இந்த வாரக் கவிதை ….” என் தேசம் …என் சுவாசம் …” !

 

என் தேசம் …என் சுவாசம்
…………………………
திரைகடலோடி திரவியம் தேடும் நம் வீட்டுப் பிள்ளைக்கு
“யாதும் ஊரே யாவரும் கேளிர் ” !
மறு கரையில் இருக்கும் தாய் வீடும் நாடும் ஒரு போதும்
மறப்பதில்லை நம் பிள்ளைக்கு ! ..அக்கரை சீமையில்
எக்கரையில் இருந்தாலும் அவருக்கு ஒரு தனி செல்வாக்கு …அது
“நான் ஒரு இந்தியன்” என்னும் அவர் சொல் வாக்கு !
ஆனால் நாம் பிறந்த  மண்ணில் மட்டும் இன்னும் நம்மை அடையாளம்
காட்டுவது  மொழியும் , மதமும் மட்டுமே ! தேசிய நீரோட்டம் வெறும்
ஏட்டில் மட்டும் பூத்திருக்கும்  ஒரு அத்திப் பூ !
ஒரு வேளை கங்கையும்  காவிரியும் இணைந்தால் மட்டுமே
சாத்தியமாகுமா  தேசிய நீரோட்டம் ?
“நான் ஒரு இந்தியன்  பாரதம் என் தேசம் …எம்மதமும் எனக்கு
 சம்மதம் ..நாம் காண்போம் வேற்றுமையில்  ஒற்றுமை “..இதுவே
  நாம் பேசும் ஒரே இந்திய மொழியாகட்டும் இனி …ஒரு
 தேசிய கீதமாக இசைக்கட்டும் இம்மொழியை  நம் சுவாசக்காற்று !
சுவாசம் இசைக்கும் இந்த இசை மழையில் நம்
இதயங்கள் நனைந்தால்  தன்னால் இணையும் நீரும் நதியும் !
இமயம் முதல் குமரி வரை உருவாகும் ஒரு அருமையான புது
பந்தம் …அதில் மலரும் சொந்தங்கள் நிச்சயம் உச்சரிக்கும் மந்திர
சொல் ” என் தேசம் …என் சுவாசம் …” ! இந்த சொல் வாக்கால்
நம் செல்வாக்கும் சிகரம் தொடும் நாம் பிறந்த மண்ணில் !
” நான் ஒரு இந்தியன் ” என்னும் ஒரே ஒரு அடையாள அட்டையுடன் !
Natarajan

Leave a comment