பசுமை நிறைந்த நினைவுகளே !!!!

அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!!!!!

WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF!!!!!

· தனி படுக்கையில் அல்ல!!! அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்!!!

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளா இருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான்!!!! ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான்!!!! நெட் நண்பர்களிடம் இல்லை!!!!!

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம்!!!! பாட்டில் வாட்டர் தேடியதில்லை!!!!

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை!!!!!

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை!!!!

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.!!!!

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை!!!

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்!!!!

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்!!!!

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல!!!! ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே!!! பொருட்களை அல்ல!!!!

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள “ஏலேய்ய்ய்” என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை!!!!

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் >>>டாக்டரை தேடி ஒடியதில்லை!!!!!
.
· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை!!!!!

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்.லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்!!!!!

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை!!!!!

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்!!!!!

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் வெள்ளையா இல்லையா என்று சொல்ல முடியவில்லையே !!!!

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை!!!!!

· சொல்லுங்க நீங்க இப்போ …. அந்த பொன்னான காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை !!!!!!!!!!!!

source:::::input from a friend of mine …
Natarajan

மனதைத் தொட்ட மகாபெரியவர் !!!

மனதைத் தொடும் நிகழ்ச்சி.!

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி

ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம்.
பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா
அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல்
வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து
தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி
வைத்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்தான். அவருடைய
சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது. மடத்து
ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே
அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை
விசாரித்தார்.

“உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி
நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?”
போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி
மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள்
என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம்
மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாகஐ
இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச்
சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், “இந்த வளையல்
வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்
கொள்ள வேண்டும்” என்று சொன்னவர்,அதற்கேற்ற
விளக்கமும் தந்தார்.

“இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா
வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு
வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி
அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்
புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!”
என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து
வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.
அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக
இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,
புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

“இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம்
குறைந்திருக்கும் இல்லையா?”

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத
விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும்
வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால்
தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம்
எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!

source:::::input from a friend of mine .

Natarajan

எங்கே என் அம்மா ?……

அம்மா என்ற சொல் மறந்து ஆண்டு இரண்டு இன்று எனக்கு –சொல்லு

அம்மா …. ஒன்றுமே  சொல்லாமல் நீ சென்று விட்டது ஏனம்மா ?

அம்மா அம்மா என்று என் பிள்ளை  தன்  அம்மாவை   கூப்பிட்டால் –நான்

அம்மா  எங்கே  எங்கே  என்று    உன்னைத்தானே  தேடுகிறேன் ….

நடராஜன்

என் அன்பு அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி …. 23 ஜனவரி 2013.

Right Man For the Right Job!!!!!

History ….A Quick Look …..an inspirational story …

Sunday, December 7th, 1941–Admiral Chester Nimitz was attending a
concert in Washington, D.C. He was paged and told there was a phone
call for him. When he answered the phone, it was President Franklin
Delano Roosevelt on the phone. He told Admiral Nimitz that he (Nimitz)
would now be the Commander of the Pacific Fleet.

Admiral Nimitz flew to Hawaii to assume command of the Pacific Fleet.
He landed at Pearl Harbor on Christmas Eve, 1941. There was such a
spirit of despair, dejection and defeat–you would have thought the
Japanese had already won the war. On Christmas Day, 1941, Adm. Nimitz
was given a boat tour of the destruction wrought on Pearl Harbor by
the Japanese. Big sunken battleships and navy vessels cluttered the
waters everywhere you looked.

As the tour boat returned to dock, the young helmsman of the boat
asked, “Well Admiral, what do you think after seeing all this
destruction?” Admiral Nimitz’s reply shocked everyone within the sound
of his voice.

Admiral Nimitz said, “The Japanese made three of the biggest mistakes
an attack force could ever make or God was taking care of America.
Which do you think it was?”

Shocked and surprised, the young helmsman asked, “What do mean by
saying the Japanese made the three biggest mistakes an attack force
ever made?” Nimitz explained:

Mistake number one: The Japanese attacked on Sunday morning. Nine out
of every ten crewmen of those ships were ashore on leave. If those
same ships had been lured to sea and been sunk–we would have lost
38,000 men instead of 3,800.

