வாரம் ஒரு கவிதை …” வெற்றி முரசு “

 

வெற்றி  முரசு
————–
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த
சுற்றி சுற்றி வருகிறான் தெருவை
கட்சி தொண்டன் …தன் கட்சிக்கு
வாக்கு கேட்டு .. தன் சுற்றமும் குடும்பமும்
ஒரு வாய் சோற்றுக்கு அலையும் நிலையிலும்
தொண்டன் இவன் வாய் போடுது ஓயாத
கோஷம் அவன்  கட்சி வெற்றிக்காக  !
ஏணி இவன் மீதி ஏறி வெற்றிக்கனி பறித்த  பின்
தலைவன் அவன் ,ஏறிய ஏணி மறந்து  பறக்கிறான்
விண்ணில் …தன்  கட்சித் தலைவரைப் பார்க்க !
வெற்றி வெற்றி என வெற்றி முரசு கொட்டி  தன்னை
சுற்றி வரும் தொண்டன்  தெரிகிறான் ஒரு வெட்டி ஆளாக
வெற்றிக் கனி சுவைத்த அந்த தலைவன்   கண்ணுக்கு !
கட்சித் தலைவரைப் பார்த்து ஆட்சி வணிகத்தில்
தனக்கும் ஒரு பங்கு கேட்டு   ஓடும் தலைவன்
ஓட்டத்தின் முன்னால் நம்  ” வெட்டி” தொண்டனின்
வெற்றி முரசு ஒரு “வெட்டி” முரசு ஆனது சோகம்..சோகம் !
வேலை வெட்டி இல்லா இந்த தொண்டனுக்கு
ஒரு முரசு கொட்டி சொல்ல வேண்டுமா அவன்
உழைப்புக்கு கிடைக்கும் பரிசு என்னவென்று ?
My Tamil Kavithai as published in http://www.dinamani.com on 13th Feb 2017
K.Natarajan

Leave a comment