“டாக்டர், பையன் சரியாகவே சாப்பிடமாட்டேன் என்கிறான். ஆப்பிள், ஹார்லிக்ஸ் எது கொடுத்தாலும் வேண்டாம் என்கிறான்…., பசி எடுக்கிற மாதிரி டானிக் கொடுங்க” என தனது ஆறு வயது பையனைக் காட்டி கேட்டாள் ரேவதி.
மருத்துவர் கொடுத்த சீட்டுப்படி டானிக் வாங்கிக்கொண்டு கணவனுடன் காரை நோக்கி நடந்தாள். வாசலில் ஒரு பிச்சைக்காரி “”அம்மா, பிள்ளைக்குப் பசிக்குது….ரெண்டு இட்லி வாங்க காசு கொடுத்து உதவுங்கம்மா” என்று கெஞ்சினாள். “”எங்கப் பார்த்தாலும் பிச்சைக்காரங்க தொல்லை” என்று அலுத்துக்கொண்டு காரில் ஏறினாள் ரேவதி.
டிரைவர் சீட்டில் அமர்ந்த அவரது கணவனிடம் கையேந்தினாள் அந்தப் பிச்சைக்காரி.
கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அவளிடம் 20ரூபாயைக் கொடுத்தார் ரேவதியின் கணவர்.
“”ஏங்க…, பிச்சைக்காரிக்கு இருபது ரூபா கொடுக்கணுமா?”
“”ரேவதி, நம் பிள்ளைக்கு பசி எடுக்கணும்னு இப்போ ஐந்நூறு ரூபாய் செலவழிச்சுட்டு வர்றோம்.., அந்த பிள்ளைக்கு பசியை போக்க இருபது ரூபாய் கொடுத்தது தப்பா? இது போன்ற ஏழைக் குழந்தைகளின் பசியை நீக்க உதவினால் நம்ம பிள்ளை தானாக பசி எடுத்து நல்லா சாப்பிடுவான்” என்றார் ரேவதியின் கணவர்.
கணவனின் வார்த்தைகளால் உண்மையை உணர்ந்தாள் ரேவதி!
Source….www.dinamani.com
natarajan