புறத்தோற்றம் ஒரு அளவுகோள் அல்ல !!!

[image]

மகான் கர்நாடாகாவில் 1979 – ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். பயணித்தப்பிறகு, மாலை நேரத்தில் ஓர் இடத்தில தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம்போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது, மகானை பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன் , குளிக்காத தோற்றத்தோடும் , படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களை போல் காட்சியளித்த அவர்களை பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானை பார்க்க வரும்போது குளித்துவிட்டு, சுத்தமான அடைகளை அணிந்துகொண்டு வரவேண்டாமோ?

மகானை வழங்கி எழுந்த அவர்களை கணிவுடன் பார்த்து, மகான் கேட்டார்,

“அத்யயனம் முடிந்தாகி விட்டதா?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

“ரிக்வேதம்” சொல்லுங்கள்” என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தை சொல்ல தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதை கேட்டு கொண்டிருந்தவர் – பிறகு அவராக கையமர்த்தியபின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” – மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தை சொன்னார்கள் இளைஞர்கள்.

“அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?

“நடந்துதான் வந்தோம்”

“திரும்பி போகும்போது?

“நடந்துதான் போகவேண்டும்”

மகானை பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே கடந்து வந்து இருகிறார்கள்.

உடம்பில் அழுக்கு ஏன் சேராது?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளை கொடுத்து, உண்ண உணவு கொடுத்து அனுப்பினார், மகான்.

அவர்களை பற்றி தவறாக நினைத்துகொண்டிரு;த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவர்.

“மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது”, என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படி தெரியும்? டாக்டர் மெய்சிலிர்த்தார்…

source::::www.perivaa.proboards.com

Natarajan

Read more:http://www.periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3141#ixzz2FJUawOXb

மகாபெரியவா …மருத்துவருக்கு மருத்துவர் !!!!

கல்யாணமாகி இரண்டே மாதங்கள் ஆன அந்த இளம் தம்பதிக்கு ஒரு பேரிடி விழுந்தது! ஆம். கணவனுக்கு தலைக்குள் கட்டி. பல டாக்டர்களிடம் காட்டி எல்லாவித டெஸ்டும் பண்ணியாகிவிட்டது.

“ஸ்கல்லை ஓபன் பண்ணி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!…” டாக்டர்கள் ரொம்ப ஈஸியாக சொல்லிவிட்டனர். அந்த பையனின் மனைவிக்கோ வயிற்றை கலக்கியது. ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகனை நாடி ஓடி வந்தனர். சாதாரணமாக கல்யாணமாகி “Honey Moon ” என்று தேன்நிலவு போகவேண்டியவர்கள் தேனம்பாக்கத்துக்கு வந்தார்கள். பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தபோது அந்த பெண் அடக்கமாட்டாமல் அழுதாள். அவள் அழுது ஓயும் வரை பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா….. ரொம்ப பயமா இருக்கு பெரியவா….கல்யாணமாய 07; ரெண்டு மாசம் ஆறது. பெரியவா என்ன சொன்னாலும் கேக்கறேன்….காப்பாத்துங்கோ பெரியவா!”….குழந்தை அழுவதை தாயார் சஹிப்பாளா?

“ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே……அதுவும், தலேல ஆபரேஷன் நேக்கு சரியா படலே…” மௌனமானார்.

தம்பதிகளும் சுற்றி நின்றவர்களும் இந்த மௌன இடைவெளிக்குப் பின் என்ன உத்தரவு வருமோ என்று காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து திருவாய் மலர்ந்தது.

“நீ என்ன பண்றே….காவேரிக் கரையோரமா இருக்கற எதாவுது ஒரு
க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல
ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்…… இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நா…இருந்தா, எல்லாம் செரியாயிடும்…”

தம்பதிக்கு சந்தோஷம் எல்லை தாண்டி போனது! நமஸ்காரம் பண்ணிவிட்டு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள். பெரியவா சொன்னபடியே ப்ராத காலத்தில் களிமண் காப்பு, ஸ்நானம், ஸந்த்யா வந்தனம், ஸ்வாமி தர்சனம், ஸ்வயம்பாகம் எல்லாம் அழகாக நாற்பது நாள் பண்ணினார்கள்.

