வானமே எல்லை …
………….
எல்லை இல்லாத ஒன்று எதுவும் இங்கு இல்லை என்னும் உலகில்
உனக்கு இலக்கு வானமே தம்பி ! இதுவரை “வானமே எல்லை” உனக்கு !
எல்லை பல கடந்து பல மொழி பேசும் அயல் நாட்டு மண்ணில்
இல்லை உனக்கு நிகர் யாரும் என பலரும் உன்னை வாழ்த்தும்
நிலை இன்று உனக்கு !
வானமும் ஒரு எல்லைக் கோடுதான் இனி எனக்கு என நீ சொல்லும்
நாள் வெகு தூரம் இல்லை !
வானம் சுற்றி நிலவிலும் தங்கமான செவ்வாய் கோளிலும் நீ காலூன்றும்
நேரம் உன் அன்னை பாரதத் தாய் சொல்வாள் ..உன் பெருமைக்கு இல்லை
ஒரு எல்லை இனிமேல் என்று !
உன்னால் முடியும் தம்பி…வலைத் தள யுகத்துக்கு வித்திட்ட
உனக்கு நிலவில் கால் வைக்க தேவை உன் விடாமுயற்சி, தன்னம்பிக்கை
என்னும் கடவுச் சொல் மட்டுமே ! வானமே எல்லை என்பதை இனிமேல்
வானமும் உனக்கு ஒரு எல்லையே என்று மாற்றிக் காட்டிடு தம்பி !!!
K .Natarajan