பொம்மைகள்
…………
மண் பொம்மை மர பொம்மை நாங்க எல்லாம் இன்று
உங்க வீட்டு கொலு படியில் … எந்த படியாய் இருந்தாலும்
எப்படியும் ஒரு இடம் உண்டு எங்களுக்கு உங்க வீட்டு கொலு
படியில்…பேசா பொம்மை நாங்க என்று நீங்க நினைத்தாலும் நாங்க
பேசிக்கொண்டேதான் இருப்போம் எங்களுக்குள் கொலு படியில்!
பேசும் மனிதர் நீங்கதான் இப்போ பொம்மை மாதிரி !
அலை பேசியும் கையுமாய் அலையும் நீங்க பேசுவது அதனுடன் மட்டுமே !
உங்க குழந்தை கையில் கூட ஒரு அலை பேசி இப்போ !
கையில் அலை பேசி இல்லாத நேரம் உங்களுக்கு மௌன விரதம்
உங்க மடிக்கணினியுடன் மணிக் கணக்காக !
பொம்மை எங்களை “ரோபோ “வாக பேசவைத்து வேலையும் செய்ய வைக்கும்
சாதனை செய்யும் நீங்க உங்க வீட்டில் உங்களுக்குள் பேச்சை
குறைத்து சொந்த பந்தம் தொலைப்பது ஒரு பெரும் வேதனை !
பொம்மைகள் நாங்க காத்திருக்கிறோம் உங்களை எல்லாம்
கொலு படியில் பொம்மைகளாக உட்காரவைக்கும் ஒரு காலத்துக்கு !
காலம் மாறும் நிச்சயம் !…காட்சியும் மாறும் அச்சமயம் !
Natarajan
My Tamil Kavithai appeared in http://www.dinamani.com on 10th Oct 2016