சென்னை டா! …. இது நம்ம சென்னை டா!!!!

chennai day

கி.பி. 1639 ல் இதே ஆகஸ்டு 22 ஆம் நாள் தான் பிரான்சிஸ் டே  மதராஸபட்டினத்தை விஜயநகர மன்னரின் ஆளுகையின் கீழிருந்த வந்தவாசி பகுதியின் பிரதிநிதி  தாமர்ல வேங்கடபதியிடம் இருந்து சொற்பத்  தொகைக்கு விலைக்கு வாங்கினார். சென்னைப்பட்டினம் விலைக்கு வாங்கப் பட்ட அந்த நாளை  ஒட்டி  அடிப்படையில் சென்னைவாசியான பத்திரிகையாளர் வின்சென்ட் டிசோசா மற்றும் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா இருவரது முயற்சியால் ‘சென்னை ஹெரிடேஜ் பவுண்டேஷன்’ மூலமாக 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 ஆம் நாள் ’சென்னை டே’ வாக அறிவிக்கப் பட்டு ஒவ்வொரு வருடமும் ’சென்னை டே’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் சென்னை மக்கள் ‘சென்னை டே’ வைத் தங்களுக்குப் பிடித்தமான விதவிதமான வகைகளில் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். சென்னைக்குள் கொண்டாட சென்னையைக் கொண்டாட விஷயங்களா இல்லை?! ஒன்றா இரண்டா நினைத்து நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்!

50 களின் பழைய ஓரணா நாணயங்கள் முதல் 60 களின் கிராமஃபோன் ரிகார்டுகள், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் சென்னை கார்ப்பரேஷன் ரிப்பன் மாளிகை, இன்றும் பழமை விரும்பிகளின் புராதன சேகரிப்பில் பெருமிதம் காட்டும் கிரஹாம்பெல் காலத்திய கையால் சுழற்றப்படும் டயல் டெலிபோன்கள், காசிமேட்டின் கட்டுமரங்கள்,மோட்டார் போட்டுகள், சென்னை வாழ் மக்களின் சந்தோசம், துக்கம், வருத்தம், கொண்டாட்டம் அனைத்துக்கும் தோன்றாத்துணை நிற்கும் ஈடு இணையற்ற மெரினா பீச், சற்று முரட்டுத்தனமாக தோற்றமிருப்பினும் பெரும்பாலும் நட்பு முகம் காட்டும்  சென்னை ஆட்டோக்காரர்கள், ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் சென்னைத் தெருக்களை நிரப்பி அவசர அவசரமாக சைக்கிளிலிருந்தவாறு  செய்தித்தாள்களை விசிறியடித்துச் செல்லும் பேப்பர் பையன்கள், சரவண பவன் சாம்பர் இட்லி, நெய் ரோஸ்ட்,  கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர் பாகு அடடா  சொல்லித் தீராது இன்னுமிருக்கிறது!

மக்கள் கூடும் இடமெங்கும் குளுமையாய்  கடை விரிக்கும்  இளநீர் வியாபாரிகள், சுடச் சுட ஃபில்டர் காப்பி, இனிக்க இனிக்க கரும்பு ஜூஸ், நினைவுகளை கிளறிச் செல்லும் அண்ணா மேம்பாலம், ஜெமினி மேம்பாலம், சதா காதோடு உரசியவறு கதை பேசிக் கடக்கும் எலக்ட்ரிக் டிரெயின் சகட ஓசைகள், அத்தனைக்கும் அப்பால் என்றென்றைக்கும் சென்னைக்கு அதன் உயிர்ப்பான வண்ணம் அளிக்கத் தயங்காத குடிசை மாற்று வாரிய பகுதிகளின் குஷியான குழந்தைப் பட்டாளங்கள்.

