“LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள் ? “

1956 – நவம்பர் நுங்கம்பாக்கத்தில் பெரியவா முகாமிட்டிருந்தா. ஒரு நாள் ராத்திரி 10 மணிக்கு மவுண்ட் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்தார். 15 பேர் கூட சென்று 
கொண்டிருந்தோம். இந்து பத்திரிகை ஆபீஸ் விஜயம்.

LIC கட்டிடம் அருகே வந்த போது கண்ணன பெரியவாளிடம் இது தான் புதுசா வந்திருக்கிற LIC அடுக்குமாடி கட்டிடம் என்று பெரியவாளிடம் கூறினார். சற்று நின்ற பெரியாவா என்னிடம் இதுலே மொத்தம் எததனை மாடிகள் என்றார்.

நான் தவறாக சொல்லி விட கூடாதென்று “சரியாக தெரியாது ..” என்றேன். “எண்ணி பார்த்துவிட்டு வா ..” என்று கூறி விறு விறு என்று நடக்க ஆரம்பித்தார். 

நான் இரண்டு மூன்று முறை எண்ணி’பார்த்தேன். பாதி எண்ணும் போதே கணக்கு விட்டு போய் மீண்டும் எண்ணும் படி ஆயிற்று . ஒருமுறை 12ம் மறுமுறை 13ம் வந்தது. அதற்குள் பெரியவா வெலிங்டன் டாக்கிஸ வரை சென்று விட்டிரு நதார். நான் ஓடி சென்று மூச்சிறைக்க நின்றேன். “எண்ணிட்டையா ? எத்தனை ? ” என்று பெரியவா கேட்டா. கீழிருந்து 13. டேரசை சேர்த்தா 14. ஆனா மாடிகள் 12 தான் வரது என்றேன். பெரியவா சிரித்து கொண்டார்.

“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …? :” என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டது. “நான் எண்ணி பார்க்கலே..” என்றேன். :”அப்புறம் போய் பாரு …” என்று நடந்தபடி கூறினார். கண்ணன் என்னை பார்த்து சிரித்தார் .

நான் சற்று பின் தங்கினேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். 

மேலட்டையில் பிரசுரமாயிருந்த அந்த நகைச்சுவையைப் படித்தவர்கள் சிரிப்பு வந்திருந்தால் சிரித்து விட்டுப்பத்திரிகையை புரட்டியிருப்பார்கள். சிரிப்பு வராதவர்கள் சிரிக்காமலேயே புரட்டியிருப்பார்கள். 

எத்தனை பேர் ” அந்த கட்டிடத்தில் எத்தனை மாடிகள் வரைய பட்டிருக்கின்றன” என்று பொறுமையாக எண்ணி பார்த்திருக்க போகிறார்கள்.. ? பிறரை சொல்வானேன்? நானே பார்க்கவில்லை. (அந்த ஜோக் என்னுடையது. படம் கோபுலு வரைநதது ).

எதையும் ஆராயந்து நோக்கும் பெரியவாளின் அபூர்வ சக்தி அதிசயிக்கக்தக்கது என்றால் அவரது நகைச்சுவை யுணர்வு மிகவும் ரசிக்கதக்கதாக இருக்கும்.

(From the experiences of Sri Baraneedharan, acclaimed tamil author)
source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/4707/lic/#ixzz2Yf3g3AUm

Leave a comment