“ஓம்” என்னும் பிரணவ மந்திரம் ……

SOURCE:::::: ARTICLE IN “DINAMALAR”….TAMIL DAILY….

Natarajan



ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

இலக்கண போலி தமிழ் !!!!!!

SOURCE::::::: HOW DO WE USE OUR MOTHER TONGUE IN DAY TO DAY CONVERSATION ???……A NICE AND HILARIOUS MAIL RECD FROM ONE OF MY CONTACTS EXPLAIN THE STATUS OF OF OUR HANDLING OF TAMIL …. LET US TRY TO LOOK BACK AND START LEAENING ATLEAST NOW!!!!.BETTER LATE THAN NEVER!!!!!!!!

Natarajan

போலி தமிழ்

போலி அரசியல்வாதி, போலி ஆன்மீகவாதி போல தமிழிலும் போலி இருக்கிறதா என யோசிப்பவர்களுக்கு, இது டுபாக்கூர் போலியோ அல்லது கடையில் விற்கும் போலியோ இல்லை. இது இலக்கணப்போலி. தமிழ் பாடத்தை கட் அடித்து சினிமாவுக்கு போகாமல் படித்து இன்னும் மறக்காமல் இருந்தால் ஞாபகத்தில் இருக்கும். எனக்கு தமிழ் இலக்கணத்தில் பசுமரத்தாணி போல் ஓரே ஒரு இலக்கணம் மறக்காமல் இருக்கிறது. காரணம் S.V.சேகர்.

அவரின் ஒரு நாடகத்தில்

ஆசிரியர் : “பல் உடைந்ததா ?” இது என்ன இலக்கணம் சொல்லு?

S,V,சேகர் : ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் சார்.

ஆசிரியர் : எப்படிடா கரெக்டா சொன்ன!

S.V.சேகர் : ஈறு கெட்டா தான பல் உடையும்.

( ‘ஆ’ -வில் முடியும் சொற்கள் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)

இது போல் காமெடியாக எந்த ஆசிரியரும் எனக்கு தமிழ் இலக்கண்ம் சொல்லித் தராததால் மற்ற இலக்கணங்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. இலக்கணப்போலி என்பது நாம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் சொற்கள். எழுத்துக்கள் மாறி இருக்கும். ஆனால் அர்த்தம் மாறாது. போலியில் முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி மற்றும் முற்றுப்போலி என நான்கு வகைகள் உள்ளன

உதாரணத்திற்கு.

ஐந்து – அஞ்சு

கால்வாய் – வாய்க்கால்

ஐம்பது – அம்பது

கோவில் – கோயில்

வைத்த – வச்ச

கற்றுத்தருவது ஒரு தெய்வீக கலை. எந்தப் பாடமாக இருந்தாலும் கணிதமோ, அறிவியலோ, மொழிப்பாடமோ ஆரம்பத்தில் நமக்கு கற்றுத்தரும் ஆசிரியர் தான் அந்தப்பாடத்தின் மீது ஒரு பிடிப்போ, வெறுப்போ வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இப்பொழுது புதிதாக வந்துள்ள பாடத்திட்டங்கள் வெறும் மனப்பாடம் மட்டும் செய்து பள்ளிக்காலத்தை ஓட்டாமல் கொஞ்சம் யோசிக்கவும் வைப்பது போல் தெரிகிறது. பெற்றோர்கள் வீட்டுப்பாடங்களை தாங்களே செய்து கொடுக்காமல் மாணவர்களை செய்யச் சொல்லி ஊக்கிவித்தால் நல்லது.

பள்ளிகளில் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைத்துக் கொண்டும், சினிமா படங்களின் தலைப்பில் (மட்டும்) தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தால் வருங்காலத்தில் தமிழின் நிலைமை தமிழனின் நிலை போல் பரிதாபமாக போய் விடும். முடிந்தவரை தமிழ்ப்பதிவர்கள் Labels மற்றும் Search Description-ல் தமிழ் வார்த்தைகள் சேருங்கள். கூகிள் தேடு பொறியில் தமிழில் தேடுங்கள்.