இன்னும்…இன்னும் இன்னுமிருக்கிறதே சொல்ல… சென்னைச் சாலைகளின் மீன்பாடி வண்டிகள், இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் இருந்தும் இங்கே பிழைப்பிற்காக வந்தாலும் தமது மரபை விடாது தினுசு தினுசாக தலைப்பாகை கட்டிய பல இனத்து இளையவர்கள், முதியவர்கள், எப்போதும் ஜனங்களின் சல சலப்பில் திருவிழா மூடில் கல கலக்கும் தி.நகர் ரங்கநாதன் தெரு, வெளிநாட்டினரும் வந்து கைகளால் பிசைந்து அள்ளி உண்வருந்த விரும்பும் திருவல்லிகேணி காசி விநாயகா மெஸ், பூ கட்டும் வித்தை கற்க விரும்பும் மயிலை கபாலி கோயில், இன்றைக்கு இடிக்கப்பட்டு விட்டாலும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக எப்போதும் மக்களின் மனதில் மறவாது இடம் பிடிக்கும் கடற்கரை சீரணி அரங்கம். எல்.ஐ.சி கட்டிடம், சாந்தோம் சர்ச்… கடவுளே!

லிஸ்ட் இன்னும் முடிந்தபாடில்லை சென்னை என்றதும் பழமையும் புதுமையாக நம் மனம் நிறைக்கும் ஞாபகங்கள் தான் எத்தனை எத்தனை?! சென்னை வாழ் மக்களுக்கும் சரி இங்கே வந்து செல்லும் அயல் மாநிலத்து  அல்லது அயல் நாட்டு விருந்தினர்களுக்கும் சரி சென்னை எப்போதும்  தன் கலாச்சார அடையாளங்களை இழக்க விரும்பாத அதே சமயம் புதுமைகளையும் பெருமிதத்தோடு  அரவணைத்துக் கொள்ளும் நவ நாகரீக யுவதியாகவே காட்சியளிக்கிறது. இந்த நகரத்துக்குள் ஒரு முறையேனும்  வந்து போன ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளன்போடு கூடிய தோழமையை, இதுவும் எனது சொந்த வீடென எண்ணிக் கொள்ளும் நெருக்கத்தை இந்த நகரம் தன் இரு கரங்களிலும் அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது என்பதற்கு நீடித்த சாட்சியங்களாக நிற்பவை தான் மேலே சொல்லப்பட்ட அத்தனை அடையாளங்களும். அதனால் மட்டுமே கடும் போக்குவரத்து நெரிசல், சுழற்றி அடித்த சுனாமி, மீட்டெடுக்க முடியாத மழைக்கால கோர இழப்புகள் போன்ற சென்னையின் சில விரும்பத் தகாத அம்சங்களையும் கூட மக்கள் சகித்துக் கொள்ளப் பழகி விட்டனர். அந்தக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படுமானால் சென்னை எப்போதும் சிங்காரச் சென்னை தான். கபாலி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் “இது சென்னை டா! நம்ம சென்னை டா” .

சென்னையின் பல்வேறு வண்ணம் காண  கீழே உள்ள வீடியோ இணைப்புகளை கிளிக்குங்கள்…

சர்ஃப் எக்ஸெல் விளம்பரத்தில் வரும் பாட்டி சொல்வது போல குளிக்க, துவைக்க, சாப்பிட, சுத்தம் செய்ய என  எல்லா வேலைகளுக்கும் இந்தியர்களான  நாம் நமது கைகளையே பயன்படுத்துகிறோம், இது வெளிநாட்டினருக்கு எப்போதும் ஆச்சர்யம் தரும் விசயம். கீழே உள்ள வீடியோ இணைப்பில் சென்னை டே வை முன்னிட்டு திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ்ஸில்  வெளிநாட்டுக் குடும்பம் ஒன்று நமது இந்தியச் சாப்பாட்டை கைகளால்  பிசைந்து ரசித்து ருசித்து உண்பதைப் பாருங்கள்.

மயிலை கபாலி கோயிலில் பூ கட்ட கற்றுக் கொள்ளும் வெளிநாட்டுப் பெண்.

 

Source….By கார்த்திகா வாசுதேவன்  in  www.dinamani.com

Natarajan

Advertisements

Madras …then and now….

Change has always been beautiful and always will be. You go down the memory lane while seeing the old photos and reminiscing the time that passed by. And it may be anything – school friends, best friend or your hometown. Can you imagine how much of an impact it would create if the photos were merged into one and you couldn’t help but notice the stark difference and revel in that moment?

