தண்ணீர் தீர்த்தமாக எப்போது மாறுகிறது ?

தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது தெரியுமா?

ஜப்பானில் ஒரு விஞ்ஞானி தண்ணீரின் குணத்தினை ஆராய விரும்பினார். ஒரே நீரை பத்து பாத்திரங்களில் ஊற்றினார். கோயில், மருத்துவமனை, குப்பைகள் நிறைந்த இடம், சிறை, மக்கள் வசிக்கும் வீடு என வெவ்வேறு விதமான இடங்களில் வைத்தார். அவருக்கு மிகவும் ஆச்சர்யமான முடிவுகள் கிடைத்தன. கோயில், நன்மக்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்ட நீர் அப்படியே இருந்தது. எதிர்மறை எண்ணங்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட்டிருந்த அதே நீரில் புழுக்கள் உண்டாகி நாற்றம் வரத் தொடங்கி இருந்ததாம். நீர் மிகவும் சென்சிடிவ் வான குணமுடையது. அது இருக்கும் இடத்தில் உள்ள மக்களின் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நீரைக் குடிப்பவர்களுக்கும் அதே போல நல்லதோ, கெட்டதோ ஏற்படுகிறது என்று அறிவித்தார். இதன் காரணமாகத்தான் நமது நாட்டிலும் நீர் புனிதமாகப் போற்றப்படுகிறது. வேத ஆத்மானம் புனிதே என்கிறது தைத்ரிய ஆரண்யகம். கும்பமேளாக்களும் அத்தனை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒரு பத்துபேரின் காரணமாக நீரின் தன்மை மாறும்போது, பக்திப் பரவசத்தோடு தெய்வ சிந்தனையோடு வரும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு நீராடும்போது அந்த நீர் எத்தனை சக்தி வாய்ந்ததாக மாறும்?

அதிலும் ஏராளமான சந்நியாசிகள், மடாதிபதிகள், புனிதர்கள் வந்து அச்சமயம் நீராடுகிறார்கள். மடாதிபதிகள் தங்கள் தங்கள் தொன்மையான மடத்தின் விக்ரகங்களைக் கொண்டு வந்து நீரினுள் வைத்துப் பூஜிப்பதும் அச்சமயத்தில் நடைபெறுகிறது. இத்தனை மகத்துவமும் ஒரு சேர நடந்து நீரின் தன்மை மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுவதால்தான் கும்பமேளாக்கள் இத்தனை போற்றப்படுகின்றன. அதற்குச் சிறப்பு சேர்ப்பது போல இயற்கையும் ஒத்துழைக்கின்றது. குறிப்பிட்ட கிரகங்கள் வானில் சேரும்போது அதன் நேர்மறைத் தாக்கமும், கதிர் வீச்சுக்களும் ஓரிடத்தில் கூடுகின்றன. அப்படித்தான் கும்பகோணத்தில், புஷ்கரில், கங்கையில் அந்தந்த இடத்தின் பூகோள அமைப்பிற்கு ஏற்ப கிரகசக்தி இறங்கும்போது கும்பமேளாக்கள் அமைக்கப்பட்டன. இமயமலையில் குடி கொண்டிருக்கும் மகான்களும், பாபாஜிகளும், ரிஷிகளும் தங்களின் தவவலிமையை, சக்தியை கங்கையின் மூலமாக கீழே நிலத்திற்குக் கருணையோடு அனுப்புகின்றனர். அதனாலேயே கங்கை இத்தனை புனித நதியாகக் கருதப்படுகிறது. இப்போது நம் உடலில் 70 சதவீதம் நீர்தான் இருக்கிறது. நம்முடைய நேர்மறை எண்ணங்களோ, எதிர்மறை எண்ணங்களோ நம்முள் இருக்கும் நீரை எப்படி மாற்றும் என யோசித்துப் பாருங்கள். நம்முள் ஓடும் நீர் கங்கையாகவோ, கழிவு நீராகவோ இருப்பது நம் சிந்தனையில் தான் இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நல்ல நீராக ஆக்கி, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீர் மாறினால் பேரும் மாறி விடுகிறது!