இப்பொழுது நாம் பேசும் தமிழில் எத்தனை போலிகள் உள்ளன என சந்தேகப்படுபவர்களுக்கு வடிவேலுவின் பதில்

நீங்க பிடுங்கிற எல்லாமே தேவையில்லாத ஆணி தான்.

படித்ததில் பிடித்தது …..மகாபாரத மார்கண்டேயன் …..

SOURCE:::::INPUT RECD. FROM ONE OF MY CONTACTS …AN ENTHUSIASTIC  READER AND WRITER …

Natarajan.
மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன்


குருக்ஷேத்திர போர்க்களம்- தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பாரதப் போரின் 13-ஆம் நாள்… கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்தான் அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அந்த வியூகத்தை எளிதில் உடைக்கும் வல்லமை பெற்றிருந்த அர்ஜுனன் அந்த நேரம்போர்க்களத்தின் மற்றொரு முனையில் சம்சப்தகர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

 

சரிபத்ம வியூகத்தை உடைக்கும் தைரியம் அபிமன்யுவுக்கு எப்படி வந்தது?சுபத்திரையின் கர்ப்பத்தில் அபிமன்யு குழந்தையாக இருந்த போதுயுத்த தர்மம் பற்றி தன் அண்ணன் ஸ்ரீகண்ணனிடம் கேட்டாள் சுபத்திரை. வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்துஎதிரியை வெல்லும் முறைகளை… குறிப்பாகபத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் கண்ணன். அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையை விவரித்துக் கொண்டிருந்தபோதுநடுவில் சிறிது நிறுத்தினான். உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல். அது கண்ணனுக்குத் தெரியும். அதனால்அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் கண்ணனுக்குத்தான் தெரியும்.

 

 

தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால்தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம்தான் அபிமன்யுவுக்கு தெரியும்வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால்அதில் இருந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டு வருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால்உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யுஒரு கட்டத்தில் அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. போர்க்களத்தில் ஜயத்ரதன் செய்த மாய வேலைகளே அதற்குக் காரணம்.

 

துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்புதேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப் பாகனைக் கொன்றது. சகுனியின் பாணம் அபிமன்யுவின் வில்லை முறித்தது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை தேரிலிருந்து கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம்அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. உடம்பெல்லாம் புண்ணாகி,குருதி ஒழுகநிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு. எனினும்அதர்ம யுத்தம் புரிந்த கௌரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கிஅபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். உடல் உருக்குலைந்தாலும்உறுதி குலையாத பொலிவோடு அபிமன்யு தரையில் சாய்ந்தான். இல்லை… அவன் சாகவில்லை! என்றும் பதினாறு வயது’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயன்போல இவனும் ஓர் இதிகாச நாயகன் ஆனான். சொர்க்கம் அவன் ஆன்மாவை வரவேற்றது.

 

களத்தில் மகன் இறந்தது தெரியாமல்தான் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் திரும்பிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வழியில்அவன் கண்ட காட்சி ஒன்று அவனைத் திடுக்கிட வைத்தது. அக்னியை வளர்த்துஅதற்குள் விழுந்து உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்தான் அந்தணன் ஒருவன். ஸ்ரீகண்ணனிடம் ரதத்தை நிறுத்தச் சொல்லிஅந்தணன் அக்னியில் விழா வண்ணம் தடுத்தான் அர்ஜுனன்.

