வேலி தாண்டிய காற்று
——————–
கடலுக்கு கரையே எல்லை …காற்றுக்கும் அந்த கரைதான்
எல்லைக் கோடா ? … இல்லை அதுவே காற்றுக்கு
வேலியா ? கரை கடக்கும் காற்று சூறைக் காற்றாவது ஏன் ?
இளம் தென்றல் காற்றாக , கடல் கரை காற்றாக
பயணிக்கும் காற்று , சூறைக் காற்றாக உரு மாறி
ஒரு நகரையே புரட்டிபோடுவது ஏன் ? அந்த காற்று
தன் வேலியைத் தாண்டுவதாலா ? இல்லை
மனிதன் இயற்கையின் நியதியை நாளும் மீறுவதாலா ?
வேலி தாண்டுவது காற்றா …இல்லை மனிதனா ?
Natarajan