தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
…இப்படி பல விழாக்கள்!
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?
* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்
இப்படி…
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!
இந்த வேல் வாங்கிய நாளிலே, “வேல்” என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!
வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது….
வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!
2. வேல் – தமிழ்த் தொன்மம்:
ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் “வேல்” போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!
சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(
பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!
சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:
முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்!
முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கூறுவர்!
முருகன் வேறு, வேல் வேறு அல்ல!
வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு!பார்த்து இருக்கீங்களா?
இன்னிக்கு பார்த்தீங்கன்னா….பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!
ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்….நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!
வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து…..முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!
வெஞ்சமரில் அஞ்சேல் என “வேல்” தோன்றும்…முருகா என்று ஓதுவார் முன்!
source::::http://madhavipanthal.blogspot.com.au/
natarajan



