வாரம் ஒரு கவிதை ….” பார்த்து நடந்து கொள் …தம்பி “

 

பார்த்து  நடந்து கொள் …தம்பி !
+++++++++++++++++++++++++++++++
காசை தண்ணீர் போல செலவு செய்றான் பாரு
இப்படி ஒரு சொல் கேட்டோம் நாம் ஒரு காலம் !
இன்று காசு கொடுத்தாலும் தண்ணீர் இல்லை !
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து தாகம் தணித்த
காலம் மாறி கையில் வாட்டர் பாட்டிலுடன்
சுற்றுகின்றோம்  இன்று !
தண்ணீரை காசு போல கணக்கு பார்த்து செலவு
செய்யும் காலத்தில் நாம் இன்று !
தண்ணீருக்கு வந்த நிலைமை சுவாசிக்கும்
காற்றுக்கும் வர வேண்டாம் ..தம்பி !
பார்த்து நடந்து  கொள்  தம்பி ..
.
ஒரு வாரத்துக்கு  தேவையான  ஆக்ஸிஜன்
சிலிண்டர் ஒன்று இலவசம் உங்களுக்கு சுவாசிக்க
என்று தேர்தல் நேரத்தில் கட்சிகள் எல்லாம்
அறிவிக்கும் அவலம் நேர வேண்டாம் உன்
காலத்தில் !
பார்த்து நடந்து கொள் …தம்பி நீ !
K .நடராஜன்
17/04/2019