ஐயாஎன் ஒரே மகன் இன்று போரில் உயிர் துறந்துவிட்டான். இனி நான் வாழ்ந்து என்ன பயன்என்னைச் சாக விடுங்கள்!” என்று கெஞ்சினான் அந்தணன். பெரியவரே! ஆத்மஹத்தி செய்வது எவ்வளவு பெரிய பாவம்! தங்கள் மகன் போரிலே இறந்தான் என்றால்அவன் வீர சொர்க்கமல்லவா அடைந்திருப்பான்! அதனை எண்ணிப் பெருமைப்படாமல் இப்படிக் கோழைபோல் தற்கொலைக்கு முயல்வது அறிவீனம் அல்லவா?” என்றான் அர்ஜுனன்.தத்துவம் சொல்வது எளிதய்யா! தங்களுக்கு இதுபோல் நேர்ந்தால்அப்போது தெரியும்” என்றான் அந்தணன். அதைக் கேட்டதும்அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டவனாக, ”என் மகனைப் போர்க் களத்திலே இழக்க நேரிட்டால்கூடதங்களைப் போல் கோழையாகத் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். என் மகனின் மரணத்துக்குக் காரணமான எதிரிகளுடன் போரிட்டுவென்று,அவர்களை அழித்துஅவன் ஆத்மா சாந்தி பெறச் செய்வேன். இது வெறும் வார்த்தையல்ல. நான் சொன்னதைச் செய்யும் க்ஷத்திரியன். சத்தியம் தவறாதவன். நான் சொல்வதைக் கேளுங்கள். தற்கொலை எண்ணத்தை விட்டுச் செல்லுங்கள்” என்று உறுதி குலையாத குரலில் பேசினான்.அந்தணனும் ஆறுதலடைந்து, ”என் மகனே நேரில் வந்து வேண்டுவதுபோல இருக்கிறதப்பா! என் உயிர் காத்த நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான்.


அர்ஜுனனின் ரதம் பாசறையை நோக்கி விரைந்தது. அன்றைய யுத்தம் என்னவாகியிருக்கும் என்று அர்ஜுனன் ஊகிக்கும் முன்பே
பாண்டவ வீரர்களில் சிலர் ஓடி வந்து கண்ணீரும் கம்பலையுமாக அபிமன்யுவின் மரணச் செய்தியைக் கூறினர். அதைக் கேட்டதும் அர்ஜுனன் சித்தம் கலங்கிவெட்டப்பட்ட மரம்போல தேரிலிருந்து சாய்ந்தான். அபிமன்யு! அபிமன்யு!” என வெறிபிடித்தவன் போல்தன் மகனின் சடலத்தைத் தேடி ஓடினான். அபிமன்யுவின் உடலின் மீது விழுந்து அழுது புலம்பினான். தன் அம்பறாத் துணியிலிருந்து அஸ்திரம் ஒன்றை உருவி எடுத்துஅதனைத் தன் மார்பிலே பாய்ச்சி மரணத்தைத் தழுவிமகனுடன் கலந்துவிட ஆயத்தமானான். அப்போது எதிரே நின்றான்சற்று நேரத்துக்கு முன் அர்ஜுனனால் காப்பாற்றப்பட்ட அந்த அந்தணன்.

ஓஹோ! க்ஷத்திரிய தர்மம் இவ்வளவுதானாஉபதேசமும் தத்துவமும் பிறருக்குத்தானா?கொடுத்த வாக்கைச் சில விநாடிகளுக்குள்ளேயே மீறுவது தர்மமா?” என்று நகைத்தான். அந்த அந்தணனின் சொல் அம்புகள் தைத்ததும்அர்ஜுனனின் கையிலிருந்து வில் அம்பு கீழே விழுந்தது.

 

தன் உயிரைக் காப்பதற்காகதன் தந்தையான இந்திரனையே அந்தணனாக உருக்கொண்டு வரச் செய்து இந்த நாடகத்தை ஸ்ரீகண்ணன்தான் நடத்தியிருக்கிறான் என்பதை அறியாத அர்ஜுனன் துயரம் தாங்காமல், ‘கிருஷ்ணா…’ என்று கதறிமயங்கினான்.

 

பின்னர்கண்ணனின் காக்கும் கரங்களின் ஸ்பரிசம் பட்டு அர்ஜுனன் மீண்டும் சுயநினைவு பெற்றான். என் மைந்தன் அபிமன்யுவின் மரணத்துக்குக் காரணமான சத்ருவை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் அழித்துவிடுகிறேன். தவறினால்இன்று அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கண்ணன் மீது ஆணை!” என்று சபதம் செய்தான்.

மகனின் மரணத்துக்கு ஜயத்ரதனே காரணம்பீமனும் மற்ற சகோதரர்களும் அபிமன்யுவுக்கு உதவியாக வர இயலாதவாறு தடுத்தது அவனே என்று தெரிந்ததும்அர்ஜுனன் முகத்தில் கோபாக்னி பொங்கியது. கிருஷ்ணா! ஜயத்ரதன் எங்கிருக்கிறானோஅங்கே தேரைச் செலுத்துஎன்றான்.

