” படித்து ரசித்தது …” ” குடத்திலே கங்கை அடங்கும் ” !!!

சிலேடை விருந்து’ நூலிலிருந்து:

அகத்தியர், தன் கமண்டலத்தில் சமுத்திரத்தை அடக்கினார்; அது, அவரது தவ வலிமை.
காளமேகப் புலவர், குடத்திலே கங்கையை அடக்கிக் காட்டுகிறார். இது, அவரது தமிழ் வலிமை.
‘குடத்திலே கங்கை அடங்கும்…’ என்ற ஈற்றடி கொடுத்து, வெண்பா தருமாறு காளமேகத்திடம் கேட்டனர் மற்ற புலவர்கள்.
குடத்திலே, கங்கையை எப்படி அடக்குவது? காளமேகம், மறுநொடியே தம் தமிழ் மந்திரத்தால் அடக்கிக் காட்டினார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த ஈசன், சடாம
குடத்திலே கங்கை யடங்கும்.
பொருள்: விண், மண் மற்றும் மலை என்று எதற்கும் அடங்காத கங்கை, இறைவனின் சடாமுடியில் (சிவபெருமான் தலையில்) அடங்கியிருக்கிறது!

Source:::: http://www.dinamalar.com

Natarajan

Leave a comment