இங்கேயும் ஒரு கங்கை: திரிவேணி சங்கமத்தில் பச்சையாக கங்கையும், கருமையாக யமுனையும் ஓடி வந்து இரண்டும் கலந்து பின்னர் பழுப்பு வண்ணமாக கங்கை எனும் பெயருடனே தொடர்ந்து ஓடுகிறது. அதன் பின்னர் யமுனை எனச் சொல்வதில்லை. இந்த சங்கமத்தில் கங்கை தன் நிறத்தை இழக்கிறாள். யமுனை தன் பெயரை இழக்கிறாள். இதுதான் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தன்னையே கொடுத்து தியாகம் செய்யும் பண்பு எனலாம். இதையே ஒரு மஹா வாக்கியமாக வடமொழியில் த்யாகே நைகேன அம்ரு தத்வாய மான ஸஹா என்று உரக்கச் சொல்லப்படுகிறது. மேலும் உயர்ந்த ப்ரம்ம தத்துவத்தை ஒரு ஜீவன் அடைய வேண்டுமென்பதைக் குறிக்கும்.

நாம ரூப குண தோஷ வர்ஜிதம்…
ப்ரம்ம தத்வமஸி பாவ ஆத்மனி

என்பதும் ஒரு வேத மஹா வாக்யமாகும். நாம் தினமும் குளிக்கும்பொழுது கூட நாம் வைத்திருக்கும் பாத்திரத்தில் உள்ள நீர் மீது நம்முடைய உள்ளங்கையை வைத்து –

கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலைஸ்மின் சந்நிதிங்குரு

என்று 11 முறை ஜெபித்து குளித்தோமானால் நம் குழாய்த் தண்ணீர் கூட கங்கையை போல் புனித நீராக மாறி நமக்கு பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும்.

SOURCE::::: DINA MALAR….TAMIL DAILY…
Natarajan

15 Year old Girl ….Set to Become another Albert Einstein!!!!!!!!!!

 

Indian Origin Fabiola Mann, the Next Gen Einstein

Source:::::siliconindia net…….
Natarajan

 Fabiola Mann, a 15-year-old London teen with Goan roots has beaten Albert Einstein and Stephen Hawking with her IQ score. Her Mensa IQ score of 162 has put her in the top 1 percent of world’s intelligent people, two points above the 160 scored by the scientific greats, reported Karsten Miranda for TNN. Mensa was founded in 1946 as a society for intelligent people.

Fabiola said in an email “I had heard about Mensa and so decided to take their test.” Being inclined towards puzzles, she begged her parents to apply for the test and paid the fee.

Fabiola was awarded her membership certificate by Mensa in August this year. She says she did not expect the score. She had to wait for a month for her scores instead of the usual two weeks as the results were lost in transit.

She said that “The questions were slightly more confusing (from the practice IQ tests online) and we did not have much time to do them, so I could not really tell how I was doing,” as reported by TOI.

Fabiola wishes to study medicine at Cambridge University and become asurgeon as she likes the idea of helping people. Her father Anthony was born in England and is a lecturer. Her mother Rene, a Margao resident who moved to London after marriage, said, “Obviously I had heard about Mensa and genius IQ level children, but I’m amazed that my own daughter is one,” as reported by TOI.

In an interview it was observed that “162 is the highest possible score anyone can achieve in the UK and European test”.

When asked what the Mensa membership means to Fabiola, Rene was quoted saying to TOI “People keep asking me the same thing, and to be honest I don’t know. Hopefully it will mean an entry into the best universities and later job opportunities.”

Fabiola is talented and has a purple belt in karate, learns taekwondo, chess and music too. She plays the piano and the guitar and as per her peers has an amazing voice. She is also presently working on a novel.

 

Italian Ponies from Col. Qadhafi to an Indian Army Officer!!!!!!

source :::: THE HINDU….