 

அர்ஜுனன் சபதம் கௌரவர்கள் காதுக்கு எட்டியது. சூர்யாஸ்தமனம் வரை ஜயத்ரதனை மறைத்து வைத்துக் காப்பாற்றிவிட்டால்அப்புறம் அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்வான்;குருக்ஷேத்திரப் போர் முடிந்துவிடும்பாண்டவர்களை இரண்டாவது வனவாசம் செய்யத் துரத்தி விடலாம்!’ என்று மனக்கோட்டை கட்டினான் துரியோதனன். எனவேஎவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான்.

கண்ணன் தேரைச் செலுத்திக் களைத்துவிட்டான். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். கதிரவன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தான். திடீரென மேல் வானில் இருள்சூழ ஆரம்பித்தது.

கதிரவன் மறைந்துவிட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது.

பாண்டவர்கள் பதறினர். கண்ணனின் பாதங்களில் விழுந்து கதறினர். என்னால் என்ன செய்ய முடியும்விதியின் வலிமை அப்படி!’ என்பது போல் மௌனம் சாதித்தான் கண்ணன். தன் சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான் அர்ஜுனன்.

 

அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காணஜயத்ரதனும் ஆவலோடு மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான். கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாகமலை முகட்டில் நின்றுகொண்டான்.

 

அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான்.அப்போது கண்ணன், ”அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்திநாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால்தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா!” என்றான். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது.

 

ஆம்உண்மையில் அப்போது அஸ்தமனம் ஆகவில்லைசூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான்கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன்.

பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும்இருளெனும் மாயை மறைந்துமேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது.

அர்ஜுனன் கண்களில்தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான்.அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! அவன் தலையைக் கொய்துவனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற முனிவனின் மடியில் விழச் செய்!” என்று ஆணையிட்டான் கண்ணன்.

 

கண்ணிமைக்கும் நேரத்தில்காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்துவிண்ணிலே தூக்கிச் சென்றுவனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணிமடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன்.

 

உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோஅவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும்’ என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது.

 

பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான்.

’18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்துசெயற்கரிய செயல்கள் புரிந்து சொர்க்கம் பெற விரும்பிவரம் பெற்று ஜனித்தவன் அபிமன்யு.

 

அவன் மரணத்தை வென்ற மாவீரன். மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன் அவன்!” என்று கூறிபாண்டவர்களைச் சமாதானப்படுத்தினான் கண்ணன்.

படித்ததில் பிடித்தது ….பக்தரை காக்கும் மகாபெரியவா ….

SOURCE:::: INPUT RECD. FROM ONE OF MY CONTACTS WHO IS A STAUNCH DEVOTEE OF KANCHI MUTT…

NATARAJAN.K

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ”எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். ‘காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்” என்றார் குரல் தழுதழுக்க.
”ஓஹோ… அப்படியா சொன்னார்..?” என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து… ”எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா… இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா… தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்” என்று கதறினார்.

பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க… நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ”இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!” என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பிக்ஷை தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பிக்ஷை யில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பிக்ஷை செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ”எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, ”’என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு… இப்ப ஏன் போகணும்கறே?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ”இல்லே பெரியவா… சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்…” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் ‘வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். ‘வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள். ”என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!” என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். ‘யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் ‘வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
‘பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே… பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன… சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
”பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்” எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ”சரிதான்… என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!” என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!

சராசரி மனிதனின் ஆதங்கம் ….. விடிவு எப்போது ?

SOURCE::::: REDERS VOICE IN DINAMALAR.. A TAMIL DAILY….