ஊருக்கு வந்ததும், டாக்டரிடம் போனதும், அவர் செக் பண்ணிவிட்டு,
“ஒண்ணுமேயில்லியே ! கட்டி கம்ப்ளீட்டா கரைஞ்சு போய்டுத்து” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

உடனேயே இருவரும் ஓடி வந்தனர் பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். நன்றி பெருக்கால் வார்த்தைகளே வரவில்லை. “பெரியவா….இல்லேன்னா
எங்களுக்கு யார் இருக்கா?”

“நா….என்ன பெருஸ்…ஸா பண்ணிட்டேன்? “வைத்யோ நாராயணோ ஹரி” தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது” என்று அமைதியாக சொன்னார்

“பேஷஜாம் பிஷக்” [ மருத்துவர்க்கெல்லாம் மருத்துவர்].

source:::::input from one of my friends….

Natarajan

No Medicines Needed For You….

Scriptural Philosophy

Om Sri Gurubhyo Namaha

“If food is taken only after previous intake has been well digested, the body needs no medicine.”

– Sri Maha Periyavaa

___________________________________________

Adjunct Philosophy

Consuming balanced diet ensures good digestion and excellent health. A healthy person needs no medicine.

Dr. Andali V. Raghunath

source:::::kksfusa.org …divine message…
Natarajan

திருட்டு போன பிரசாதம் திரும்ப வந்த கதை !!!!

[image]

மகா பெரியவாளை முதல் முதலாக காஞ்சியில் தரிசிக்க வந்த தம்பதிகள், அந்த பிரசாதத்தை வாங்கிகொண்டு ரயிலில் தஞ்சை போக முடிவு செய்தனர். ஸ்டேஷனில் இறங்கி டிக்கெட்டை எடுக்க பர்ஸைத் தேடியபோது, அது அங்கே இல்லை. பர்ஸ் காணாமல்போனது கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. பர்ஸுக்குள் இருந்த மகானின் பிரசாதம் அல்லவா காணமல் போய்விட்டது என்கிற கவலைதான் அவர்களுக்கு.

தங்கள் ஊரான பெங்களுருக்கு போன பிறகும் இதே கவலையாக இருந்தபோது, எல்லாம் தெரிந்த மகான் அவர் கனவில் தோன்றி, “உனக்கு பிரசாதம் பத்திரமாக வந்து சேரும்”, என்றார்.

அவரது அருள் வாக்கு பொய்க்குமா என்ன?

கனவில் அருளியது போலவே, மறுநாள் தபாலில் ஒரு கவர் வந்தது.

உள்ளே ஒரு கடிதம்.

“நான்தான் உங்கள் பர்ஸை திருடினேன். நீங்கள் அதில் அட்ரஸ் வைத்து இருந்தீர்கள் – பணத்தை எடுத்துக்கொண்ட நான், அதில் இருந்த பிரசாதத்தை தூக்கி எறிய மனமில்லாமல், உங்களுக்கே அனுப்பியிருக்கிறே

இப்படிக்கு
தஞ்சாவூர் ஸ்டேஷன் திருடன் ”

திருடனுக்கும் அப்பிரசாதத்தை திருப்பி அனுப்பத் தோன்றியது மகானின் கருணை உள்ளத்தால் தானே?

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

source:::::kanchi perivaa forum

Natarajan

 

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3130#ixzz2EopUbMpn

அறநெறி சங்கரர் …மஹா பெரியவா !!!

source::::input from one of my friends….

Natarajan

ஸமார்த்த ராமதாஸின் புனித நினைவு கமழும் ஸதாரா. அப்பகுதிக்கு இயல்பான ஏகாந்த அமைதி. வைகறையின் சாந்தத்தில் இணைந்து தோய்ந்த அதிகாலை நாலரை மணி. ஸ்ரீ காஞ்சி முனிவரின் குரல் கேட்கிறது. முதல் நாளெல்லாம் பெரியவர் மௌனமானதால் இன்று தெய்வத்தின் குரலைக் கூடுதல் ஆவலுடன் அந்த வேளையிலும் அங்கே குழுமியிருந்தவர்கள் கேட்கிறார்கள்.