Mistake number two: When the Japanese saw all those battleships lined
in a row, they got so carried away sinking those battleships, they
never once bombed our dry docks opposite those ships. If they had
destroyed our dry docks, we would have had to tow every one of those
ships to America to be repaired. As it is now, the ships are in
shallow water and can be raised. One tug can pull them over to the dry
docks, and we can have them repaired and at sea by the time we could
have towed them to America . And I already have crews ashore anxious
to man those ships.

Mistake number three: Every drop of fuel in the Pacific theater of war
is in top of the ground storage tanks five miles away over that hill.
One attack plane could have strafed those tanks and destroyed our fuel
supply. That’s why I say the Japanese made three of the biggest
mistakes an attack force could make or God was taking care of America
.
Admiral Nimitz was able to see a silver lining in that situation and circumstance
where everyone else saw only despair and defeat.

President Roosevelt had chosen the right man for the right job.

source …. input from a friend of mine…
Natarajan

We Cared …We Shared…. It is All Green In Our Memory !!!!!

ReUse…Reduce….Recycle !!!!!

Green thing ?? V-Care V-Share – …..A Bold statement from a citizen of yester years ….must read !!!!

Checking out at the store, the young cashier suggested to the older woman that she should bring her own shopping bags because plastic bags weren’t good for the environment.

The woman apologized and explained, “We didn’t have this green thing back in my earlier days.”

The cashier responded, “That’s our problem today. Your generation did not care enough to save our environment for future generations.

She said … “right — our generation didn’t have the green thing in its day.
Back then, we returned milk bottles, pop bottles and beer bottles to the store. The store sent them back to the plant to be washed and sterilized and refilled, so they could use the same bottles over and over. Yes, they really were recycling.
We refilled writing pens with ink instead of buying a new pen; and we replaced the razor blades in a razor instead of throwing away the whole razor just because the blade got dull. But, we didn’t have the green thing back in our day.

We walked up the stairs, because we didn’t have an escalator in every shop and office building. We walked to the grocery store and didn’t climb into a 300-horsepower machine every time we had to go two blocks. But, she was right. We didn’t have the green thing in our day.

Back then, we washed the baby’s nappies because we didn’t have the throw-away kind. We dried clothes on a line, not in an ‘energy gobbling machine burning up 2KW, wind and solar power really did dry our clothes back in our early days. Kids got hand-me-down clothes from their brothers or sisters, not always brand-new clothing. But, that young lady is right. We didn’t have the green thing back in our day.

Back then, we had one TV, or radio, in the house — not a TV in every room. And, the TV had a small screen the size of a handkerchief (remember them?), not a screen the size of the county of Yorkshire .
In the kitchen, we blended and stirred by hand because we didn’t have electric machines to do everything for us.
When we packaged a fragile item to send in the post, we used wadded up old newspapers to cushion it, not Styrofoam or plastic bubble wrap.
Back then, we didn’t fire up an engine and burn petrol just to cut the lawn. We used a push mower that ran on human power.
We exercised by working so we didn’t need to go to a health club to run on treadmills that operate on electricity.
But, she’s right. We didn’t have the green thing back then.

We drank water from a fountain or a tap when we were thirsty instead of demanding a plastic bottle flown in from another country.
We accepted that a lot of food was seasonal and didn’t expect that to be bucked by flying it thousands of air miles around the world.
We actually cooked food that didn’t come out of a packet, tin or plastic wrap and we could even wash our own vegetables and chop our own salad. But, we didn’t have the green thing back then.

Back then, people took the tram or a bus, and kids rode their bikes to school or walked instead of turning their mothers into a 24-hour taxi service.
We had one electrical outlet in a room, not an entire bank of sockets to power a dozen appliances.
And we didn’t need a computerized gadget to receive a signal beamed from satellites 2,000 miles out in space in order to find the nearest pizza joint. But, isn’t it sad the current generation laments how wasteful we old folks were just because we didn’t have the green thing back then?

Let all the young turks know how bold and wise were the old generation !!!!!!!!!!!

source:::::: unknown….input from my friend…

Natarajan

Walking The Dawn…..

In the wee hours of morning
When the whole world is sleeping
HE walks on the deserted street
With few devotees following and
Chanting slokas
For the early morning bath
In the temple pond.

