
ஆஸ்திரேலியாவில் ஸ்பெல்லீங் பீ நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஸ்பெல்லீங் பீ என்ற நீண்ட ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளைச் சரியாக சொல்லும் போட்டியை நடத்திவருகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 3000 குழந்தைகள் கலந்துகொண்டார்கள். மூன்று கட்ட தேர்வுகளுக்குப் பிறகு 50 குழந்தைகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது இவர்களில் இருந்து 12 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 12 பேரில் தமிழகத்தின் வேலுரை பூர்வீகமாகக் கொண்ட இரட்டையர்களான ஹார்பிதா மற்றும் ஹார்பித்தாவும் அடங்குவார்கள். இருவரும் 50 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் தெரிந்து வைத்துள்ளனர். இறுதி போட்டி இன்னும் 2 வாரங்களில் நடைபெறவுள்ளது.
இது பற்றி இரட்டையர்களான ஹார்பிதா மற்றும் ஹார்பித் ஆகிய இருவரும் கூறும் போது இதற்காக நாங்கள் எந்தவித சிறப்பு பயிற்சிக்கும் செல்லவில்லை. நான்கு வயது முதல் வீட்டில் அப்பாவின் ஐ.பேடில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் விளையாட்டை விளையாடுவோம் எனத் தெரிவித்தனர்.
இவர்களின் சாதனை குறித்து தந்தை அண்ணாமலை தெரிவிக்கையில், குழந்தைகளுக்கு சுதந்திரம் தந்து அவர்களை சொந்தமாக கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.
Source….Parvathi Arunkumar, சிட்னி…www.dinamani.com and http://www.newindianews.com
Natarajan