொத்தமல்லி தூவி கலக்கினால்… பாஸ்தா மசாலா கொழுக்கட்டை தயார்

சேவரி கொழுக்கட்டை

தேவையானவை: மிச்சமாகிப் போன சேவரி (ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி போன்றவை) – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: மிச்சமாகிப் போன ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி எதுவாகிலும் ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் கொரகொரப்பாக தூள் செய்யவும். இதனுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்தால்… பூரணம் தயார். கடாயில் தண் ணீர், உப்பு, எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழி செய்து, பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதை நினைத்த நேரத்தில் செய்து அசத்தலாம்.

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) – 10, முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 10, திராட்சை, வெல்லம் – தலா 50 கிராம், பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு… அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு. முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸி யில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால்… பூரணம் தயார். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: திராட்சை, பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்தும் அரைத்து எடுக்கலாம்.

ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு – 2 கப், அரிசி மாவு – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும். உப்பு சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு தூவி கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். ஈரக் கையினால் கலவையில் சிறிதளவு எடுத்து உருட்டி லேசாக தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இது எல்லோருக்கும் ஏற்றது. சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

மின்ட் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, புதினா – தலா அரை கப், பச்சை மிளகாய் – 4, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பொட்டுக்கடலை, புதினா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு… உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்த விழுதை போட்டு கலக்கவும். உடன் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை

தேவையானவை: சோயா சங்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – 20 அல்லது 25, பொடித்த வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பச்சரிசி மாவு – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 4 டீஸ்பூன்.
செய்முறை: சோயா சங்ஸை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து உதிர்த்து துளாக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல் லத்தை கரையவிட்டு வடிகட்டி, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். தூளாக்கிய சோயா சங்ஸை இதில் போட்டு, ஏலக்காய்த்தூள் கலந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.

கடாயில் தண்ணீர் விட்டு, உப்பு, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவைத் தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கட்டி இல்லாது பிசைந்து கொள்ளவும். மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, தேவையான அளவு சோயா சங்ஸ் பூரணம் வைத்து மூடவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கம்பு இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – 2 டீஸ்பூன், கம்பு மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – முக்கால் கப்.

செய்முறை: அரிசி மாவு, கம்பு மாவை வெறும் கடாயில் சேர்த்து சூடுபட வறுத்து, கலந்து எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லக் கரைசலை விட்டுக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். கலவையில் சிறிது எடுத்து நீளவாட்டில் உருட்டவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கேபேஜ் கொழுக்கட்டை

தேவையானவை: முட்டைகோஸ் துருவல் – 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், அரிசி மாவு – 2 கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து எடுக்கவும். அதே கடாயில் முட்டைகோஸ் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து… உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு, இதில் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக செய்து, அதில் 2 டீஸ்பூன் அளவு முட்டைகோஸ் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

உசிலி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும். சுடுநீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். அதனுடன் அரைத்த உளுத்தம்பருப்பு விழுதை சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாக வந்ததும், வேக வைத்த கொழுக்கடைகளை சேர்க்கவும். லேசாக கலந்து இறக்கவும்.

ஸ்பிரவுட் கொழுக்கட்டை

தேவையானவை: முளைகட்டிய பயறு – ஒரு கப், பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல் – கால் கப், அரிசி மாவு – ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும். பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி… உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்… ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.

மணி பேக் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், பட்டாணி, வெல்லம் – தலா அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன், எண் ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: பட்டாணியை முதல் நாளே ஊற வைத்து, அடுத்த நாள் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு… உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். அதில் பட்டாணி விழுது, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் இருந்து சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணத்தை கொஞ்சம் வைத்து, பை போல் சுருக்கி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சுருக்குப் பை வடிவத்தில், பார்க்க அழகாக இருக்கும் இது, சுவையிலும் சூப்பர்தான்!

முத்து கொழுக்கட்டை

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், மைதா – 2 டீஸ்பூன், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அழுத்தி பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது சேர்த்து… கறிவேப்பிலை, கொத்தமல்லி கிள்ளி போட்டு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்…. முத்து கொழுக்கட்டை தயார்.

