படித்ததில் பிடித்தது ….மகாபெரியவரின் கணித விளக்கம் !!!

*****நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும்,
விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான்.
இதுல ‘செகண்ட் தாட்’ டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு
ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல
வேறுபடறது.இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற
நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட்.
சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள
தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு
மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன்
சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த
Ambiguityயும் கிடையாது.ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும்
பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன்
சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது. விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா
அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு
Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத
முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான்.
பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே
இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு
அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை
(Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப்
போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது.
விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான
எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின்
விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான்
பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு
என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல
முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின்
சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை
கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும்
சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான்
இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை
அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி
இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான்
முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.
த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின்
எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம்
சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை
தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு
ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம்
சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத
தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi)
அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும். கணிதத்தின்
முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது
தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று
Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.ஒரு சுவாரஸ்யம் என்ன
அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை
அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இது
இதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை
இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது
சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு
ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்து
பேதப்பட்டது. என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C=
4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு
சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள
அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா ,
எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.எனவே
மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பை டி
அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine)
மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் ‘டைலர்’ சீரீஸை அப்பவே
கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர்
எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு
அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.சரி இங்க
விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன
அப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு
சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும்
ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean)
அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான்
பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே
போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது
என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ
அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ
ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த
நெறி. அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில்
அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு ‘டிக்கெட்’ ஆக மாறி
விடுவது போல.

source::::input from a friend of mine…
Natarajan

பூக்கார அம்மாவுக்கு கிடைத்த பெரியவா பாதுகை !!!

[image]

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை “அப்பா” என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரி யவா “ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!” என்பார். “காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்” என்பாள். பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது. ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், ” நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக் கூடாது!” என்று கட்டளை இட்டிருந்தார்.அவளத ு பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந& #3021;தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். அன்று, புதுக்கோட்டையிலிர& #3009;ந்து “ஜானா” என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன், “இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவா பாதுகையே இல்லை!” என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தா& #2992;். பூக்காரி வந்து நமஸ்காரம் செய்தாள். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், “இது உனக்குத்தான், எடுத்துக்கோ!” என்றார்.

“நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!” என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தா& #2992;். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம், இந்தப் பாதுகையைக் கொடு என்றனர். அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. “அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!” என்று புலம்பினாள். கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திவளுக்க& #3009; தூக்கிவாரிப்போடும& #3021;படி அதிஷ்டானத்திலிருந& #3021;து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை…..இது நான்கு மறை தீர்ப்பு.

Source: http://www.periva.proboards.com

Natarajan

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3660#ixzz2Kgdf4xiu

MahaPeriavar….HE is Everything !!!

Source:-Sage of Kanchi

A family went to have the darshan of HH. Along with them, they took one of their family friends who lived in the USA for some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron; he went along with him with utterly non-interested to meet Him. He was under the impression that HH was a fundamentalist, an uneducated monk. This NRI had no great respect at all for Him. Not only that, he uttered such inauspicious things about Him, ‘what does He know? Does He know English?’.

There was a big throng of devotees at the Mutt and the family was standing in a decent distance from Him. As usual, HH saw this family with His graceful eyes, and called all of them near to Him.

They all went near Him, the friend too.

After all the usual courteous enquires towards the family, the Master looked at the NRI friend and asked about his details, including his name, whereabouts, his predecessors, where he is working etc etc.

Then He asked, ‘you are born in India, and you know Tamil; your wife was also born in India and should know the mother tongue. When you two converse will it be in Tamil or English?’

The friend replied ‘We never use Tamil at home, we use only English. The same goes for the kids also.’

Then HH asked, ‘before speaking, you may have to think and conceive the sentence. Is the thought process in Tamil or English?’

The friend replied, ‘That too in English only’.

Some minutes later, an old lady came to HH’s darshan.

HH looked at the NRI person and said, ‘This old lady is now very poor, but once upon a time she was very rich. But even after she lost all the materialistic wealth her devotion towards the Mutt, Acharya and me has never changed even a bit. Could you please tell me what is the English word which will describe this unflinching devotion, which can’t be changed by external situations? I would like to know.’

The man was flummoxed. He thought and thought for a while but did not know that word.

HH told him, ‘please take your time and let me know’.

Even after some time, he couldn’t come up with the required word.

Then HH said, ‘Can I suggest one word? Could you please confirm whether the same can convey this meaning? EQUIPOISED’.

The man was spellbound and fell on HH’s lotus feet for pardon.

HH is SARVAGNAN, He knows everything and He is everything.

source:::::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3592#ixzz2KgbdMfWM

Horse Cart Owner “s Ride in A Car of the Devotee of Mahaperiavar !!!!!

Auditor Venugopal was a native of Salem. He was a staunch bhakta (devotee) of Maha PeriyavaaL. He was the auditor of Kanchi Sankara MaTham. It was his custom to say word for word that it was only Maha Periyavaa who guided him to that profession.