This Indian photographer, Raunaq Mangottil, has clicked photographs of Chennai. And these are not just photographs that hold aesthetic value, but it makes you realise the change that city has undergone over the years. When you look at it, you would realise that so many things have changed but even then, some things haven’t.

1. Statue of Thomas Munro, Park Town

 

Then: Thomas Munro, an official of East India Company who came to Chennai in 1789 and was responsible for Ryotwari system. After he died, his statue was made here.

Now: One of the blissful places of Chennai now. Free from traffic, this area is now taken care of by the military.

 

2. The Hindu Office

Then: The balcony of this office was used to keep a check on the test match scores, as can be seen in the picture.

Now: The never ending traffic has put an end to that.

 

3. Spencer Plaza Signal, Mount Road

M 3

Then: Bullock carts were a common sight then and the Kashmir Art Palace, the Old Curiosity Shop, and Agurchand Mansion leading to the LIC Building is quite evident.

Now: Only frustrating one-ways.

 

4. Corporation Of Madras

M 4

Then: This was constructed in a Neoclassical style and stands to be one of the finest structures of Chennai.

Now: Passers-by are not allowed  and is now shielded by Metro Construction blue sheets.

 

5. Higginbotham’s & Poompuhar

M 5

 

Then: This one was for all book lovers. This was India’s then largest bookstore. The building next to Higginbotham’s is Poompuhar, the popular textile shop.

Now: Though the bookstore is there even now, you’re most likely to be pulled over by the cops because of parking problems. It has a brilliant English-language selection, including Lonely Planet books, and a good range of maps now.

 

6. Casino Theater

M 6

Then: Mount Road was a cart track leading from Fort St.George to St.Thomas Town, as well as functioning as a heavenly treat for film buffs.

Now: Unfortunately, a terribly managed and a lost landmark now.

7. Chennai Central

M 7

Then: This station was relatively a calm place. People used cycles for commuting other than the much acclaimed Ambassador cars then.

Now: It is filled with the ever increasing population, but it stands majestic even now.

 

8. Egmore Station

M 8

Then: Madras Egmore was previously called the Egmore Redoubt, a place to store ammunition for the Britishers.

Now: Still retains its old charm, but with an added advantage of CCTV Cameras and round-the-clock security.

 

9. Rajaji Salai

M 9

Then: This was one of the main commercial centers of Chennai. Walking on this road used to be a pure bliss.

Now:  Traffic runs incessantly between SBI Buildings and Burma Bazaar now.

See, he hasn’t just rummaged through the internet for old pictures. It is a brilliant collection which is guaranteed to make you go nostalgic.

News Source: I am Madras

 

Source….Aparajta Mishra….www.storypick.com

Natarajan

 

 

” சொன்னது நீதானா …விசுவே …” !!!

மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

Source….www.tamil.thehindu.com
Natarajan

” விஸ்வ நாதம் ….” ஒரு முடிவு இல்லை அவரது இசைக்கு …”

தலைமுறைகளைத் தாண்டி நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞர் எம்.எஸ்.வி.

தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தைக் கண்ணதா சனுடன் இணைந்து ஆட்சிசெய்த மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காலமானார் என்ற தகவல் வந்தததும், சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவியத் தொடங்கின. தங்களுக்குப் பிடித்தமான எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பலரும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். தலைமுறைகளையும் காலத்தின் வீச்சையும் கடந்து அவரது படைப்புகள் நிலைபெற்றிருப்பதை உணர முடிந்தது. 1950-களின் தொடக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சியவர் எம்.எஸ்.வி. உண்மையில், பழைய பாடல்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கியிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரது ஆயிரக் கணக்கான பாடல்கள்தானே!

