பெண் என்னும் பிரபஞ்சம்
———————–
ஆணுக்கு பெண் அடிமையில்லை..ஒரு
ஆணை விட பெண் எதிலும் எங்கும்
குறைந்தவளும் இல்லை !
மறக்க வேண்டாம் உங்கள் பெருமை
பெண்ணுரிமை நம் உரிமை
மறுக்க முடியுமா யாரும் இதை ?
வானமே எல்லை நமக்கு …நாளை
இந்த உலகம் மட்டும் அல்ல …இந்த
பிரபஞ்சம் கூட ஒரு பெண்ணின்
கையில்தான் !
முடிந்தது அவள் மேடை முழக்கம் ..முழங்கிய
பெண் தேடினாள் தன் கை பேசியை
ஊரில் இருக்கும் அவள் அப்பாவிடம் பேச !
மறு முனையில் கேட்டதோ அம்மாவின் குரல் !
சரி அம்மா ..நான் பேசறேன் அப்புறமா
அப்பாவிடம் … சும்மா தான் கூப்பிட்டேன்
நான் ! வைக்கட்டுமா ?
நாளை உலகை ஆளப் பிறந்த தன்
பெண்ணின் சொல் கேட்டும் வாய்
பேசாமல் நிற்கும் அந்த தாய்
அல்லவோ பெண் என்னும் பிரபஞ்சம் !
Natarajan
in http://www.dinamani.com dated 9th Dec 2017