இந்த மண்ணில் எத்தனை நாடு…. எத்தனை மனிதர் கூட்டம்
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு எல்லைக் கோடு வேறு !!!
மொழி எத்தனை …மனித இனம் , மதம் எத்தனை எத்தனை !!!
அத்தனையும் தாங்குகிறாள் ஒரு தாய் … இந்த பூமித் தாய் …
இந்த மண்ணை விட்டு விண்ணுலகம் செல்லும் மனிதர் கூட்டம்
அத்தனை பேருக்கும் இருக்குமா இடம் விண்ணுலகில் ? …
இனம் மொழி மதம் பார்த்து இட ஒதுக்கீடும் கிடைக்குமா அங்கே ?
புரியாத புதிர் இது… விடை தெரியாத கேள்வியும் இது …பின்
இருக்கும் இடத்தில் இன்று ஏன் இந்த ஆட்டம் …
ஒருவர் மேல் ஒருவர் காட்டம் ? …இதுவும்
ஒரு புரியாத புதிரா ? …பதில் சொல்லு மனிதா
ஒரு நிமிடம் யோசித்து …!!!
நடராஜன்
7ஏப்ரல் 2015