Natarajan

When my husband’s elder brother (known to family and friends as Monty) had to choose a job, he opted for a career in the Army. This was when India was under the British Raj. But while he was busy ‘soldiering,’ Monty had another interest. And this was writing. So, when he was still a Major, he published a book, Essentials of Military Knowledge. By and by, this book became an accepted textbook for some military colleges in India and abroad.

When the British left India and our country got independence, an unfortunate by-product was Partition. So far, the Army had been a unified force consisting of British and Indian officers and jawans who came from different parts of the sub-continent. The Army had always been one big brotherhood and one of my brother-in-law’s close friends was a Muslim. When Partition came, this friend opted to join Pakistan and the two friends lost touch with each other.

The first conflict between the two newly formed countries was over Kashmir. My brother-in-law was asked to lead a campaign in the war, during which he was so badly wounded that he had to spend several months in hospital (later he was awarded the Veer Chakra for bravery). Soon after his discharge from the hospital, he went to London. There he ran into an old friend from the British/Indian army. His friend greeted him cordially and asked him to come over to his house the next evening as he was having a get-together of officers he had known in India and who happened to be in London at the time. Of course, the invitation was happily accepted.

At the party, my brother-in-law was surprised to see his old Muslim friend, who overjoyed and gave Monty a big bear hug. “How lovely to see you again,” he said. “Hold it,” Monty replied. “You are hurting me. I was badly wounded in the Kashmir campaign and am not yet fully recovered.” His friend stood back. “You were in the Kashmir campaign? What exactly was your part there?” My brother-in-law said he was defending X hill. “You were defending that hill…but I was the one who was attacking it.” The two friends were completely taken aback. “You blighter, you almost killed me,” Monty said. “Oh, I’m so sorry,” his friend replied. “How was I to know that you were in command there,” he said and he embraced him again. Their British host was aghast at the sight of the two friends, who had come close to killing each other because their country had been partitioned by their foreign rulers.

After my brother-in-law retired from the Army as Major-General he had another strange encounter. Monty devoted himself full-time to writing about military affairs, and apart from his contributions to newspapers and journals, he wrote some books. One day, he got a strange call from Libya. It was the personal secretary of Colonel Qadhafi, who had just taken over as head of the state. The caller said Colonel Qadhafi had seen Essentials of Military Knowledge and wanted it translated into Arabic. He wanted General Palit to come to Libya as his guest and oversee the translation. Since my brother-in-law was retired from the Army, he accepted the invitation and went to Libya where he met Qadhafi.

The translation proceeded, with the translator asking Monty to clarify certain points in the book from time to time. Then, one day, Qadhafi’s ADC came to my brother-in-law and said the Colonel wanted to know how General Palit wanted to spend his spare time. Monty said that he was fond of playing polo and he’d be grateful if a couple of polo ponies could be arranged for him. In less than a week, two polo ponies were placed at his disposal.

Monty spent his spare time just riding the ponies or hitting polo balls on the grounds, if there was no one to play with him. When the time for his departure arrived, the ADC came and asked what he should do with the ponies. “I don’t need them any more so you can have them back” was the reply. “But Colonel Qadhafi wants you to take them with you,” the ADC insisted. “He specially had them imported from Italy for you.” Monty was taken aback. “I can’t land up in India with two polo ponies,” he said. “What will my government say? Please thank Colonel Qadhafi for his offer, but tell him that I am unable to accept it.”

That was the end of Monty’s adventure in Libya. Qadhafi was killed in the recent insurrection in the country, and the Arabic copies of my brother-in-law’s book must have gone up in flames, like much else in Libya.

(spalit_2007@rediffmail. com)

Keywords: military affairs, Colonel Qadhafi, polo ponies

இன்ஸ்டன்ட் கவிதை !!!… ஆஸ்திரேலியா கொலு !!!

This slideshow requires JavaScript.