The Sun came out to see HIM
The air breezed to fan HIM
The trees shed their leaves to lay carpet for HIM
The flowers blossomed to welcome HIM
The birds tweeted to greet HIM
The people woke up to bow to HIM.

source::::kanchi perivaa forum…a poem by N.yogeshwaran on Kanchi Mahaperiavaa….
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=bhajansonperiva&action=display&thread=3440#ixzz2I99Bc8Gr

Bhakthi is Important…Not Caste or Creed….

Author::: Prof.S.Kalyanaraman, Neurosurgeon….

“On one occasion I went along with my doctor friend to a town in Maharashtra to have darshan of Maha Periyaval. We found that His Holiness had left the town three days earlier and was camping in the outskirts of the town near a small river in a mango grove. When we reached the camp, all facilities for the visiting devotees had been made in the grove.

The officials of the Mutt told me a very interesting anecdote of how His Holiness came to stay there.

As Maha Periyaval was staying in the centre of the town and performing pooja everyday, one elderly gentleman used to come and stand at the periphery of the crowd, watch the pooja and go away without coming near His Holiness. Maha Periyaval noted this and called him one day and asked him whether he wanted anything.

He replied. “I came to this place as a daily wage earner. Gradually I became Supervisor and then a small scale contractor. In course of time because of my prayers to you I became a big contractor and amassed a lot of money and bought a lot of property on the outskirts of the town. To my good fortune I heard you were coming to this town. I wanted to invite you to come to my place and place your feet in my house, but everyone here told me that since I belong to the scheduled caste, Maha Periyaval would not come to my house. Everyday I wanted to request you but could not muster enough courage to ask you directly, fearing I may get a refusal”.

His Holiness replied: “I have come to this town mainly to see you. Not only will I come to your house but the whole camp and pooja will be shifted to your place today. Periyaval stayed for ten days in that devotee’s house and mango grove, performed pooja and blessed him.”

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

source:::::kanchiperivaa forum
natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3418#ixzz2Hs1hta76

Periavaa”s Sense of Humour on His neck pain!!!

Dr.Kalyanaraman..Neuro Surgeon”s Experience with periavaa…

Maha Periyaval was suffering from some pain at the back of His neck. Dr. Badrinath who had just operated on His Holiness for cataract suggested that I should examine Maha Periyaval for suspected spondylosis and suggest treatment. The camp was at Sholapur at that time and one afternoon we arrived there. After lunch I was taken to Maha Periyaval’s presence. I was told that He was suffering from high fever in addition to His earlier complaint of neck pain. He asked me to go ahead with the examination.

I performed Shashtanga Namaskaram to Him first. He asked me why I was performing namaskaram. I replied “Before I examine every patient in my clinic. I perform namaskaram mentally to you and pray to you that the patient should be cured. When you are yourself my patient now, to whom can I pray except to you and I should be successful in my treatment? His Holiness smiled and said “Go ahead”.

After completing the examination I found that His temperature was 105 degree. I hesitatingly told Him, “Periyaval is having high fever. Will it be possible to avoid cold water bath for a day or two till the fever settles down? His Holiness replied “How can that be done? Yesterday was Chandra grahanam and last night I performed grahana snanam (bath at the time of eclipse) with the same fever.

I said, “Iswara, how can Periyaval’s physical system stand such strain?”

Maha Periyaval asked me “Do you know how grahana snanam is performed?”

I said I did not know.

His Holiness: “You have to hold your nostrils and take a dip in the river till the whole head is fully immersed in the water.

I was aghast that His Holiness had done this.

Then he added “Not once, but 108 times!”

I nearly fainted! I said “What treatment can I give you?”

“Only Lord Siva, whose incarnation you are, is protecting your body in spite of 108 head baths in the river with a body temperature of 105 degree. What can a poor mortal like me do except to pray to Lord Siva to keep you in good health for our sake for many many more years to come?”

Once, when I was asked to see Maha Periyaval for His neck pain, I diagnosed cervical spondylosis and suggested that He do some simple exercises for the same. The exercises consisted of normal movements of the neck such as looking down, looking up, and turning to the right, turning to the left, bending to the right and bending to the left, in all six normal movements. I requested Him to do this several times a day. When I went to Sri Mattam for darshanam on the next occasion I asked Maha Periyaval whether He was doing the neck exercises regularly.

His Holiness: I was doing the neck exercises regularly for a few days and then stopped doing them.

I asked: why?

