படித்ததில் பிடித்தது …பணம் மட்டும் சந்தோஷம் கொடுக்காது …

அரசு ஊழியர் ஒருவர் பெரியவாளை நமஸ்கரித்து விட்டுத் தன் கஷ்டங்களையெல்லம் சாங்கோபாங்கமாக விவரித்தார். “பணம் இல்லாதவன் பிணம் என்பது சரியான வார்த்தை! கடன் வாங்கி குடித்தனம் பண்ண வேண்டியிருக்கு. இன்னும் கொஞ்சம் பணம் இருந்தால் சந்தோஷமாக இருப்பேன்”. “உன்னோட சம்சாரம் – குழந்தைகள் எல்லோரும் உன்கிட்ட பிரியமா இருக்காளா?” கேட்டார் பெரியவா “எல்லோருக்கும் என்னிடம் ரொம்பப் பிரியம். எனக்குத் தலைவலின்னா கூட தவிச்சுப் போயிடுவா…” என்றார் இவர். “சரி.. உட்காரு” அவரும் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டார். பத்து நிமிஷத்துக்குள் ஒரு பெரிய மனிதர் மனைவியுடன் வந்தார். பெரிய தோரணை. பழக்கூடை, புஷ்பக்கூடை சகிதம் வந்து பெரியவாளை நமஸ்கரித்து சொன்னார்: ”நான் ஏழையா இருந்தால் செளக்கியாமா இருப்பேன். பங்களா, கார் – எதுவும் நிம்மதியைக் கொடுக்கல்லே. எனக்குச் சக்கரை வியாதி. எந்த ஒரு நல்ல பொருளையும் வாயில் போட முடியல்லே… இரண்டு பையன்ளும் குட்டிச் சுவராகப் போய்விட்டார்கள். உலகத்திலுள்ள அத்தனை கெட்ட பழக்கமும் இருக்கிறது. நிறைய கடன். வயதான காலத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கின்றோம்” என்றார். இதையேல்லாம் அர்சு ஊழியர் கேட்டுக் கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்க்கையே மேல் என்று அவருக்கு தோன்றிவிட்டது. பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு நிம்மதியாக சென்றார். இதற்க்குத்தான் உம்மாச்சி தாத்தா அவரை உட்கார வைத்தாரோ ??? பெரியவா…. “பணம் சந்தோஷத்தை கொடுக்காது என்பதற்க்கு இது ஒரு உதாரணம்” என்று கூறினார்கள் பெரியவா.

 source::::input from a friend of mine 

natarajan

Leave a comment