பாட்டி  வைத்த கொலு நான் பார்த்ததுண்டு   –ஒரு
குட்டி  பயலாக !!!..  அம்மா கொலு வைக்க  படிக்கட்டு
 கட்டி  நான்  அடுக்குவேன் பொம்மை ,   ஒரு  சுட்டி பயலாக !!!!
 வீட்டு கொலு பார்க்க  நேரம் எங்கே   அப்போ!!!!…
 வீடு வீடாக  கொலு பார்த்து  சுண்டல் சுவைக்கவே
 நேரம் இருக்காதே அப்போ!!!!
  அருமை மனைவி  கொலு வைக்கும் நேரம்
  பொறுமையா  ரசிக்க நேரம் எங்கே அப்போ!!!!..
  அலுவல்  நிமித்தம் அவசரம் எப்பவும்  அப்பப்பா !!!!!
   இப்போ  இருக்கு நேரம் நிறைய ….மனம் நிறைய
   நான்   ரசிக்க ஒரு கொலு இப்போ இங்கே  … தினம்  ஒரு
  சுண்டலுடன்!!!! … அதுவும் அயல் நாட்டு  மண்ணில் !!!
   எதுவும் முடியும் …. மாமா …மனம் இருந்தால் …..கொலு
    என்ன பிரமாதம் ?!….  ..இது  என் மருமகள்  வாதம் !!!!!
    ஆமாம் ஆமாம்  இதுவும்  எதுவும் அந்த பிள்ளையாரப்பன்
    ஆசீர்வாதம் !!!  நாளும்  நாம் பணிவோம்  அவன் பாதம் !!!!
     when i am seeing  Navarathri Kolu  in Queensland, Australia , i recall my school days when i read WASHINGTANIL  THIRUMANAM by SAVI
     in ANANDA VIKATAN those days !!!!  what a lovely serial story it was with full of  humour !!!!   …..Now at this juncture, sitting in Australia and
    watching  KOLU at my son”s house , i recall that  story by SAVI wherein he picturised a south indian wedding at Washington with all fanfare and fun
     including MRS.Rockfeller”s
        active participatin in that wedding!!!!!!….
       Natarajan

நவராத்திரி 6ம் நாள் வழிபாடு………

 
நவராத்திரி ஆறாம் நாள்: வழிபடும் முறை

SOURCE::::DINAMALAR…TAMIL DAILY
Natarajan
Temple images

அக்.21ல் அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபடவேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு உண்டாகும். நாளை மதுரை மீனாட்சியம்மன், சிவசக்தி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. கயிலையில் சிவனும், அம்பிகையும் இருந்த போது, பிருங்கி முனிவர், தீவிர சிவபக்தரான இவர், அம்பாளை வலம் வராமல் சிவனை மட்டும் வணங்கினார். அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன், தேவியை நெருங்கி அமர்ந்தார். ஆனால், முனிவர் வண்டாக உருவெடுத்து இருவருக்கும் நடுவில் புகுந்து, இறைவனை மட்டும் வலம் வந்தார். இதையடுத்து அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன் பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். சிவசக்தியின் மகிமையை உணர்ந்த பிருங்கி அர்த்தநாரியை வலம் வந்து ஆசிபெற்றார். இக்கோலத்தைத் தரிசித்தால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும்.

நைவேத்யம்: வெண்பொங்கல்
தூவ வேண்டிய மலர்: பிச்சி, செவ்வந்தி

பாட வேண்டிய பாடல் :
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

வறண்ட பூமியில் செழிக்கும் விவசாயம் !!!!

Meet MR. Chinnaswamy… Siddhanaickenpalayam , Palladam

நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.

என்ன தொழில் நுட்பம்?

விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன.
அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
தினமும் அறுவடை:

களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், “கோ-3′ ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. “ரெட்லேடி’ என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.
தாய்லாந்து புளி:

தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, “இயற்கை இனிப்பு புளி’ என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.
“துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை’:

விவசாயி சின்னச்சாமி கூறுகையில், “”இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,” என்றார்.

source:::DINA MALAR  …Tamil daily
Natarajan

நவராத்திரி 5ம் நாள் வழிபாடு …..

