
bbc
மெரீனா கடற்பரப்பு மிகவும் மாசடைந்துள்ளது

bbc
கழிவு நீர் கடலில் கலப்பதால் கடல் பரப்பு கறுப்பாக காட்சியளிக்கிறது
சென்னையில் பெய்த மழையின் காரணமாக, ஆறுகளின் நீர் வங்கக் கடலில் கலந்ததால், மெரீனா கடற்கரைப் பகுதி மாசடைந்து கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது
சமீபத்தில் சென்னையில் பெய்த மழையின் காரணமாக, ஆறுகளின் நீர் வங்கக் கடலில் கலந்ததால், மெரீனா கடற்கரைப் பகுதி மாசடைந்து கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்படுவதோடு, துர்நாற்றமும் வீசிவருகிறது.
தமிழகத்தில் தற்போது பெய்துவரும் பருவமழையின் காரணமாக, இந்த வாரத் துவக்கத்திலிருந்து சென்னையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் ஓடும் கூவம், அடையாறு ஆகிய நதிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
சென்னையின் மையப் பகுதிகளின் வழியாக ஓடும் இந்த ஆறுகளில் எப்போதுமே கழிவுநீர் மட்டுமே தேங்கியிருக்கும் என்பதால், இந்த மழையை அடுத்து அந்தக் கழிவுநீர் தற்போது வேகமாக கடலில் கலக்க ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னைத் தீவுத் திடலை ஒட்டியுள்ள பகுதியில் ஆரம்பித்து, அடையாறு முகத்துவரம் வரையிலான சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் மாசடைந்துள்ளது.
இதனால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கடலுக்கு வெகுதூரத்திலேயே நின்றுவிடுகின்றனர். ஒருபோதும் கடல் இப்படியிருந்து பார்த்ததில்லை என்கிறார் இன்று கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களில் ஒருவர்.
குழந்தைகளும்கூட கடல் நீரிலிருந்து விலகியே அமர்ந்திருந்தனர்.
இரண்டு ஆண்டுகளாகவது கூவம், அடையாறு நதிகளை சுத்தமாக வைத்தால்தான் இதனைச் சரிசெய்ய முடியும் என்கிறார் ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளரான ஒரிசா பாலு.
சென்னையில் தனமும் உருவாகும் ஐந்தரைக் கோடி லிட்டர் கழிவுநீரில் குறைந்தது 30 சதவீதம் தண்ணீராவது கூவம், அடையாறு ஆறுகளில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக 2005ஆம் ஆண்டில் பெய்த கன மழையின்போது இதே போல நேரிட்டதாக இந்தக் கடல் பகுதியைக் கவனிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
Source…..www.http://tamil.thehindu.com/bbc-tamil/
Natarajan