” ஆமாம், வாய் மௌனமானாலும் ராத்திரி மூக்குக்கு உப்புமா வாஸனை எட்டித்து! நான் சொல்ல வேண்
டாம்னு பார்த்தாலும் என்னவோ பாவம், இங்கே இருக்கிற ரெண்டு மூணு பேருக்கு ஏற்படற சிரமத்தை எப்படி சொல்லாமயிருக்கிறதா? சாதுர்மாஸ்யம்னு நான் வந்து ஒக்காந்துட்டேன். இன்னம் ரெண்டு மாஸத்துக்கு இந்த இடத்தை விட்டுப் பொறப்படறத்துக்கு இல்லை. ஆனா இது என்ன டவுனா, பட்டணமா? இங்கே பார்த்துப் பார்த்துப் பண்ணறத்துக்கு ஜனக்கட்டு இருக்கா? இந்தச் சின்ன விஷயம் என்னைப் பாக்க வரவாளுக்குத் தெரிய வேண்டாமா? ப்ரியத்தினாலே, பக்தியினாலேதான் எங்கெங்கிருந்தோ எத்தனையோ கஷ்டப் பட்டுண்டு வரேள், வாஸ்தவம்தான். ஆனாலும் பிறத்தியாருக்கு ச்ரமம் தரலாமா? என்னை ஏதோ ஒரு வேளை பாத்துட்டு அப்படியே நகந்துண்டே இருக்க வேண்டியதுதானே? போஜனம், டிஃபன், பலகாரம்னு வந்தவாளுக்குப் பண்ணி வைக்க இந்தச் சின்ன ஊர்லே ஏது வசதி? இங்கே இருக்கப்பட்ட ரெண்டு மூணு பேர்தானே கஷ்டத்தைப் பாக்காம எல்லாம் பண்ணவேண்டியிருக்கும்? அவா நல்ல மனஸோட, ஒண்ணும் மொணமொணக்காமதான் பண்றான்னாலும், என்னைப் பராமரிக்கிறதே கஷ்டம். அது போறாம, என்னைப் பாக்க வரவா, பார்க்க வரவாளைப் பார்க்க வரவான்னு பல பேருக்கு அவாளை சுச்ருக்ஷை பண்ண வைக்கிறது ஸரியா?”

உப்புமா தாளிப்பில் சற்றுக் கார நெடி கூடுதலானது போல் பெரியவரின் குரல் த்வனித்தாலும், அன்பு என்னும் சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடுகிறது என்பதும் அக மூக்குக்குத் தெரிகிறது. பணிவிடையாளரிடம் எசமானரின் பரிவன்பு!

“எங்கே அந்த ‘பெல்காம் —-இருக்கானா?” என்கிறது நெய்–மிளகாய்க் குரல், மிளகாயை விட்டு விட்டு!

“இதோ இருக்கேன்”—என்று தண்டம் ஸமர்ப்பிக்கிறார் ‘பெல்காம்’…..

“நான் இந்த மஹாராஷ்ட்ராவிலே சுத்த ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”

மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே வர்ஷிப்பதாக உணர்ந்த ‘பெல்காம்’—தான் அடிக்கடி பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருப்பதை இன்று அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் உற்ற பெருமிதம், அவர் ‘இத்தனாம் தடவை’ என்று சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.

“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை வர முடியறது?”

“எனக்கு ரெயில்வே உத்யோகமொல்லியோ? பாஸ்லே வரேன்”

“ஓஹோ! ஸரி! உன் பாசை இங்கே வை” என்று தமக்கு முன்

தரையைத் தட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.

பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.

இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின் திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச் பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது!.

பெரியவர் பாஸை உன்னிப்பாக கவனிக்கிறார்; பேசத் தொடங்குகிறார். நெய்யிலே மறுபடி மிளகாய் வறுபடுகிறது. ” பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே. எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ் இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு உண்டுன்னு இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக் கணக்கா ஒரு கையெழுத்துக் கூட காணும்! நீ என்ன பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக் கொண்டு போய் ‘சரண்டர்’ பண்ணணும். இனிமேல் உன் கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே என்னைப் பார்க்க வரணும்.”

ஹரஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.

இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச் சேர்ந்த சிஷ்யப் பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன்வருகிறார்.

இதற்குப் பதினோறாண்டுகளுக் முன் முனிவர் ஸ்ரீமடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து பணக் காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று இவர் நன்கறிந்தவர்தான். ஆயினும் பெரியவாளின் திருவுளக்கருத்தினர் படியே செலவழிக்கப் படவேண்டுமென்று அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே இந்த ஆயிரத்தை செலுத்துகிறார்.

பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?

“எங்கே ‘பெல்காம்’?” என்கிறார்.

திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.

நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!

பெல்காமில்……….நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்

திட்டங்களைப்பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார், பெரியவர். இடித்த

மேகமே இன்மழை கொட்டுகிறது.

அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்

பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.

“பணத்தை எப்படிக் கொண்டு போவே?”

“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் ‘பெல்காம்’

பொறுப்புணர்ச்சியுடன் நிறைவுடனும் அபார உலகியல்

அறிவுடனும் முனிவர் சொல்கிறார்: ” அதெல்லாம்

ஸரியில்லை தொலைஞ்சு போச்சுன்னா, நீயோ, அவனோ

( கொடுத்தவரோ) ஜவாப் இல்லை. நான்தான் ஜவாப்.

( கொடுத்தபிரமுகரைப் பார்த்து) ,நீ இந்தத்தொகைக்கு அவன்

பேரிலே ‘ட்ராஃப்ட்’ வாங்கிக் குடுத்துடு.”

அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன, ஸமயோசிதம்

என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும் இப்படி அற்புத

முன்னுதாரணம் தருவதே முனிவரின் இயல்பாயிருக்கிறது.

– மஹா பெரியவாள் விருந்து, ரா.கணபதி அண்ணா

தும்பிக்கை ஆழ்வார் ….பெரியவா சொன்னது !!!!!

”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும, தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயு&;்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார் .

ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்;. சூடுன்னா அப்படியொரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன& . இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்;ேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகதான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவா.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கான&; உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதா ;ன், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு ; கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்& #2965;ோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதை& ம் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்‘னு சொல்லுவா!”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.

source::::kanchiperivaaforum
Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3023#ixzz2E39X7qYP

Kaveri Prasanna Maha Ganapathi Temple …

[image]

Thiruvaiaru is a ‘punya bhoomi’ with 5 rivers flowing through it ( Cauvery, Kudamuruti, Vadavaru, Vennaru and Vettaru ). About 9 km from here is Thirupoonthuruthi and a nearby village is ‘Nadukkaveri’.

It was the year 1942. The house of Chinnaswamy Iyer. He has a son, Ramachandran and his wife is Sita.They have been married for some time and longing for a child. They are of course devotees of Periyava.

The Maha Swamy visited the village and walked through the length of it with His sishyas and devotees.

At Chinnaswamy Iyer’s house, Sita was busy doing a ‘Kolam’. Periyava, walking at a brisk pace, suddenly stopped near Sita . She was completely taken by surprise and was speechless. With tears in her eyes she prostrated before Periyava. Periva asked her, “Where is your Raman?. Saying that He entered the house, looked around and opened a room (which was actually a dumping place) which had been kept closed for a long time, dusted off the floor with a ‘thundu’ and sat down.

By this time Raman and Sita were there. He looked at Raman and said ‘go get milk from the udders of the cow in a sombu’.

Raman did as was told. Then Periva did japa and told Rama, ‘go to Kudamuruti river, pour some milk in it and the rest on the banks of the river. Dig where you poured the milk and you will hit a basement. There, you build a temple for Vinayaga. You will live happily’. So saying, He got up and left.

Raman did as Periva said, and indeed found the basement and built a Ganesha temple there. Soon after, Sita delivered a male child and they named him ‘Ganesan’.

Well, the temple ? It still stands there in Nadukkaveri – ‘Kaveri Prasanna Maha Ganapthi temple’.

source: yahoo groups…and kanchi periva forum

Natarajan

Read more:http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3044#ixzz2E36AJPDt

படித்து சிலிர்த்தது !!!..மகாபெரியவாவின் மருத்துவம் !!!!!

நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி. நெடுங்காலத்திற்கு முன் நடந்தது.

ஒரு சிறுவனின் சருமத்தில் கரும் திட்டுகள் தோன்றி உடல் முழுவதும் பரவி விட்டது. பார்க்கவே ஓர் அருவருப்பு. உடன் படிப்பவர்கள் அவனை ஒதுக்கி ஓடினார்கள்.

உடல் வியாதி பாதியும் மனோ வியாதி மீதியுமாய் சாம்பி போன பிள்ளையை தாயார்க்காரி தயாமூர்த்தியிடம் அழைத்து வந்து உருகி வேண்டினாள்.

நம்ப வொண்ணாத அருள் வாசகம் ஐயன் திருவாயில் இருந்து வந்தது. ‘கொழந்தே, இங்கே என்னோடே மூணு நாள் இருக்கியா?’

அவன் பதில் சொல்லும் முன்பே தாயார்க்காரி, ‘பாக்கியம், மூணு என்ன, எத்தனை நாள் வேணுமானாலும் பையன் பெரிவாளோட இருக்கட்டும்’ என்றாள்.

பையனும் மனமார ஒத்துக்கொண்டான்.

‘நான் என்ன சாப்பிடறேனோ, அதைத்தான் நீயும் சாப்பிடணும். செய்வியா?’ என்றார் ஸ்ரீ சரணர்.

‘பெரியவா என்ன சொன்னாலும் செய்யறேன், உடம்பு சரியா போனா போறும்’ என்றான் பையன்.

‘நான் சாப்பிடறதுக்கு மேலே ஒண்ணே ஒண்ணு மட்டும் நீ அப்பப்போ சாப்பிடணும் – உப்பு போடாத மோர் அடிக்கடி சாப்பிடு. காபி, டீ வேண்டாம்’.

‘பெரியவா சொல்றபடி’.

அடுத்த மூன்று நாள்கள் அந்த ‘யாரோ பையன்’ ஸ்ரீ மடத்தில் பெற்ற அதீத கவனிப்பு உண்டே! பார்த்து பார்த்து, மோர், MORE AND MORE மோர் கொடுத்தார்கள். பெரியவாளும் அது பற்றி அக்கறையுடன் விசாரித்த வண்ண இருந்தார்.

சாக்ஷாத் ஸ்ரீ பெரியவாள் திருவமுது கொண்ட ஆகாரத்தின் மிகுதி சிறுவனுக்கும் வழங்கப்பட்டது.

அது என்ன ஆகாரம் என்பதல்லவா முக்கியம்?

பச்சை வாழை தண்டித்தான் பொடிபொடியாக நறுக்கி எவ்வித தாளிப்பும் இல்லாமல், சிறிது தயிர் மட்டும் கலந்திருந்தது. அதுவே பெரியவாளுக்கு பிக்ஷை. சிறுவனுக்கு பிரசாதம். பெரியவாளின் பிரசாதம் ஆதலால், அதுவே சிறுவனுக்கு அறுசுவை விருந்தாக ருசித்தது.

மூன்று நாளில் நோய் நன்கு நிவர்த்தி ஆயிற்று. சாம்பி வந்த குழந்தை மலர்ச்சி கண்டான்.

‘ஆத்துக்கு போனாவிட்டும் ஒரு மாசம், உப்பு, புளி, மொளகா, சேர்க்காம சாதுவா சாப்பிடு. இந்த ‘ஒடம்பு’ ஒரு நாளும் வராது.’ என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினார் வைத்தியநாதன்.

குஷியாக ஓடினான் பாலகன்.

பெரியவாளின் அன்பு கரிசனம் வாசகர் நெஞ்சை தொடவே செய்யும். ஆனாலும் ‘ஆழ’த்தொடும் என்று அடைமொழி சேர்த்ததற்கு இதனினும் காரணம் உண்டு.

