பாதச் சுவடுகள்
…………..
பல்லாயிரம் காலடி படும் பாதையில் …வடுவாய் பாதச்சுவடாய்
நல்லோர் சிலர் காலடி மட்டும் உருவாக்கும் ஒரு தனி வழிப்பாதையை !
காலத்தால் அழியாத நல் வழி காட்டும் பாதை அது !
பாதச் சுவடு பதித்த நல்லோர் பலர் வழி நடக்க விழையும் நாம்
பதிக்க வேண்டும் நம் காலடியையும் ஒரு சுவடாக !
விதைக்க வேண்டும் நல் அறநெறி நம் பிள்ளைகள் மனதில் ..நம்
பாதச் சுவடு ஒன்றொன்றும் சொல்ல வேண்டும் ஒரு நல் வழிப்பாடம் !
அது காட்ட வேண்டும் ஒரு தனி வழி ஒளிமிகு புதிய பாரதம் மலர !
மாறட்டும் நம் காலடி ஒன்றொன்றும் ஒரு பாதச் சுவடாக இன்றுமுதல்
அது தொடரட்டும் என்றென்றும் வழி வழியாக ! காலத்தால்
அழியாத நல்ல வழிகாட்டியாக !
Natarajan
14 March 2016