தொடக்கத்தில் நாடகங்களின் திரைவடிவமாக இருந்த தமிழ்த் திரைப்படங்களில் நிரம்பித் ததும்பிய பாடல்கள், சாஸ்திரிய இசையின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருந்தன. 1950-களில்தான் ஜனரஞ்சகமான இசையில் அமைந்த பாடல்களுக்கு தமிழ்த் திரையிசையில் இடம் கிடைக்கத் தொடங்கியது. காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புதுப்புது திறமைசாலிகளைத் தன் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படி, 1950-களில் தமிழ்த் திரையிசையின் போக்கை மாற்றியமைத்த இசைக் கலைஞராகக் காலத்தால் முன்னிறுத்தப்பட்டவர் எம்.எஸ்.வி. 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ படத்தின் மூலம் திருப்புமுனையைக் கண்ட எம்.ஜி.ஆர்., 1952-ல் வெளியான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ்த் திரையின் வணிக வளர்ச்சிக்கும் தரத்துக்கும் தந்த பங்களிப்பைப் போல், தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியில் எம்.எஸ்.வி-யின் பங்கு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே காலகட்டத்தில்தான், அவரது ஆஸ்தான பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், பி.சுசீலாவின் சகாப்தமும் தொடங்குகிறது.

அறுபதுகளின் அரசன்!

சக இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் வழங்கத் தொடங்கிய பாடல்கள் பல தலைமுறைகளின் வாழ்வுடன் கலந்துவிட்டவை. 1950-களில் ‘பணம்’, ‘ஜெனோவா’, ‘குலேபகாவலி’, ‘மாலையிட்ட மங்கை’ போன்ற படங்களின் மூலம் சாம்ராஜ்ஜியத்தை விரிக்கத் தொடங்கிய ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி’ ஜோடியின் இசை, 1960-களில் தனது படைப்பாற்றலின் உச்சத்தை அடைந்தது. பின்னாட்களில் டி.கே. ராமமூர்த்தியைப் பிரியும் சூழல் ஏற்பட்டாலும் அவரது பாடல்களின் வெற்றி பாதிக்கப்படவில்லை. டி.எம்.எஸ். பாடிய ‘யார் அந்த நிலவு’ (சாந்தி-1965), பி. சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’(புதிய பறவை) என்று மேற்கத்திய இசையின் அடிப்படையிலான பாடல்கள், ‘ஆறோடும் மண்ணில் எங்கும்’(பழனி-1965) என்று கிராமியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள், ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன்), ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன்) போன்ற சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்கள் என்று அத்தனை வகைப் பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல், சவால் என்று எத்தனையோ வகையான சூழல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு இசை வளமும், படைப்பாற்றலும், வேகமும் அவருக்குள் சுரந்துகொண்டே இருந்தன.

அவரது சமகாலத்தில் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், வி. குமார் என்று புகழ்பெற்ற இசையமைப் பாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் பெருவாரியான படங்கள் எம்.எஸ்.வி-யிடமே குவிந்தன. ‘மன்னாதி மன்னன்’, ‘பாசமலர்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ராமு’, ‘தெய்வ மகன்’ என்று அந்தக் காலகட்டத்தில் அவர் இசையமைத்த வெற்றிப்படங் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. தனது வாழ்நாளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அவர். சிவாஜி படங்களுக்கு உணர்ச்சிகரமான இசை, எம்.ஜி.ஆர். படங்களுக்கு உற்சாகமான சவால் இசை, பீம்சிங், தர், பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்குப் பரீட்சார்த்த மான இசை என்று அவர் தொடாத இசை வகைமையே இல்லை. பாலியல் பலாத்காரக் காட்சிக்குக் கூடத் தன்னிடம் பாடல் கேட்ட கே. பாலசந்தரின் சவாலையும் ஏற்றுப் பாடல் தந்தவர் அவர்.

