சினிமாக்களில் வருவது போல திடீரென ஒரு நபர், ஒரே பாடலில் பிரபலமாகிவிடமுடியாது. அதற்கு மிகப் பெரிய செயல்முறை இருக்கிறது. உங்கள் துறையில்,உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் உங்களை ஒரு பிரபலமாகக் காட்ட இந்தவிஷயங்கள் கைகொடுக்கும்.
முதலில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட்விஷயங்களை மாற்றுங்கள். ‘நீங்கள் எதையும் தாமதமாக செய்பவர்’ என்றுஉங்கள் அலுவலகம் நினைத்தால், அதனை உடைத்து வேகமாக செய்யப்பழகுங்கள். நீங்கள் எப்போதும் சாதாரண உடையில் வருபவர் என்றால்’கொஞ்சம் ஃபார்மலாக மாறுங்கள். நீங்கள் சில விஷயங்களுக்கு சரிப்படமாட்டீர்கள் என்று சொல்லி வைத்திருந்தால், அதனை தனியாக செய்தாவது,உங்களை அந்த வேலைக்கு நீங்கள் சரியானவர் என நிரூபியுங்கள். இப்படிஎல்லாம் மாறியபின், உங்கள் அலுவலகம் உங்களை உற்றுநோக்கத் துவங்கும்.மாற்றம்தான் இந்த செயல்முறையின் முதல் படி.
வேகம்!
உங்களைப் பற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்தாலோஅல்லது உங்களது துறையை நிர்வகிப்பவருக்கு மட்டும் தெரிந்தாலோ, அதுஉங்களை நீங்களே ஒரு பிராண்டாக மாற்ற உதவாது. உங்களைச் சுற்றியுள்ளஇடங்களில் ஏற்கெனவே பிரபலமாகவோ அல்லது பெரிய தாக்கத்தைஏற்படுத்தக் கூடியவர் என்ற நிலையிலோ இருப்பவர், உங்களைப் பற்றிய ஒருநல்ல விஷயத்தை பிரபலப்படுத்துமாறு சில வேலைகளை செய்யுங்கள். அதுஉங்கள் திறமையைத் தாண்டிய, பாராட்டுப் பெற தகுதியான வேலையாகஇருக்க வேண்டியது அவசியம். இவர்களால் உங்கள் பிராண்ட் வேல்யூ உயரும்வகையில் அந்த வேலைகள் அமைந்தால், தானாகவே உங்கள் மீது ஒரு பிரபலம்என்ற இமேஜ் உருவாகும்.
இந்த மாற்றத்துக்கான செயல் முறையில், நான் என்ற வார்த்தையை கிட்டத்தட்டமறந்துவிடுங்கள். நாம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். உங்கள்வேலை வெற்றி அடைந்தால் அதனை செய்த அனைவருக்கும் இடமளியுங்கள்.அதில் பணிபுரிந்த அனைவரையும் தனித்தனியே பாராட்டுங்கள். தோனி எந்தஒரு வெற்றி பேட்டியிலும் ”நான்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதேஇல்லை.
தொடர்ச்சி!
இப்படி செய்தால் உங்களைப் பற்றிய ‘பிராண்ட் இமேஜ்’ தானாகவே உயரும்.உங்கள் துறையில் நீங்கள் தான் கபாலி. நீங்கள் சொல்லும் விஷயங்கள்இணையத்தில் வைரலாகிறதோ இல்லையோ, உங்கள் குழுவில் வைரல் ஹிட்அடிக்கும். உங்கள் கருத்துகள் செயல்முறைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.
by…
ச.ஸ்ரீராம் and input from a friend of mine
