வாரம் ஒரு கவிதை ….” யாருமில்லாத மேடையில் …”

யாருமில்லாத மேடையில் …
————————–
குளியல் அறையில் நான் பாடிய
பாட்டு …யாருமில்லாத மேடையில்
அரங்கேறிய என் முதல் கச்சேரி !
என் வீட்டு மொட்டை மாடியில்
நான் ஆடிய நடனம் …யாருமில்லாத
மேடையில் என் முதல் நாட்டியம் !
நிலைக் கண்ணாடி முன் நின்று
நான் பேசிய பேச்சு ..யாருமில்லாத
மேடையில் என் முதல் சொற்பொழிவு !
யாருமில்லாத மேடையில் பேசி,
பாடிய நான் இன்று யாரும் இல்லாத
ஒரு அரங்கு முன்னாலும் பேசத்
தெரிந்த ஒரு திறமைசாலி !
ஆம் …எனக்கு வேலை இன்று
ஒரு தொலைக் காட்சி செய்தி
வாசிக்கும்  மேடையில் !!!
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 19th Nov 2017
Natarajan

2 thoughts on “வாரம் ஒரு கவிதை ….” யாருமில்லாத மேடையில் …”

  1. Ramakrishnan's avatar Ramakrishnan November 22, 2017 / 12:43 pm

    super imagination

Leave a comment