SOURCE::::DINA MALAR  Tamil daily…
Natarajan
Temple images

நாளை(அக்.20ல்) அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வவளம் பெருகும். நாளை மதுரை மீனாட்சியம்மன் “மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். மலையத்துவஜ பாண்டியனும், அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திரபாக்கியம் இல்லாமல் வருந்தினார். அந்தணர்களை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தின் பயனாக உமையவளே யாகத்தீயில் தோன்றினாள். அவளுக்கு தடாதகை என பெயர் சூட்டினர். அவளது கண்கள் மீன் போல் இருந்ததால், மீனாட்சி எனப்பட்டாள். அவளுக்கு வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் தந்து இளவரசியாக்கினார். அவள் அஷ்டதிக்குகளும் நடுங்கும்படியாகப் போருக்குப் புறப்பட்டாள். மீனாட்சியின் வீரத்தைக் கண்டு மன்னர்கள் அஞ்சினர். எல்லாரையும் வென்றபிறகு, ஈசன் ஆளும் கயிலாயமலையையும் பிடிக்கச் சென்றாள். தேவியின் பராக்கிரமத்தைக் கண்ட நந்தியம்பெருமான் பயந்துபோய் சிவபெருமானை துணைக்கு அழைத்தார். அஷ்டதிக்குகளையும் வென்ற உமையவள், ஈசனைக் கண்டதுமே பெண்மைக்கே உரிய நாணம் கொண்டாள். வீரத்தால் உலகை வென்ற அம்பிகை, நாணத்தால் உலகாளும் ஈசனை வென்றாள். நாமும் அனைத்து செயல்களிலும் வெற்றிவாகை சூடி முதலிடம் பிடிக்க அம்பாளை வணங்கி வருவோம்.

 நைவேத்யம்: கல்கண்டு சாதம்
தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ

பாட வேண்டிய பாடல்:

அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே!
ஆலவாய் ÷க்ஷத்ர ஒளியே உமையே!
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே!
வைகைத் தலைவியே சரணம் தாயே!

Laughter the Best Medicine!!! …Dont Confuse GOD!!!!

source:::: input from one of my friends… nice joke to read and laugh… also to share with your friends ..
Natarajan

A 45 year old woman had a heart attack and was taken to the hospital.
While on the operating table she had a near death experience.
Seeing God she asked ‘Is my time up?’

God said, ‘No, you have another 43 years, 2 months and 8 days to live.’

Upon recovery, the woman decided to stay in the hospital and have a
face-lift, liposuction, and a tummy tuck. She even had
someone come in and change her hair colour and brighten her teeth!

Since she had so much more time to live, she figured she might as well
make the most of it.

After her last operation, she was released from the hospital.

While crossing the street on her way home, she was killed by an
ambulance.

Arriving in front of God, she demanded, ‘I thought you said I had
another 43 years? Why didn’t you pull me from out of the path of the ambulance?’

(You’ll love this!!!)

God replied: ‘I didn’t recognize you’

இன்ஸ்டன்ட் கவிதை …யோசித்து சொல்லுங்க !!!

நீருக்கும் நிலத்துக்கும் உரிமை கோரி பகை வளர்த்து

போருக்கும் வித்திடும் பித்தர்களே – சற்று

யோசித்து சொல்லுங்க ….ஒளி கொடுக்கும்

நிலவும் பரிதியும் உங்களில் யாருக்கு சொந்தம் ?

Natarajan

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு …..

source:::::DINA MALAR…Tamil Daily..
Natarajan
Temple images

நாளை (அக்.19ல்) அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். அருளாளரான குமர குருபரர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை “ஊசல் பருவம் என்பர். அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான நாளை, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக மாறி ஊஞ்சலில் ஆடுவதை நாளை காண்போமா!

 நைவேத்யம்: புளியோதரை
தூவ வேண்டிய மலர்கள்: செந்தாமரை, ரோஜா

பாட வேண்டிய பாடல்:

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!