இணை(த)யத்தில் வாழும் எம் தமிழ் !
……………………………..
இன்பத்தமிழ் நம் இதயத்துடிப்பு …உயிர் மூச்சு ! இனிய தமிழ்
இன்று இணையத்தில் இணைக்குதே தமிழ் இனத்தை !
பல கோடி தமிழ் மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும்
தேடி வந்து அவரை இணைப்பது இணையத் தமிழ் அன்றோ !
இதயம் திறந்து பேச சிறந்த ஓர் வாயிலான தமிழ் இணையம்
இன்று உலகத் தமிழர் பலரை இணைக்கும் பாலம் !
தாய் மொழி கல்வி எட்டாக்கனி ஆன பின்னர் நம் பிள்ளைகள்
பலருக்கு இணையத்தமிழ் இனிக்கும் தமிழ் !
தமிழ் இணையம் அவருக்கு ஒரு தமிழ் பள்ளிக்கூடம் !
இயல் , இசை , நாடகத் தமிழ் கண்ட நம் செம்மொழி
இன்று இணையத் தமிழாகவும் வெற்றி உலா வரும் காலம்
இணையத்தின் பொற்காலமே !
natarajan
19 april 2016