படித்து ரசித்தது …” என்னை தெரியவில்லயா … ” ?

இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒருமுறை காந்திஜி சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தார். சுயராஜ்ய மந்திரத்தை கிராமம் கிராமமாகப் போய் சொல்ல வேண்டுமென்று, தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படி நானும், சில கிராமங்களுக்குப் போனேன். அப்படி, ஒரு கிராமத்தில், தண்டோரா அடித்து, ‘கிராம சாவடிக்கு முன் கூட்டம் நடைபெறும்’ என, அறிவித்த பின், குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு அரிக்கேன் லாந்தருடன் சாவடிக்குப் போய் சேர்ந்தேன்.
அங்கே, ஒரே ஒரு நபர் மட்டுமே வந்திருந்தார். அந்த ஒருவராவது வந்திருக்கிறாரே என்ற நன்றி உணர்ச்சியுடன், பிரிட்டிஷ் சர்க்கார், இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களைப் பற்றி, கேட்பவரின் ரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்னேகால் மணி நேரம் பிரசங்கம் செய்தேன். பின், நானே வணக்கம் செய்து, உட்கார்ந்திருந்த ஒரே நபரைப் பார்த்து, ‘ஐயா, தங்களின் தேச பக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ, எந்த ஊரோ…’ என்றேன்.
அதற்கு அந்த நபர், ‘என்னைத் தெரிய வில்லையா… நான் உம்மை, கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து, கரூர் வரையில் தொடர்ந்து வந்திருக்கிறேன். நான் சி.ஐ.டி.,காரன்; உம்மைக் கண்காணிப்பதற்காக என்னை அனுப்பியுள்ளனர்…’ என்றார் அவர்.

source:::::DinaMalar ….Sunday VARAMALAR.

Natarajan

Leave a comment