பூந்தி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், இனிப்பு பூந்தி – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கடாயில் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் அரிசி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும், கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து, அதனுள் 2 டீஸ்பூன் அளவு பூந்தி வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்த வற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கருப்பட்டி கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கருப்பட்டி – அரை கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ் பூன், தண்ணீர் – ஒன்றே கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு… உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும். கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் – தலா கால் கப், கொத்தமல்லி இலை – கால் கப், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு.. சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் முட்டைகோஸ், கேரட் துருவல், கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சுருள கிளறவும். மிளகுத்தூள் கலந்து இறக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை

தேவையானவை: தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் – தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் – அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தினை மாவை வெறும் கடாயில் வறுத்து… உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கார கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் துருவல் – தலா 4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். தேங்காய் துருவல், இட்லி மிளகாய்ப் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறவும். தீயை நிறுத்திவிட்டு, ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவு கலவை எடுத்து உருட்டி தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இஞ்சி இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், நறுக்கிய இஞ்சி, பொடித்த வெல்லம் – தலா அரை கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், எண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் நீர் விட்டு சூடாக்கி வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். இஞ்சித் துண்டுகள், பொட்டுக்கடலையை சேர்த்து அரைத்து, வெல்லக் கரைசலில் சேர்த்து, நெய் விட்டு பூரணமாக கிளறி எடுக்கவும். அரிசி மாவு கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டி, குழி செய்து, சிறிது இஞ்சி பூரணம் வைத்து மூடி உருட்டி, லேசாக அழுத்தவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

கம்பு மசாலா கொழுக்கட்டை

தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒன்று, வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றே கால் கப், எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது கம்பு மாவை சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காய துண்டுகள், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு கலந்து பிசைந்து சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கம்பு மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழித்து, மசாலா கலவை உருண்டையை அதில் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கோதுமை மாவு கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை மாவு – அரை கப், தேங்காய் துருவல் – 2 கப், வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு… தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். பிசைந்து வைத்த கோதுமை மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். சூடான எண்ணெயில் 4, 5 கொழுக்கட்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: ஹோமம் செய்யும் நாளில் இதனை தயாரிப்பது வழக்கம்.

கோசுமல்லி கொழுக்கட்டை

தேவையானவை: மைதா – ஒரு கப், பாசிப்பருப்பு, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை – தலா 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும். இத்துடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, சப்பாத்தி போல இட்டு, அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு பருப்பு – காய் கலவை வைத்து மூடி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

உண்டிலி பாயச கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், வெல்லம் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், சாரைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், பால் – 500 மில்லி, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும். அதில் கொதி நீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, மணி மணியாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, பாலில் கலந்து கொதிக்கவிடவும். பால் கலவை பாதியாக குறுகியதும், ஒரு டீஸ்பூன் நெய்யில் சாரைப்பருப்பை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். உருட்டி, வேக வைத்த கொழுக்கட்டைகளை, பால் கலவை சேர்த்து, கொதி வந்ததும் இறக்கவும்.

டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பேரீச்சம்பழம் – 10 (விதை நீக்கவும்), பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், வெல்லம் – பெரிய எலுமிச்சம் பழ அளவு, அரிசி மாவு – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஓட்ஸ், பொட்டுக்கடலையை மிக்ஸியில் தூளாக்கவும்.. கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி… வெல்லத்தை கரைய விட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஓட்ஸ் – பொட்டுக்கடலை பொடி சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்தால்… பூரணம் தயார். பேரீச்சம்பழத்தை நடுவில் நீள வாட்டில் பிளந்து பூரணத்தை ஸ்டப் செய்து கொள்ளவும். கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு மாவுக் கலவை எடுத்து, உருட்டி குழி செய்து, அதில் டேட்ஸ் – ஓட்ஸ் பூரணத்தை வைத்து மூடவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்… புதுமையான, சத்தான டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை
தயார்.

__._,_.___

பிள்ளையார் பிள்ளையார் அருமையான பிள்ளையார் !!!!!!

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்:
 Source::::::”:Dinamalar”….Tamil daily…
 Natarajan

* “வி’ என்றால் சிறப்பு. “நாயகன்’ என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.

* மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.

* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.
* விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
* விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.

* விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.

* கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

* விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. “”அருகு போல் வேரூன்றி” என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு “மூதண்டக் கஷாயம்’ என்று பெயர்.

* விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.
* விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீசமுனிவரது புதல்வி.
 

தோப்புக்கரணம் பிறந்த கதை:

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது. 
 

விநாயகரை கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம். 
 

ஐந்து சுவாமி பூஜை:

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும். 
 

எங்கும் இவரது அருளாட்சி:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், “”பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,” என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப் பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சிதான் நடக்கிறது. 
 

இழந்த பொருளை தரும் விநாயகர்:

தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்’ என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது. 
 