தாக்கம் தந்த இசை

எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடக்கும் இடங்கள், திருவிழாக்கள் முதல் துக்க வீடுகள் வரை என்று பல்வேறு இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் எம்.எஸ்.வி-யினுடையவைதான். அந்த அளவுக்கு அவரது பாடல்களின் தாக்கம், தலைமுறைகளையும் தாண்டி இன்றும் வியாபித்திருக்கிறது. அதேபோல், இசையமைப்பின்போது தனக்கு யோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அபூர்வ குணம் அவரிடம் இருந்தது. திரையிசையில் ஜனரஞ்சக ரசனையைப் புரிந்துகொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் அது அவருக்கு உதவியது. அவரது இசையால் தாக்கம் பெற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவரது ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளையராஜா பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடலின் தாக்கத்திலேயே ‘புது மாப்பிள்ளைக்கு’ பாடலை உருவாக்கியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். பாடகர் வாய்ப்புக்கான குரல் தேர்வின்போது எஸ்.பி.பி. பாடிக்காட்டியது எம்.எஸ்.வி-யின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைத்தான். எம்.எஸ்.வி-யின் ‘யார் அந்த நிலவு’ பாடல், இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் ‘யாத் ஆ ரஹி ஹை’ பாடலின் மூலம். இன்றும் பாடகர் களுக்கான போட்டிகளில் அதிகம் பாடப் படுபவை அவருடைய பாடல்கள்தான்.

1970-களின் மத்தியில் காலமாற்றத்தின் தாக்கத்தில் அவரது இசையும் வேறு பரிமாணம் எடுத்தது. 1960-களில் டி.எம்.எஸ்., பி. சுசீலா போன்ற கலைஞர் களின் கூட்டணியுடன் பாடல்களைத் தந்துவந்த எம்.எஸ்.வி., 70-களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து அளித்த பாடல்கள் தனிரகம். ‘அவர்கள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பட்டினப் பிரவேசம்’ போன்ற படங்களில் இந்த ஜோடியின் பாடல்கள் ரசிகர்களின் சேமிப்புகளில் உயர்ந்த இடத்தை வகிப்பவை. ‘முத்தான முத்தல்லவோ’(1976) படத்தில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து எம்.எஸ்.வி. பாடும் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடல் இசை மீதான அவரது காதலைச் சொல்லிவிடும். ‘தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்’ எனும் வரியில் எம்.எஸ்.வி. குறிப்பிடும் ‘அவள்’ யாருமல்ல, இசை தேவதை தான்!

தனது ஆன்மாவை இசையின் மூலமாகக் காற்றில் கலக்கவிட்டிருக்கும் எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

சம்ஸ்கிருதத்தில்விஸ்வம்’ என்றால், பிரபஞ்சம் என்று பொருள்

Source….www.tamil.the hindu.com

Natarajan

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ் !!!

நினைவில் உறைந்திருக்கும் சென்னையின் தோற்றம் மாறினாலும் அதன் மனசு மாறிவிடவில்லை.

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

நினைவின் சொர்க்கம்

பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி’ என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

மாறிப்போன முகம்

இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது’ என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

மாறாத மனசு!

பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

– நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

Source::::The Hindu….Tamil
Natarajan

” நாகேஷை நடிகராக்கிய நாடக நடிகர் ….” !!!

 

கிருஷ்ணா ராவ் – ருக்மணி அம்மாளின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் நாகேஷ். அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடி, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால், சினிமா வில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் நடித்தபோதிலும் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி முதல் மாணவராக இருந்தார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும்போது அம்மை நோய் தாக்கியதில் முகம் முழுக்கத் தழும்புகள் ஏற்பட்டதில் ரொம்பவே கலங்கிப்போய்விட்டார். உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஐதராபாத்துக்குச் சென்று பல வித வேலைகளைச் செய்தார். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த அப்பாவின் ஆலோசனைப்படி ரயில்வே தேர்வு எழுதி சென்னை மண்டலத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார்.

மேற்கு மாம்பலத்தில் தங்கியிருந்த அவருக்குக் கவிஞர் வாலி (அப்போது வாலி அல்ல, ரங்கராஜன். சினிமாவுக்குப் பாட்டெழுதத் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்), ‘தங்கப் பதக்கம்’ ஸ்ரீகாந்த், பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான தாராபுரம் சுந்தர்ராஜன் ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு சினிமா வாசனை பக்கத்தில் அடித்துக்கொண்டிருந்தபோதும் நாகேஷின் மனம் சினிமாவை நாடவில்லை. அப்படி நாட வைத்தது ஒரு பிழை செய்த பேறு.

