இப்போதெல்லாம், சமையல் வகுப்புகளை
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
சின்னத்திரையில் காட்டுகிறபடி செய்து பார்த்தால்,
கடைசியாக உருவாகும் பண்டத்தை வாயில் வைக்க
முடியுமா.? என்பதே சந்தேகம்.
சின்னத்திரையில் காட்டுகிறபடி செய்து பார்த்தால்,
கடைசியாக உருவாகும் பண்டத்தை வாயில் வைக்க
முடியுமா.? என்பதே சந்தேகம்.
இல்லாவிட்டால், முருங்கைக்காய் சாம்பார்,
வெண்டைக்காய் பொறியல் என்று, காலம் காலமாக
வருகிற குழம்பு – பொறியல்களையே ஆங்கில வார்த்தைகள்
மிலி அளவுகள் சொல்லி நிகழ்ச்சியை ஒப்பேற்றிவிடுவார்கள்.
வெண்டைக்காய் பொறியல் என்று, காலம் காலமாக
வருகிற குழம்பு – பொறியல்களையே ஆங்கில வார்த்தைகள்
மிலி அளவுகள் சொல்லி நிகழ்ச்சியை ஒப்பேற்றிவிடுவார்கள்.
பெரியவா, பூர்வாசிரமத்தில் சமையற்கட்டுப் பக்கம்
போனதில்லை; சந்நியாசம் ஏற்றபிறகு அதற்கு அவசியமும்
இல்லாமல் போய்விட்டது. ஆனால் பெரியவாளுடைய
சமையல் பக்குவம் செய்யும் புதுமை முறைகள்
எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!.
போனதில்லை; சந்நியாசம் ஏற்றபிறகு அதற்கு அவசியமும்
இல்லாமல் போய்விட்டது. ஆனால் பெரியவாளுடைய
சமையல் பக்குவம் செய்யும் புதுமை முறைகள்
எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!.
பண்டரிபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
சின்னஞ்சிறு கிராமம். நாலைந்து குடிசைகள் மட்டுமே..
ஒரு பெரிய மரத்தடியில் முகாம்.
சின்னஞ்சிறு கிராமம். நாலைந்து குடிசைகள் மட்டுமே..
ஒரு பெரிய மரத்தடியில் முகாம்.
பெரியவாளுக்குப் பிட்சை தயார் செய்தபின்,
மிகுதியாக இருந்த சில பொருள்களைக் கொண்டு
ஒருவழியாக எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சற்று ஓய்வெடுக்கும் வேளை.
மிகுதியாக இருந்த சில பொருள்களைக் கொண்டு
ஒருவழியாக எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சற்று ஓய்வெடுக்கும் வேளை.
அமர்க்களமாக வந்து இறங்கினார்கள்,இருபது பேர்கள்.
எல்லோரும் சென்னைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்.
ஸ்ரீமடம் முகாமில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பிரசாதமாக
அருமையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
வந்தவர்கள்.
ஸ்ரீமடம் முகாமில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பிரசாதமாக
அருமையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
வந்தவர்கள்.
ஆனால் ஸ்ரீமடம் ஒரு பெரிய மரத்தின் அடியில்
அல்லவா முகாமிட்டிருக்கிறது.
அல்லவா முகாமிட்டிருக்கிறது.
சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள்,
சாமான்கள் கிடையாதே.?.
சாமான்கள் கிடையாதே.?.
பரமாசாரியாளுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை!
பசியுடன் வந்திருக்கும் அன்பர்களுக்குச் சாப்பாடு
போட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
பசியுடன் வந்திருக்கும் அன்பர்களுக்குச் சாப்பாடு
போட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
பிரும்மசாரி ராமகிருஷ்ணன் என்று ஓர் அணுக்கத் தொண்டர்
அவரிடம், “எல்லோருக்கும் சமையல் செய்”
என்று உத்திரவும் இட்டார்கள்.
அவரிடம், “எல்லோருக்கும் சமையல் செய்”
என்று உத்திரவும் இட்டார்கள்.
ராமகிருஷ்ணன் கைகளைப் பிசைந்துகொண்டு பரிதாபமாக
நின்றான்.”அடுத்த ஊர் போனதும் சமைத்துப் போடுகிறேனே.?
என்றான்.
நின்றான்.”அடுத்த ஊர் போனதும் சமைத்துப் போடுகிறேனே.?
என்றான்.
ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது பெரியவாளுக்குப்
புரிந்துவிட்டது.
புரிந்துவிட்டது.
“அரிசி இருக்கோன்னோ.?”
“இருக்கு.கொஞ்சம் பயத்தம்பருப்பும் இருக்கு.”
(மோர்)..”நல்லதாப் போச்சு.! நீ என்ன பண்றே.? அரிசியைக்
…………..களைஞ்சு, அந்த ஜலத்தைத் தனியா ஒரு பாத்திரத்திலே
………….வெச்சுக்கோ.அந்த ஜலத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு
………….எலுமிச்சம் பழம் பிழிஞ்சு, நாரத்தை இலையைக்
………….கிள்ளிப் போடு. இதுதான் மோர்.
…………..களைஞ்சு, அந்த ஜலத்தைத் தனியா ஒரு பாத்திரத்திலே
………….வெச்சுக்கோ.அந்த ஜலத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு
………….எலுமிச்சம் பழம் பிழிஞ்சு, நாரத்தை இலையைக்
………….கிள்ளிப் போடு. இதுதான் மோர்.
(ரசம்)..”பயத்தம்பருப்பை வேகவைச்சு-நிறைய ஜலம் விட்டு
…………- அந்தக் கொதிநீரிலே எலுமிச்சம்பழ ரசம் (சாறு)
………….சேர்த்துட்டேன்னா, அதுதான் ரசம்.
…………- அந்தக் கொதிநீரிலே எலுமிச்சம்பழ ரசம் (சாறு)
………….சேர்த்துட்டேன்னா, அதுதான் ரசம்.
(கறி)….”வேகவெச்ச பயத்தம்பருப்பு இருக்கே.? உப்பு போடு
…………..ரெண்டு பச்சைமிளகா கிள்ளிப் போடு.
…………..இதுதான் கறி.!”
…………..ரெண்டு பச்சைமிளகா கிள்ளிப் போடு.
…………..இதுதான் கறி.!”
எல்லாம் அரைமணியில் ரெடி.அதற்குள், எல்லோருக்கும்
இலை, தண்ணீர் சேகரித்து வைத்தோம்.
இலை, தண்ணீர் சேகரித்து வைத்தோம்.
சாதம்,பயத்தம்பருப்புக் கறி, ரசம், மோர் -என்று
அறுசுவை டின்னர்.!.”
அறுசுவை டின்னர்.!.”
“சாப்பாடு ஏ ஒன்.!” என்றார் ஒருவர்.
“தேவாமிர்தம்.!” என்றார் இன்னொருவர்.
“இவ்வளவு ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை.!”
என்றார். மற்றொருவர்.
என்றார். மற்றொருவர்.
தொண்டர்களாகிய நாங்கள் எங்களுக்குள் சிரித்துக்
கொண்டோம். எல்லாம் பெரியவாள் வாக்கின் ருசி
என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான்.
என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான்.
விருந்தோம்பல் பற்றி, பெரியவாளிடம் பாடம் கற்க வேண்டும்.
அது அட்சய பாத்திரம்.!.
-The inner Light illuminates our minds– source::::: input from a friend of mine
natarajan