As he gained some popularity, Venugopal bought a car. The desire of showing to Maha PeriyavaaL the new car bought for the first time (in his life) rising in his heart, Venugopal was headed straight for Kanchipuram in his car. Only when he parked the car in front of the MaTham did he come to know that the Mahaan was camping in Kalavai! The car then started off its trip to Kalavai.

Parking the car outside where Maha PeriyavaaL was staying, Venugopal went inside the camp.

As he saw Venugopal entering, Maha Periyavaa asked him, “car vAngiyirukkiyo? (So you have bought a car?)”. And that was even before Venugopal started telling the sage about his new car. The auditor was dumbstruck. The Mahaan was one who knew time in all its three tenses.

“Yes”, he said slowly. For a moment he even thought if it was a mistake in buying the new car before he had a word with the Mahaan. But then the Mahaan never found fault with living comfortably within one’s means!

“It is a good thing only. Alright, you do an errand for me now!” said the Mahaan.

The auditor only nodded his head in affirmation, consenting to do an errand for the sage.

“You need to go a little distance from here and turn right. If you go along the road thereafter, you will sight a pond. An old man will be sitting on the banks of the pond. You bring him here in your car. What, will you do it?” The auditor started off even before the Mahaan finished.

Going like an arrow on its course, the auditor found the old man with a beard on the banks of a pond. He did not think if Periyavaa wanted to bring that old man. For he knew that there would be a thousand meanings in what Periyavaa said.

Going near the old man, the auditor spoke to him about the sage’s instructions.

“Did he call me? Then surely I shall come with you”, said the old man. Staggering, he got into the auditor’s brand new car, who took him to the Mahaan’s sannidhi (presence). The old man stood folding his palms before the sage.

“enna saukkiyama irukkiyA? (What, are you doing well?)” was the question Periyavaa asked the old man.

“edo irukkEn (somewhat fine)!”

The MaThams honours were given to the old man in accordance with the directions of the sage. After giving the old man dhoties, shawls and some money for his expenses to the man’s satisfaction, Kanchi Mahaan told the auditor: “Take him and drop him where he wants to alight and then come back!”

A car ride for the old man again. The auditor dropped him as he desired and then came back to the MaTham. He did not ask who that old man was, nor the sage said anything about it. Auditor Venugopal stood before the Mahaan, his hands humbly folded across his chest.

“The man you brought here–do you know who he is?”

The auditor nodded his head to say no.

“When I was a small boy, suddenly one day he brought me in his horse cart. I did not know why at that time. Only after coming here, they said that I was the 68th PIThAdhipati (pontiff)… I did not know Samskrutam at that time… I did not know Vedas… Only after coming over here, all those lessons. How many years have gone by, did you notice it? It was only this periyavar (respectable old man) who brought me here, making me sit inside his horse cart. He also did not know then why they asked for me here! How can I forget him? I suddenly remembered him, which is why I asked you to bring him here in your new car,” said Maha Periyavaa.

source:::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3647#ixzz2KSvXZTZd

காதில் விழுந்ததே !!!….பதில் கொடுத்த மகாபெரியவர் !!!!

காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை. தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை.

திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்& #2980; சமயம். மகானிடம் பெரும் பக்தி. அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் .

ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கையாக்கி விட்டது.

மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை, இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமாகிகொண்டு வர, ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும்.

பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு ” இத்தனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்” என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா, உங்கள் காதில் விழவே இல்லையா, என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அங்கே சென்று கதவை திறந்தபோது ” காஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம், மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்டே கொடுக்க சொன்னார்” என்றனர் வந்தவர்கள்.

காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார்? கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தந்தையின் வாயில் ஊற்ற, அவரது மூச்சு திணறல் நின்றது. அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம்.

மகான் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார்? “காதில் விழவில்லையா? என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
source:::: periva. proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3521#ixzz2JjCIhAQa

Mahaperiavar”s Words Are Words Of God …..

Once in the year 1959 Kanchi Mahaan camped at Nazarathpet near Chennai. As he needed sandal paste for his puja, he called a man named Ramamurthy and asked him to grind the paste.

The same day he ground sandal paste and gave for puja, Ramamurthy felt some uneasiness in his heart in the evening. He rushed to a doctor and got his health checked.

The doctor said after his tests, “Your heart is weak. You should not carry heavy weights or do strenuous work, especially something like grinding sandal paste.”

Ramamurthy came back to the Mahaan. As the sandal paste was needed on the next day too, the Mahaan called him and gave the work. He said, “ChandraMauleesvara would take care of everything. You grind and give me the sandal paste.”

Unable to disobey the Mahaan’s words, Ramamurthy ground and gave the sandal paste. Again he felt uneasy at heart and told PeriyavaaL what the doctor had said.

“It would be dangerous only if it is a heart attack. If the heart is weak some people might live even up to a hundred years. You do your work, don’t be afraid”, said the Mahaan. Were those not the words of God?

Thereafter Ramamurthy had the bhAgyam of grinding sandal paste for the Mahaan’s puja for a long time. No such uneasiness of heart ever raised its head on those occasions!

source::::periva proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3620#ixzz2JjAkRaMO