இது எம் மதம்… அது உம் மதம்…இதில் எம்மதமே பெரியது என
நிதம் நிதம் ஒரு சர்ச்சை … சண்டை… மதத்தின் பெயரால் !
“எம்மதமும் சம்மதம் “….இதுதானே நம் ஆன்றோர் வாக்கு !
அமுத வாக்கு இது … இதுவே அருள் வாக்காக எங்கும்
ஒலிக்கட்டும் வரும் மன்மத ஆண்டில் …மன இருள் நீங்கி
நன் மதி ஒளி பரவட்டும் இந்த மண்ணில் எங்கும் …
மன்மத வருடமே வருக … வருக ! நலம்… வளம் …பல ..தருக ..தருக !!!
நடராஜன்
12 ஏப்ரல் 2015