திருமண நாள்
………….
முதல் திருமண நாள் …என்ன பரிசு வாங்கலாம்?
எப்படி கொண்டாடலாம் அந்த நன்னாளை ?
கணவனுக்கும் மனைவிக்கும் விடை தெரியா கேள்வி !
முடிவே இல்லாத விவாதம் விடிய விடிய !
விடிந்தது காலை .. தொடர்ந்தது மீண்டும் விவாதம் !
பக்கத்து வீட்டு தம்பதியிடம் யோசனை கேட்டால் என்ன !
ஒரு சிறு பொறி தட்டியது மனதில் ! “எங்களுக்கும் இன்று திருமண
நாள்! … பொன்விழா ஆண்டு நிறைவு ! … ஐம்பது ஆண்டு இனிய
இல்லற வாழ்வே இறைவன் தந்த அரிய பரிசு எங்களுக்கு !
குறை ஒன்றுமில்லா ஒரு நிறைவான போதுமென்ற மனம்…
இதுவும் அந்த இறைவன் அருளிய வரமே எங்களுக்கு !
உங்கள் இல்லற வாழ்வும் நல்லறமாக இனிதே செழித்து வளர
எங்கள் நல்லாசிகள் உண்டு உங்களுக்கு !
வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன் …வாழ்க பல்லாண்டு “
வாழ்த்தினார் பெரியவர் !
வாழ்வின் அர்த்தம் புரிந்தது …வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு !
Natarajan
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 25th July 2016