“உடைப்போம் தடை கற்களை …படைப்போம் ஒரு புது சரித்திரம் !!!”

தண்ணீர் விட்டா  வளர்த்தோம் நம் சுதந்திர  செடியை ?  …. செந்நீரும்

க ண்ணீரும்  விட்டு   பெற்றதல்லவா  நம் சுதந்திரக்   கொடி  !!!…..அது

என்ன  மாயமா  மந்திரமா  !!!  இல்லையே  !!!   கேட்க முடியுமா  நம்

முன்னோரிடம்  நாம்  ….கொடியின்  விலை என்னவென்று  !!!

விலை  மதிப்பில்லா  சுதந்திர  காற்று சுவாசிக்கும் நாம்  ஒரு

விலை  வைத்து விட்டோமே குடிக்கும் தண்ணீருக்கும்  குழந்தை

படிக்கும்  பள்ளிக்கும் !!!!

விலை இல்லா  இலவச பொருள்  கொடுத்து நமக்கும் ஒரு விலை

உண்டு என்று  சொல்லாமல் சொல்லி விட்டார்களே  , எல்லா

கட்சி  அன்பர்களும் !!!!

விலை மதிப்பில்லா  நேர்மைக்கு  சோதனை நேரம் இது !!!… நம் சுதந்திர

பாரத  இறையாண்மைக்கே  உலை  வைக்க  துடிக்கிறதே   ஒரு கூட்டம் !!!!

நிலைமை  பார்த்து  மலைத்து  துவள  வேண்டாம்  நாம் !!!

நினைத்து  பார்க்க வேண்டும்  நாம் , நம் முன்னோர் பட்ட  கஷ்டம்

நஷ்டம்  எல்லாம் ….

நாம்  சுவாசிக்கும்  இந்த சுதந்திர காற்று   நம் முன்னோர்  நமக்கு

விட்டு சென்ற   விலை மதிப்பில்லா  சொத்து !!!!

சோதனை  பல  இருந்தாலும்    சாதனை  படைக்க   காத்திருக்கும்

நம்  இளைய  தலை முறைக்கு  நாம்  செய்ய வேண்டியது  ஒன்றே  ஒன்று !!!!

நமக்கு  கிடைத்த  சொத்து  சுதந்திர  பாரதம் …..நன்று  நன்று !!!!

நாம் இனி   நமது குழந்தைக்கு   கொடுக்க  வேண்டியது

ஒரு வளமான  வலிமையான  தன்னிறைவு சுதந்திர  பாரதம் !!!!!

எ தற்கும்  ஒரு விலை உண்டு என்னும்  நிலை மாற்றிட

நாம்  எடுக்க வேண்டும் ஒரு  உறுதிப்பாடு இன்று …..

“உடைப்போம்  தடைக்கற்களை …. படைப்போம்  ஒரு

புது  சரித்திரம் !!!

மலர  வேண்டும்  புது  பாரதம் …  வளர  வேண்டும் அது  வலிமையுடன்

நம்  குழந்தைகள்  கையில் !!! ”

நடராஜன் …..AUG 15 2013

chennai

One thought on ““உடைப்போம் தடை கற்களை …படைப்போம் ஒரு புது சரித்திரம் !!!”

  1. Preethi's avatar Preethi August 18, 2013 / 11:20 am

    very inspiring!

Leave a reply to Preethi Cancel reply