அவர் குடியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருந்த தேவி பாடசாலையில் நாடக கோஷ்டிகள் அடிக்கடி ஒத்திகை நடத்துவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் நாகேஷ். அப்படி ஒருநாள் போகும்போது ஒரு நடிகர் கம்ப ராமாயணத்தில் வரும் குகன் படலப் பாடலைத் தப்புத்தப்பாய்ப் பாடியிருக்கிறார். சின்ன வயது முதல் சிறு பிசகுமில்லாமல் மனப்பாடம் செய்துவைத்திருந்த கவிச்சக்ரவர்த்தி கம்பனின் பாடலை ஒரு நடிகன் கொடூரமாகக் கொலை செய்வதை அவரால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. திடகாத்திர மான அந்த நடிகரைத் திருத்த முயன்ற நாகேஷ், அவர் முன் போய் நின்றார்.

“சார்! தப்பா நெனைக்காதீங்க. இஷ்டப்பட்டு கம்பன் எழுதின பாட்டை நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு தப்புத்தப்பா பாடறீங்க. நான் வேணும்னா அந்த வரிகளை தெளிவா எழுதித் தரட்டுமா?’’ என்று நாகேஷ் கேட்டதும் ஆத்திரம் அடைந்துவிட்டார் அந்த நடிகர். “யாருய்யா கண்டவனை எல்லாம் உள்ளே விட்டது?’’ என்று கம்பெனி ஆட்களைப் பார்த்து சத்தம்போட்டுவிட்டு, நாகேஷை மிக நெருங்கி வந்து, “நடிப்புனா என்னன்னு தெரியுமா? ஒம்மூஞ்சிக்கெல்லாம் நடிப்பு வருமா? இப்போதைக்கு உன்னோட மொகத்துல மட்டும்தான் தழும்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தீன்னா ஒடம்பு முழுக்க தழும்பாயிடும்’’ என்று எச்சரித்ததைப் பார்த்து நாகேஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் நாகேஷ். மறுநாள் அலுவலகத்தில், நாடகம் நடத்தும் மாராவிடம் வாய்ப்பு கேட்டார். முதலில் ஏளனமாகப் பார்த்து மறுத்தவர், நாகேஷின் தொடர் கெஞ்சலால் சம்மதித்தார். வயிற்று வலிக்காரன் வேடம்.

முதலில் மேடையில் தோன்றிய நாகேஷ், ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையை, வயிற்றைப் பிடித்தபடி பல மாடுலேஷன்களில் பேச, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., வயிற்று வலிக்காரனாக நடித்தவரின் பெயரென்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டு நாகேஷுக்குப் பரிசுக் கோப்பை வழங்கினார். பிறகு சினிமா அவரை அரவணைத்துக்கொண்டது. நகைச்சுவை வேடம், குணசித்திர வேடம் எனப் பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்த அவர், நாயகனாகவும் கலக்கினார். ‘அதிர்ஷ்டக்காரன்’ படத்தில் இளம் நாயகி படாபட் ஜெயலட்சுமிக்கும் முன்னணிக் கதாநாயகியாக இருந்த கே.ஆர். விஜயாவுக்கும் ஜோடியானார்.

எடுத்துக்கொண்ட வேடம் எதுவானாலும் அதில் பட்டையைக் கிளப்பிய அந்த மாபெரும் கலைஞன் திரையுலகில் நுழையக் காரணமாக அமைந்த அந்த நாடக நடிகருக்குத்தான் தமிழ் சினிமா நன்றி சொல்ல வேண்டும்.

source::::The Hindu….Tamil
natarajan

” டைரக்டர் தான் கேப்டன் ஆப் தி ஷிப் “!!! ….சிவாஜியுடன் ஒரு நாள் !!!

மூச்சுக் காற்றின் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது அந்தப் படப்பிடிப்பு அரங்கம். காரணம் சிவாஜி..!

‘என் ஆச ராசாவே’ படத்தில் நாட்டுப்புறக் கலைஞரின் வேடம் என்பதால் ஆசை ஆசையாக சிவாஜி ஒப்புக்கொண்டிருந்தார் என்று செய்தி பரவியிருக்க, சிவாஜி இருக்கும் படப்பிடிப்புத் தளம் பற்றி கட்டுரை எழுதலாம் என்ற ஆசையில் போயிருந்தேன்.