பெரியவாள் அக்காலத்தில் பச்சை வாழை தண்டே உண்டாராக்கும், அதையே பாலனுக்கும் பகிர்ந்து அளித்தாராக்கும் என்று வாசகர் எண்ணக்கூடும். உண்மை அது அல்ல. பெரியவாளின் பிக்ஷையை பையனின் உணவாக்கவில்லை. பையனுக்கான உணவைத்தான் பெரியவாள் தமது பிக்ஷை ஆக்கி கொண்டார்…

ஆம், அது பெரியவாள் ஓரளவு காய்கறிகளுடன் அன்ன பிக்ஷையும் அவ்வப்போது ஏற்று வந்த காலம் தான். அது போன்ற சமயத்தில் பையனுக்கு இந்த பத்தியம் அவசியம் என்று விதித்த மஹா ஆத்மன், ஒரு குழந்தை நாவை அவ்வாறு கட்டுபடுத்தும் போது தாமும் அந்த கட்டுபாட்டை ஏற்க வேண்டும் என்றே கருதி காரியத்தில் செய்து காட்டினார்.

சேய்க்கு வந்த நோய்க்கு அந்த அருட் தாயும் மருந்து உண்டாள் என்றும் சொல்லலாம்
source:::: kanchi perivaa forum
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3020#ixzz2DzAiUwl8

The SIVAM which Saved Sivan !!!!

 The ‘Sivam’ which saved the human Sivan.
« Thread Started on Nov 27, 2012, 10:40pm »

[image]

source::::: kanchi periva forum  

Natarajan

 

THE ‘SIVAM’ WHICH SAVED THE HUMAN SIVAN!

This story was narrated by Pattabi Sir, who had served Mahaperiava for over 25 years. Sri Pattabi narrates it to Mr. Charukesi. I have translated it from his Tamil book ‘Kamakoti Periava’, published by ‘Vikatan Pirasuram’.

This incident concerns one great devotee of Mahaperiava by name ‘Sivan’. He hails from a village near Thirunelveli; from there he used to visit SriMatam very frequently to have His Dharsan.

He belonged to the ‘Veera Saiva’ sect. his forehead will be smeared with the sacred ash and he will look like a ‘Sivap pazham’; very hygienic, and follows ‘Aachaaram’ strictly. He doesn’t eat onion; he has so much control over his life style.

He is a wealthy person, but, for him, everything is ‘Periava’ and only ‘Periava’; Is eighty years old. He considers Periava as his ‘Dheyvam’ and respects Periava’s words as ‘Vedha vaakku’

Whenever he comes to Kancheepuram, he carries an yellow bag, which contains a dhoti, a towel, sacred ash and a little cash. If he goes and sits in front of Periava, he loses the concept of time; even if he stays for ten days, it is never enough for him.

But, does he talk to Periava? No!

Does he ask Him to clarify any doubt? No!

“ It is not necessary for Periava to talk to me! What is important is the thought that I am in His heart and mind!”——-he will insist.

If he goes outside of his house, he doesn’t eat anything, nor does he drink even water.

Once, after Dharisanam, he went to Periava to ask for His leave.

Instead of the usual custom of waving the hand and blessing him, Periava asked him, “ you are leaving for your home? Why don’t you at least buy drink of ‘soda’ and have it? Ok! At least do it on the way “

Sivan boarded a bus in Chengalpattu and left for Thirunelveli. In the same bus, were also travelling four youngsters; the ruckus they created was unbearable. But who can tell those rude persons?

As the bus neared Madurai, the driver of the bus stopped it in a small village. And there was a petty shop on the roadside where the bus stopped. Looking from the window of the bus, one could notice a lot of ‘soda ‘ bottles, stacked there. Sivan saw them. Immediately he remembered Periava’s words “ at least do it on the way”

Sivan wanted to drink water. So, in order to quench his thirst and at the same time, obey Periava’s advice, he got down from the bus, had a ‘soda’ and returned to the bus. But when he came to the seat where he was sitting, he couldn’t find his yellow bag! Though it contained nothing of value, it was on his seat for identification.

Seeing this, the four youngsters, called him and said , “ hey, old man! ( in Tamil, “ யோவ் பெரிசு!—–which is an insulting way of calling elders practiced by some youngsters ) are you searching for your yellow bag?. Look! It is there on the back seat. Go and sit there!”——their tone was full of sarcasm.