Maha Periyaval remarked with a mischievous smile,

“You asked me to do them several times a day. I started doing them even when I was talking to visitors. Many bhakthas thought this was a new form of yoga-abhyasam which I practicing. So they started moving their necks exactly as I was doing. I thought even those who had no neck pain may get it due to the violent movement! So I stopped doing them!”.

source:::::kanchi perivaa forum
natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3358#ixzz2HCYzP7Ao

நம் நினைவில் நிலைத்திருக்கும் வாரியார் !!!!

கிருபானந்த வாரியார் அவர்களின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.
அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.

‘கம்’ முனு இரு: “கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்” என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் “கம்” எனபது விநாயகரின் பீஜ மந்திரம். “ஓம் கம் கணேசாய நம” எனபதாகும். ‘கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.

உலாவ இடமா இல்லை : “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச், பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.

வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.

அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?

கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். “நீ” என்பதற்க்கு பதில் நீங்’கள்’ என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த ‘கள்’ செய்யும் வேலைதான்.

சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.

பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.

நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.

கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.

வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?

தன் குரலை வைத்து ‘மிமிக்ரி” செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.

“என் குரலை நிறைய பேர் “மிமிக்ரி” கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. “முருகா,முருகா” என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா? ”
source:::: input from my friend.
natarajan

“அப்படித்தானே நரசிம்மா !!!”…கேட்டார் மகாபெரியவா !!!

காஞ்சி மஹா பெரியவர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர் அந்த தம்பதியினர். காஞ்சி மஹானை வணங்காமல் எந்த செயலையும் ஆரம்பிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் மீது அவர்களுக்கு பக்தி.

இந்நிலையில் ஒரு நாள், அந்த பெண்மனி கர்ப்பிணி ஆனாள். குழந்தை எந்த பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று அவர்கள் மஹானை வேண்டாத நாளே இல்லை.

ஒரு நாள் இரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் கனவில் நரசிம்மர் தோன்றி, பிறக்கப்போகும் குழந்தைக்கு தனது பெயரை சூட்டுமாறு உத்தரவிட்டார்.

ஆனால், கர்ப்பிணிப் பெண்ணோ, ‘எங்களுக்கு எல்லாமே காஞ்சி பெரியவர்தான். அவர் எப்படிச் சொல்கிறாரோ அதைத்தான் செய்வோம்’ என்று தெய்வத்திடமே வாதிட்டாள் கனவில்.!

நரசிம்மரும் அந்த பெண்ணை அவளது வழிக்கு விடவில்லை. ‘எனது பெயரைத்தான் வைக்க வேண்டும்’ என்று அவரும் உறுதியாக இருந்தார்.

அப்போதே கனவும் கலைந்து விட்டது. விழித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இறைவன் இட்ட உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்ற பயம் ஏற்பட்டது. இருந்தாலும், தான் கண்ட கனவு பற்றி கணவரிடம் கூறினாள்.

தொடர்ந்து, இருவரும் காஞ்சி மஹானை கேட்ட பிறகு, அது பற்றி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தனர்.

அடுத்த மாதமே அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதை உறுதி செய்ய இருவரும் குழந்தையுடன் காஞ்சி மஹா பெரியவரை பார்க்கச் சென்றனர்.

மஹான் காலடியில் குழந்தையை கிடத்தியவர்கள், மஹான் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்கும் பொருட்டு அமைதியாக நின்றனர்.

கை, காலை உதைத்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த மஹா பெரியவர், “பொதுவாக ஒரு குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகள் செய்வார்கள். அதன் பிறகுதான் பெயர் சூட்டுவார்கள். ஆனால், இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான். அப்படித்தானே நரசிம்மா ?” என்று கேட்க, குழந்தையின் பெற்றோர் அதிசயித்துப் போய் நின்றனர்.

தாங்கள் கண்ட கனவு பற்றி மஹா பெரியவரிடம் எதுவும் சொல்லாத நிலையில், அவரே கனவில் வந்த நரசிம்மர் கூறியபடி குழந்தையை ‘நரசிம்மா’’ என்று அழைத்ததால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி, அப்படியே சாஷ்டாங்கமாக மஹா பெரியவரின் காலில் விழுந்தனர்.

source::::::kanchi perivaa forum
natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3327#ixzz2H4uxD8KU