ரகசியம் பேசும் குரலில் டைரக்டர் கஸ்தூரி ராஜா, “லஞ்சுக்குப் பிறகு பேட்டியை வெச்சுக்குவோம். சிவாஜி ஐயா புறப்பட்டு போயிருவார். அதுவரைக்கும் வேடிக்கை பாருங்க” என்று சொல்லிவிட்டார். “சரி… ஆனா, ஷூட்டிங் நடக்கறதை போட்டோ எடுத்துக்கறோம். ப்ளாஷ் வராது. உங்களுக்கு தொந்தரவு இருக்காது” என்று சொல்லிவிட்டுப் புகைப்படக்காரருக்குச் சைகை காட்டினேன். அவர் கேமராமேனுக்கு அருகில் போய் பதுங்கி உட்கார்ந்துகொண்டார்.

ரோஜா தன் முறை மாமனான முரளியைத் தேடி வந்து தடால் புடால் என்று சண்டை போட, அதை சிவாஜியும் மணிவண்ணனும் வேடிக்கை பார்ப்பதுதான் காட்சி!

“ஸ்டார்ட் கேமரா…” என்றார் இயக்குநர். கேமரா ஓடத் தொடங்கியது. ரோஜாவுக்கு மட்டும்தான் வசனம். மற்றவர்கள் அவருடைய வசனத்துக்கு ரியாக்ட் செய்ய வேண்டியது மட்டும்தான். ரோஜா அதிரடியாக உள்ளே நுழைந்து பாத்திரங்களை விசிறி அடித்துவிட்டு வசனங்களைப் பேசி முடிக்க டேக் ஓகேயானது.

எல்லாரும் அவரவர் இடத்தில் போய் உட்கார, ஒருவர் வந்து போட்டோகிராபரிடம், “உங்களை ஐயா கூட்டிட்டு வரச் சொன்னாரு” என்றார். அவர் என்னைப் பார்க்க, நான் “யாரு?” என்றேன். “ஐயாதான்” என்று சொல்ல, போட்டோகிராபர் என்னைத் தள்ளிவிட்டார்.

சிவாஜி மர நிழலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. கிராமத்து ஆட்கள் போடும் பனியன் மாடல் சட்டையும், நாலு முழ வேட்டியும்தான் உடை என்றாலும் அதிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது. நான் வந்ததை உணர்ந்துவிட்டார் என்பதை மூடிய இமைகளுக்குள் உருண்ட விழிகள் தெரிவித்தன.

“என்னைக் கேட்காமல் தட்சனின் யாகத்துக்குச் சென்றுவர உனக்கு என்ன துணிச்சல்…” என்று திருவிளையாடலில் பார்வதியிடம் கேட்கும்போது சிவபெருமானின் புருவம் மட்டும் உயர்ந்து கேள்விக்குறியாகுமே அப்படிப் புருவம் உயர்த்துவாரோ என்று தோன்றியது.

லேசாகத் தொண்டையைச் செருமலாமா என்று நினைத்தேன். வழக்கமாகப் படப்பிடிப்புத் தளம் பற்றி எழுதச் செல்லும்போது நட்சத்திரங்களோடும் பேசுவது வழக்கம். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இங்கே எடுக்கக் கூடாது, படம் பற்றி நானே சொல்லிவிடுகிறேன் என்று கஸ்தூரி ராஜா சொல்லியிருந்தார். ஆனாலும் வலிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படம் பற்றி சிவாஜி கணேசன் என்ன சொல்கிறார் என்பதும் கட்டுரைக்கு வலு சேர்க்கும். சிவாஜியை சந்தித்துப் பேசினேன் என்பது ஒரு நிருபராக எனக்குப் பெருமையாக இருக்கும் என்றும் தோன்றியது.

நான் அவரது அருகாமையில் வந்துவிட்ட அரவம் உணர்ந்து, நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

“தம்பி, யாரு… என்ன வேணும்? ரொம்ப நேரமா நிக்கறாப்ல இருக்கு… என்னைப் பார்க்கவா வந்தீங்க? ஒரு வார்த்தை கூப்பிட்டுருக்கலாமே…” என்றார். “இல்லே… ஷாட் நடுவுல போட்டோ எடுத்தவங்களை பார்க்கணும்னு சொன்னீங்களாம்…” என்றேன்.

