துணையாய் தொடரும் நிழல்கள் ….
………………………..
பிறந்த மண்ணை முத்தமிடும் குழந்தை தன் அன்னையின் நிழலில்
மழலை அது நடை பயிலும் தந்தையின் நிழலில் !
ஒரு நல்ல ஆசானின் நிழலில் கல்வி ….தக்க பருவத்தில்
இல்லறம் செழிக்க நல்லற நிழலாய் தொடரும் ஒரு வாழ்க்கை துணை !
துணையாய் தொடரும் நிழல்கள் இப்படி எத்தனை எத்தனை… ஒருவர்
வாழ்வில் !
காலம் மாறும் …காட்சியும் மாறும் ! தொடரும் நிழல் துணையும்
உருமாறும் !…
காலத்தின் கோலத்தில் மாற்றம் பல நிகழ்ந்தாலும் தொடர்ந்து
உறு துணையாகும் ஒரே ஒரு நிழல்… நம் வாழ்வில் !
காட்சியும் சாட்சியும் தேவை இல்லை இந்த நிழலுக்கு !
அதுதான் நம் மனசாட்சி ! வாழ்க்கையின் நல்லாட்சிக்கு
என்றும் துணையாக தொடரும் அதன் அரசாட்சி !
Natarajan