ஒற்றை சிறகோடு …
——————-
சிறகடித்து விண்ணில் பறந்து திரிந்த எனக்கு
பிறந்தாய் நீ ஒற்றை சிறகோடு குழந்தாய் !
சிறகு ஒன்று இல்லையென்பதால் மட்டும்
நீ ஒரு சிறைக் கைதி அல்ல கண்ணே !
ஒற்றை சிறகு பறவை நீ என நான்
உன்னை சிறை வைக்க மாட்டேன் தரையிலே !
நீயும் மறந்து விடு “நான் ஒரு ஒற்றை சிறகு
பறவை என்று..”
உன் பிஞ்சுக் கால் இரண்டும் தரையில் தட்டி தட்டி
மண்ணில் நீ நடை பயிற்சி முடித்து அந்த
விண்ணில் நீ பறக்க நினைக்கும் நேரம் நான் இருப்பேன்
உனக்கு ஒரு மற்றொரு சிறகாக !
என்னைப் போலவே உன்னையும் விண்ணில்
பறக்க வைப்பேன்…. தாய்ப் பறவை நான் !
ஒற்றை சிறகோடு விண்ணில் நீ பாயும்
நேரம் என் கண்ணில் தெரியுது இப்போதே !
மனம் இருந்தால் மார்க்கம் என்னும் வாக்கு
மனிதருக்கு மாத்திரம் அல்ல !
இந்த மண்ணில் பிறக்கும் எனக்கும் உனக்கும்
மற்றும் எல்லா உயிருக்கும் அந்த சொல்லே
மந்திரம் !
உன் இழப்பு பற்றி நினைக்காதே ..உன்
இலக்கு என்ன என்று மட்டும் நீ யோசி !
K.Natarajan … in http://www.dinamani.com dated 8th May 2017