“போட்டோ எடுத்தது நீங்க இல்லையே தம்பி..? அந்த தம்பி க்ரீம் கலர் சட்டைல போட்டிருந்தாரு” என்றார். திடுக்கென்று இருந்தது.

அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் கேமராவின் இரு பக்கமும் விளக்குகள் வெள்ளமென ஒளியைப் பெருக்கிக்கொண்டிருந்தன. கண்களை விழித்துப் பார்க்கவே கூசும் அளவு வெளிச்சம். அங்கிருந்து பார்த்தால் எதிரே எந்த உருவமும் தெரியாது. ஆனால் அவருக்கு ஆள் மட்டுமல்ல, க்ரீம் கலர் சட்டையும் தெரிந்திருக்கிறது.

நான், “பத்திரிகைக்காக எடுத்தோம். நான் நிருபர்” என்றேன். “அப்படியா… டைரக்டர்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டீங்களா?” என்றார். “ஆமாம்…” என்றதும், “அப்படின்னா உங்க வேலையை நீங்க செய்திருக்கீங்க. நான்தான் தப்பா நினைச்சுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க…” என்றார். எனக்குப் பதறிவிட்டது.

“சார்… நீங்க கேட்டது தப்பில்லை… யதார்த்தமா வரணும்னு நாங்கதான் உங்ககிட்டே சொல்லாம படம் எடுத்துட்டோம்” என்றேன்.

“சரி… டைரக்டர்கிட்டே கேட்கறதுதான் முறை. என்கிட்டே எதுக்கு கேட்கணும்… அவருதான் கேப்டன் ஆஃப் த ஷிப்” என்றபடி கண்களை மூடிக்கொண்டார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.

சில நொடிகளில் கண்ணை விழித்தவர், என்ன என்பதுபோலப் புருவத்தை உயர்த்தினார்.

“ஒரு சின்ன சந்தேகம் சார்… ப்ளாஷ்கூட போடலை. எப்படி படம் எடுத்ததை கண்டுபுடிச்சீங்க?”

“சிவப்பா ஒரு பொட்டு வெளிச்சம் தெரிஞ்சுது. சத்தமும் கேட்டுச்சுப்பா. க்ளிக்னு ஒரு சத்தம் கூடுதலா கேட்டுச்சா… அதான். நம்ம பய என்னைக்கு ஷாட்டுல படம் எடுத்திருக்கான்… ஷாட் முடிஞ்சதும் நிக்க வெச்சு போஸ் குடுக்கச் சொல்லித்தான் எடுப்பான். அதான் வேற யாரோ போட்டோ எடுக்காங்கனு தோணுச்சு…”

விர்ரென்று மூவி கேமரா ஓடும் சத்தத்தில், மொத்த பாத்திரங்களையும் ரோஜா உருட்டியதில் எழுந்த சத்தத்தில், அலறும் உச்சக் குரலில் அவர் வசனம் பேசிய சத்தத்தில் க்ளிக் சத்தம் அவருக்கு மட்டும் கேட்கிறது!

கட்டுரையின் தன்மையைச் சொல்லி, “உங்க கதாபாத்திரம் பற்றியும் ஷூட்டிங் அனுபவம் பற்றியும் சொல்லுங்க” என்றேன்.

“அதெல்லாம் நான் பேசப்படாது. நான் இங்க வந்திருக்கறது டைரக்டர் குடுக்கற வசனங்களை பேசறதுக்குதான். உங்க கிட்டே பேசுறதுக்கு இல்லை. நீ சிவாஜி கணேசன்கிட்டே பேட்டி எடுக்கணும்னா அன்னை இல்லத்துக்கு வா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார்.

நான் கடைசிவரையில் நடிகர் திலகம் சிவாஜியை சந்திக்கவே இல்லை!

தொடர்புக்கு cmbabu2000@gmail.com

source ……சி. முருகேஷ்பாபு  in The Hindu …. Tamil…
natarajan