The yellow bag was safe in the seat just before the last seat. Deciding not to pick any quarrel with them, Sivan went and sat there. Two among the four youngsters went and sat where Sivan was sitting till then.

It was night time; the bus started moving. After an hour or so, suddenly a lorry coming from the opposite direction came and collided head on with this bus! The two youngsters, who displaced Sivan from his earlier seat, and sat there, and who were talking to him in an insulting manner and tone of language, died on the spot! And Sivan escaped without even a small bruise!

Why did Periava tell him to buy a ‘soda and drink, at least on the way?

Why did the bus driver stop the bus in that small village, that too in front of a petty shop?

Why the sight of ‘soda’ bottles stacked there fell on his eyes?

His life was saved only because he went to drink a soda to honour Periava’s advice!

How did all this happen?. Thinking about it, Sivan cried uncontrollably!

Although his life was saved, he was terribly upset that two young lives were lost on the spot.

But one thing was sure, he realized. For him also danger was lurking around the corner! Only the ten days’ Dharsan of Periava has saved his life. Think and think and think about it, only one thing was certain. Periava’s words, “ at least have a soda on the way” were the words from God Himself!

The above incident happened, after Periava returned to Kancheepuram after completion of His Padha yathra, in the year 1983.

Sri Pattabi continues, “ Sivan was narrating this to me. I, then went and told Periava about this.

“Sivan is well?” asked Periava and continued, “ He told you that I only saved him? Where did I save him? That Parameshwaran only saved him”

I was simply overwhelmed hearing that!”

Thus , Pattabi finished his emotional narrative!

Read more:http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3024#ixzz2DfWmqh8n

மகாபெரியவாளுக்கு முதல் ஸ்ரீபாத பூஜை செய்தது யார் ?

பெரியவாளின் இளமை வாழ்க்கையில்-ஒரு பகுதி.
[ஜாதகமும்,ரேகையும்]

திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்]
கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை.
வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி
வந்தாகிவிட்டது….காணோம் . “ஒருவேளை சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?” என்று
போய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!.

இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப்
பட்டது.அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து,
“குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கள்.பத்திரம ாக இருக்கிறார்கள்.
சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு
நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச்
சொன்னார்!” என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும்
புரியவில்லை. “எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக்
குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?”
என்பது புதிராக இருந்தது.

உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக
மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார்,
தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது.பி ன்னால் இவனுடன்
சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே?
அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக்
கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன்
முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில்
பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார்.
இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே
கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்கு
சிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய்விட்டான்.

ஆச்சார்யரோ, “முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?”
என்று கேட்டார். “இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு
தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்” என்கிறான் குழந்தை.
இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும்
வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!

எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது
இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள்
ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி
ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்?
“இது என்ன தேறுமா…தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?”
என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமியினĮ 1; அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார்.
அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்கு
நெருங்கிய நண்பர்.

“வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு.
இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?” என்று காட்டினார்.அதைப்
பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை.சுவாமிநாத ன்
சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு
பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல
வேண்டும். அதனால், “சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக்
கவலையேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும்
குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய
ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு.
சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!”
என்று பெசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த
யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க
ஆவல் கொண்ட ஜோசியர்,அங்கிருந்த சுவாமிநாதனிடம்,”போய ;்
கால் அலம்பிண்டு வா” என்று கட்டளையிட்டார். அலம்பிக்
கொண்டு வந்தவனை, நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக்
கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே
அலம்பினார்….துடைத்தார் . சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படிய ே
கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

“விடுங்கோ மாமா!” என்ற சிறுவனின் குரலோ, “என்ன இது!
குழந்தை காலை பிடிச்சுண்டு…விடு” என்ற சுப்ரமணிய சாஸ்திரியின்
குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.

“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ
மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்கள் !” என்று நினைத்தார் போலும்.

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை,
பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன்
அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்
புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம்
இந்த வெங்கட்ராமய்யருக்கு த்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!
விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்துவிட்டார்
என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!.

source: kanchi peivaa forum
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3019#ixzz2DfTPbBdk