Natarajan

பொறுப்பே இல்லையே யாருக்கும்! கே.எஸ்.குமார், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: தமிழ்நாடு எக்ஸ்பிரசில், தீ விபத்து ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம், நெஞ்சை உலுக்கியது. வட மாநிலம் முழுவதும், இருளில் மூழ்கியது; “பவர் கிரிட்’டில் கோளாறு ஏற்பட்டது. ஆனால், “அமெரிக்காவை விட, நாம் மோசம் இல்லை’ என்கிறார் மந்திரி. சாலை விபத்தில், 25 யாத்திரிகர்கள் பலி. இது தான், விபத்துக்கான, “சீசன்’ போலும்; மற்றபடி தமிழகத்தில் சிறுமி ஸ்ருதி உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மற்றொரு சிறுமி பள்ளி பேருந்திலேயே, அடிபட்டு உயிரிழந்த கொடுமை, அசாமில் நடுத்தெருவிலேயே இளம்பெண் மானபங்கப்படுத்தப்படுகிறார்; படம் பிடித்து ஒளிபரப்பும் அவலம்! கோல்கட்டாவில் இளம் பெண்ணை மானபங்கப்படுத்தும் போது தடுத்த, தந்தைக்கு அடி, உதை. அந்தப் பெண், “அநாகரிகமாக உடை உடுத்தியது அந்த இளைஞர்களை தூண்டியது’ என்று, மம்தா கட்சி எம்.எல்.ஏ., திருவாய் மலர்ந்தார். மங்களூரில், பிறந்தநாள் பார்ட்டி நடந்த வீட்டின் உள்ளே புகுந்து, “இந்து புரட்சியாளர்கள்’ அங்கிருந்தவர்களை அடித்து துரத்துகின்றனர்; அதுவும், “லைவ்’ ரிலே!என்ன தான் நடக்கிறது இந்தியாவில்? நிர்வாகம் என்று ஒன்று செயல்படுகிறதா? பற்றாக்குறைக்கு, பாகிஸ்தான் டூ இந்தியா சுரங்கம் தோண்டி இருக்கின்றனர்! எல்லைக் காவல் லட்சணம், இது தானா? மேற்கண்ட அவலங்களுக்கெல்லாம், பொறுப்பில்லா தன்மை அனைத்து தரப்பிலும் மேலோங்கி இருப்பது தான் காரணம். அரசு வேலைக்கு ஆலாய் பறப்பவர்கள் நினைப்பதெல்லாம், எந்த பொறுப்பும் இன்றி, ஜாலியாக சம்பளம் வாங்கலாம் என்பதே; இது மிகவும் கசப்பான உண்மையே! என்ன தவறு செய்தாலும், நடவடிக்கை வராது என்ற தைரியம் தான். யாராவது, “முட்டாள்’தனமாக நடவடிக்கை எடுத்தால், ஜாதி, மத அரசியல் தொடர்புகள் முந்தி வந்து காப்பாற்றி விடும் என்ற நினைப்பும் தான் காரணம். இன்னும் எத்தனை அப்பாவி பொதுமக்கள், அருமை ஜவான்கள் உயிரிழப்புக்கு, பொறுப்பில்லாத்தனம் காரணமாக இருக்கப் போகிறதோ! அரசியல்வாதிகள், காவல் துறையினர் மட்டுமல்ல, பொதுமக்களும், உணர்ச்சிகள் மரத்துப் போய் உள்ளனர் என்பதே நிஜம்!