சதுர்த்தி காண வருகிறார் பிள்ளையார் !!!!!!!!

 source:::: ” DINAMALAR”…Tamil Daily…..Let all of us seek HIS Blessings from Pillayar on this Maha chaturthi day… Birth day of PILLAYAR…
Natarajan

ஆனை முகப்பெருமானை போற்றி பூஜிக்கும் திருநாளான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 19ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராயினார் அந்த கணேசன்.

அந்த கணேசனை சதுர்த்தியன்று வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்களும் நடக்கும். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளித்து, அறிவு, தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து, எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுவோம்.
இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவர்ந்துவிட்ட கணேசரை விதம், விதமாக உருவாக்கி வழிபடுவதில் இந்தியா முழுவதும் உள்ள அவரது பக்தர்கள் தீவிர ஈடுபாடுகாட்டி வருகின்றனர். சென்னையிலும் கொஞ்சமும், பஞ்சம் இல்லாமல் விநாயகரை வித்தியாசமாக உருவாக்கி வருகின்றனர்.
“வேஸ்ட் ‘என்று தூக்கியெறியப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களைக் கொண்டு உருவாகிவருகிறார் ஒரு பக்கம், சாதாரணமாக அரிசியை குவித்துவைத்து அதில் சில மலர்களை வைத்த மாத்திரத்தில் அபாரமாக உருவாகி நிற்கிறார் இன்னொரு பக்கம், கார்த்திகை தீப விளக்குகளால் கம்பீரமாக எழுந்து கொண்டு இருக்கிறார் ஒரு பக்கம், நானும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கிரிக்கெட் மட்டையுடன் கிரிக்கெட் வீரராக பூம்புகார் கலைக்கூடத்தில் விற்பனையாகிக் கொண்டும் இருக்கிறார். கண்ணாடியில் அழகு காட்டுகிறார், அதே நேரம் எப்போதும் போல களிமண் மற்றும் வண்ண பூச்சுடன் தெருவிற்கு தெரு உருவாகி வருகிறார். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ரசாயன பூச்சு இல்லாத விநாயகர்தான் வேண்டும் என்று பக்தர்கள் கேட்டு வாங்குகின்றனர் ….

Vinayaka…Master of HIMSELF

On the eve of GANESH POOJA , this article on Ganapathy or Vinayaka is shared with you all ….Let us all pray to Ganapathy for the prosperity of our town, city, country and all our neighbours ….when everybody”s welfare is taken care of by Pillayar , automatically , our family will also prosper. no doubt in it. let us all invoke our prayers to Pillayar accordingly on this Ganesh Pooja….

Natarajan

If you want to lead a life of happiness, free from troubles and difficulties, you have to pray to Ganapathi, the remover of all obstacles. There is no need to go to any temple. Vighneswara dwells in each one of you as your intelligence (buddhi) and wisdom (vijnaana). When you make proper use of your inherent intelligence and wisdom, you will be successful in life.

Vinayaka (Ganesha) drives away all sorrows, difficulties, and miseries. He is the enemy of all obstacles. He will not allow any obstacles to come in the way. He is the destroyer of obstacles. He confers happiness and peace (on his devotees). He is the master of all these powers (intellect (buddhi) and fulfillment (siddhi, self-realization). What is this siddhi? When there is purity of mind, you achieve peace (which is siddhi). Vinayaka is thus the Lord of the intellect and self-realization. Hence, every human being should acquire control over the mind … .
Vinayaka is the Lord of all learning (vidya). Does learning mean bookish scholarship? No. Everything pertaining to the cosmos is included in the term learning (vidya). Walking, talking, laughing, sitting, eating, strolling, thinking –every kind of activity is related to learning. Vinayaka is the master of every kind of learning. Today, learning is identified with acquisition of information. But apart from knowledge of the physical world, we have many other kinds of knowledge, relating to chemistry, the fine arts and other skills.
Vinayaka is the master of every kind of knowledge. Learning is related to the intellect (buddhi). It is not mere scholarship. Familiarity with books is not knowledge. One’s entire life is a continuous process of learning. Any process of inquiry is related to learning. But basically our inquiry should be concerned with finding out what is transient and what is permanent. This is true knowledge.
Hence, today, students worship Vinayaka with zeal. Vinayaka is not the one who merely comes to the aid of those who read their books. He helps everyone at every step in life’s journey.

