படித்ததில் பிடித்தது !!!….” No Cheque , only Cash !!!”

சினிமா தயாரிப்பாளர், காலம் சென்ற சாண்டோ சின்னப்ப தேவர், 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்:
நான், சொந்தப்படம் தயாரிக்க சினிமாக் கம்பெனி துவங்கினேன். நடிகர், நடிகைகளுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க, “காசோலை’ தர வேண்டும். அதுநாள் வரை, எனக்கு வங்கியில் அக்கவுன்ட் கிடையாது. அதனால், புதிதாக, என் பெயரில் ஒரு கணக்கு ஆரம்பித்து, கணிசமான ஒரு தொகையையும் போட்டு வைத்தேன். காசோலை புத்தகம் கொடுத்தனர்; வாங்கி வந்தேன்.
ஒரு வாரம் கழித்து, எனக்கு பணம் தேவைப்பட்டது. என் பெயருக்கு, காசோலையில் எழுதி கொண்டு வங்கிக்கு சென்றேன். ஆனால், என் கையெழுத்து சரியாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போய் படிக்காதவன். என் பெயரை எப்படி எழுதுவது என்று, மற்றவர்கள் சொல்லிக் கொடுத்து தான் கையெழுத்து போட்டு வந்தேன். என் கையெழுத்தையும், என் உருவத்தையும் பார்த்து சந்தேகித்த அவர்கள், என்னை ஒரு ஓரமாக உட்கார சொல்லி, போலீசுக்கு போன் செய்து விட்டனர்.
போலீஸ் வந்து என்னை விசாரித்தது…
“நான் தான் சின்னப்பா. சினிமாவில் நடித்திருக்கிறேன்…’ என்று சொல்லியும், அவர்கள் நம்பாமல் மிரட்டினர். பின், எனக்கு தெரிந்தவர் களின் நம்பருக்கு போன் செய்து, அவர்கள் என்னைப் பற்றி சொன்ன பின் தான் விட்டனர். நம் பணத்தையும் போட்டு விட்டு, இந்த அவமரியாதையா… என்று, கோபம் வந்துவிட்டது. கணக்கை முடித்து, முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
இதுவரை, எத்தனையோ படங்கள் தயாரித்து விட்டேன். இந்திப் படங்களும் தயாரிக் கிறேன். ஆனால், யாருக்கும், காசோலை கொடுப்பதில்லை. நேரடி சம்பளம் தான். எனக்கு, வங்கியில் அக்கவுன்ட் இன்று வரை கிடையாது… என்று, கூறியுள்ளார் சின்னப்ப தேவர்.

source :::::Dinamalar ….Sunday Supplement

natarajan

 

Leave a comment