விடுமுறையில் மட்டும்…: ஜூலி வில்சன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்னா ஹசாரே ஓர் ஆண்டாக, “ஊழல் எதிர்ப்பு’ என்று போராடிய நாடகத்தின் உண்மை நோக்கம், அரசியல் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மக்களால் மட்டும் தான் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியும்; அரசாலும் முடியாது, அரசியல்வாதியாலும் முடியாது. மின் தடையை அரங்கேற்றியதும், இவர்களுக்காகத் தான் என்று பேசுவது, பக்கா அரசியல் லாபத்துக்காக. இவர்களின் போராட்டத்தை திசை திருப்ப, எட்டு மாநில மக்களையா கஷ்டப்படுத்துவர்? பேசாமல், வரும் லோக்சபா தேர்தலில் நின்று, மக்களின் ஆதரவை பெற்று பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை பதவி ஏற்று, ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கட்டும். அதை விடுத்து, அன்னாவின் உறவினரான அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்கால பதவி ஆசைக்காக, மக்கள் பணிக்குச் செல்லாமலும், மாணவர்களை கல்லூரிக்குச் செல்லாமல் தடுத்து, போராட்டத்திற்கு வருமாறு அழைத்து, அப்படி செய்தால் தான், ஊழல் இல்லா இந்தியா உருவாகும் என்கிறார். இப்படி செய்தால், படிப்பறிவில்லாத, பசி, பட்டினி, ஏழைகள் உடைய நாடாகத் தான், இந்தியா மாறும் என்பதை, அவர் உணர வேண்டும். அன்னா ஹசாரேவும், அவரது குழுவினரும், தங்களின் நாடகத்தை, விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தவும். அப்படி செய்தால், கூட்டம் கூடி, உங்களை பெருமை படுத்துவர்.

படித்ததில் பிடித்தது ….சிலேடை நயம் …

SOURCE::::INPUT RECD FROM ONE OF MY CONTACTS…NICE ONE… GREAT TO SHARE IT WITH YOU ALL…. PL READ AND ENJOY THE PUNNING OF WORDS…

Natarajan

திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும். அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.
“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்” என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.”
அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காம தகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன் தான். அவன் அனைவருக்கும் common(காமன்)” என்றார்.

விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது ;
“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்”

தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்’

தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.
கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?” என்று கேட்டார்கள். “ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்று உடன் பதிலளித்தார்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை – மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே “இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர். “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே” என்று அவர்கள் கேட்டதற்கு, டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து” என்றார்.

அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் பாடிய ஒரு புலவர் அவர்களை “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்“ என்று பாடினார். வரதுங்கப் பாண்டியனுக்கு ஒரே கோபம். அவர் சற்றே கருநிறம் படைத்தவர். அதனால் தான் அப்படிப் பாடினார் என எண்ணி கோபம் அடைந்தார்.
புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள்” அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்” என்று.

‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.
“காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்” என்று பாடினார்.
பாரதி என்பதை பார் அதி என்று பதம் பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படி செய்தார் பாரதி.

அறிஞர் அண்ணாவின் சொல்நயம் ஒன்று.
அவர் ஒரு மேடையில் அடுக்கு மொழியுடன் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருக்கும் பொழுது, கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று அண்ணாவிடம்: இதுபோல் ஆங்கிலத்தில் அடுக்கு மொழியில் உங்களால் பேசமுடியுமா எனக் கேட்டார். அதற்கு அண்ணாத்துரையவர்கள் கோபமாக யாரது இப்படிக் கேட்டது எனக் கேட்டார். கேள்வி கேட்டவர் பயத்துடன் எழுந்து நின்று ‘சொறி” என்றார்.
உடனே அண்ணாவும்: ஐ யாம் நாட் எ லொறி ரூ கரி யுவர் சொறி என்றார். I am not a lorry to carry your sorry.
கேட்டவர் உட்பட எல்லோரும் இதை நன்கு ரசித்தனர்.

கவிதை பயணம் தொடர்கிறது !!!!!!

மதியம் போல் வெண்மை  பொதிய மலை தம்ழின் தன்மை

விதி முறையால் சட்டினியும் சாம்பாரும் சார சுவை அளிக்கும்

அந்த இட்டிலுக்கு உண்டோ  இணை  !!!!!!!

 

நடராசன்

NANDRI MARANDHU VITTOM!!!!!!

Vanakkam…an interesting &at the sametime  A message with a clear Point to make,….  from my son senthil natarajan this morning… i am sharing with you with a request to share it inturn with your contacts pl.
Nandri..

Not in a literal sense, but we dont consider saying Nandri as polite and fashionable anymore… sayingThanks is considered more fashionable. Can we all start saying Nandri to start with…of all the people i shouldnt be saying this!!!!!… but I think we should start using simple Tamil words in our day to day life

This is what i have felt we should try and do
In the malls – speak to the staff in Tamil
Speak to relatives in Tamil not in English
Say Vanakkam and Nandri where and when possible