பட்டதாரி …
………..
பட்டங்கள் பலப் பல …வாங்கிய பட்டம் தேனாய் இனிக்கும் பட்டதாரிக்கு வேலை
ஒன்று கட்டாயம் கிடைத்தால் ! வேலை இல்லாவிட்டால் “வேலையில்லா “
என்னும் ஒரு புதிய பட்டம் மட்டும் கிடைக்கும் அந்த பட்டதாரிக்கு !
சட்டம் ஒன்றும் இல்லையே பட்டம் வாங்கினால் வேலை உண்டு என்று !
சட்டம் படித்த பட்டதாரிக்கே வேலை இல்லையே இன்று !
“வேலையில்லா பட்டதாரி” என்னும் ஒரு வட்டத்தில் சுழலாமல்
திட்டம் போட்டு தன் கையே தனக்கு உதவி என ஒரு தொழில்
செய்ய நீ முனையும் நேரம் “வேலையில்லா ” பட்டதாரி உன்
வாழ்வில் ஒரு நல்ல நேரமாக மாறும் !
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கு
இல்லை இனி என ஒத்துக்கொள் என்னும் ஆன்றோர்
வாக்கு இன்றும் பொய்யா வாக்குதான் ! மறவாதே இதை நீ
தம்பி ! உனக்கு ஒரு வேலை நீ தேடுவதை விடுத்து “செயலி “
எத்தனை எத்தனை “செயல் ” படுத்த முடியும் உன்னால் என்று
சற்றே மாற்றி யோசி தம்பி ! மாறலாம் நீ ஒரு தொழில் முனைவோனாக !
உன் கணினியும் கைபேசியுமே உனக்கு மூலதனம் ! உன் தொழில்
நுட்ப அறிவும் , “செயலி ” உருவாக்கும் திறனும் மாற்றும்
உன்னை, நீ பலருக்கு வேலை கொடுக்கும் தொழில் பட்டதாரியாக !
வேலை இல்லா பட்டதாரி இல்லை இங்கு இனிமேல் என்னும் ஒரு
நாளை மலர செய்வதே இனி உன் வேலை ! மாற்றி யோசிக்கும்
யாருக்கும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் உண்டு கட்டாயம் !
Natarajan
8th nov 2016