Who is Vinayaka? In the verse (sloka) beginning with the words Suklaambara- dharam Vishnum, only the form of the deity is described. But there is another inner meaning for the name Vinayaka. Suklaambaradharam means one who is clad in white. Vishnum means he is all-pervading. Sasivarnam means his complexion is grey, like that of ash. Chathurbhujam means he has four arms. Prasannavadanam means he has always a pleasing mien. Sarvavighnopasaanthaye means for the removal of all obstacles. Dhyaayeth means meditate (on him). Vinayaka is the deity who removes all bad qualities, instills good qualities, and confers peace on the devotee who meditates on him.
However, the Vinayaka-principle has only one meaning, which is relevant to everyone regardless of whether he is a believer or a non-believer. Vinayaka means that he is totally master of himself. He has no master above him. He does not depend on anyone. He is also called Ganapathi. This term means he is the lord of the ganas –a class of divine entities. This term also means that he is the master of the intellect and discriminating power in man. He possesses great intelligence and knowledge. Such knowledge issues from a pure and sacred mind. This knowledge leads to wisdom (vijnaana). Because he is the master of intelligence (buddhi) and wisdom or realisation ( siddhi), he is described as the Lord of Buddhi and Siddhi. Buddhi and Siddhi are referred to as the consorts of Vinayka.
The mouse is the vehicle of Vinayaka. What is the inner significance of the mouse? The mouse is considered as the embodiment of the sense of smell. The mouse is a symbol of the attachment to worldly tendencies (vasanas). It is well known that if you want to catch a mouse, you place a strong-smelling edible inside the mouse-trap. The mouse also symbolises the darkness of night. The mouse can see well in the dark. As Vinayaka’s vehicle, the mouse signifies an object that leads man from darkness to light. Thus, the Vinayaka-principle means that which removes all the bad qualities, bad practices, and bad thoughts in men and inculcates good qualities, good conduct and good thoughts.
Another name for Vinayaka is Vighneswara. Easwara is one who is endowed with every conceivable form of wealth –riches, knowledge, health, bliss, beauty, etc. Vighneswara is the promoter of all these forms of wealth and removes all obstacles to their enjoyment. He confers all these forms of wealth on those who worship him. Vinayaka is described as “the first deity who should be worshipped (prathama vandana)”. Since everyone in the world desires wealth and prosperity, everyone offers the first place for worship to Vighneswara.

What is the meaning of the name Ganapathi? Where are the ganas? What is their form? When you investigate this, you find that the five organs of perception and the five organs of action (jnaanendriyas and karmendriyas) are the ganas. The mind is the master over these ten organs. The intellect (buddhi) is the discriminating faculty above the mind. The ten senses, the mind, and the intellect together constitute the ganas.
In the word gana, ga stands for intellect (buddhi) and na means Vaijnaana (the higher knowledge or wisdom). Ganapathi is the Lord of the intellect and higher knowledge. The question may be asked, Are the intellect and higher knowledge present in the external world, or are they to be found within man? The answer is that he is present within each human being. There is no need to seek for him in the outside world. Ganapathi dwells in every human being in the form of intellect and wisdom.
When Ganapathi is described as “Parvathee thanaya”, who is this Parvathee? Parvathee signifies Prithvi, Mother Earth. Everyone is a child of Mother Earth.
The meaning of “son of Parvathee (Parvatheethanaya)” is that Ganapathi, who is the Lord of the Ganas, is the son of Parvathee, who symbolizes the divine energy (sakthi).
The adoration of Parvathieeand Ganapathi is not of recent origin. Ganapathi is lauded at several places in the Rig Veda. This clearly shows that Ganapathi is as ancient as the Vedas.
In several places, Ganapathi is mentioned both in the Vedas and the Upanishads. Many prayers are addressed to Ganapathi in the Narayanopanishath. There are also prayers to him in the Thaithiriya Upanishads. The Ganapathi Gayathri Mantra also figures in the Upanishads.
Ganapathi is called Vinayaka because there is no master above him. He is all powerful and independent. Without recognizing the esoteric significance of the Vinayaka Principle, people look only at the external form and offer worship in mundane terms.
What is the inner significance of worshipping the elephant-faced deity? The elephant is a symbol of might and magnitude. The elephant’s foot is larger than that of any other animal. The elephant can make its way through the densest jungle. In this way, it signifies the quality of a leader who shows the way for others. The elephant is also known for its fidelity and gratitude. In any circumstance, it will not forget its master. Even in its last moments, if it hears the voice of its master, it will open its eyes and look for him. It will sacrifice its life for its master. These are the lessons man should learn from the elephant. Intelligence without gratitude is valueless. Every man should be grateful to those who have helped him.

courtesy: international sai organisation…..