Source: What is the Brocken Spectre?
Last quarter moon is May 26
Source: Last quarter moon is May 26
Rainbow over the sky.of Brisbane… Australia

A rare phenomena … on the Sky… This fascinating treat on the sky of Brisbane Australia
was clicked by me thro my Mobile Camera in May 2019 .A treat for eyes
K.Natarajan
Butterfly Garden. Changi Airport. Singapore

Photo Clicked on 18th May thro my Mobile Camera while Transiting Thro Changi Terminal 3
Natarajan K
வாரம் ஒரு கவிதை ….” இரட்டையர் “
இரட்டையர்
++++++++++++
முகம் ஒத்துப் பிறக்கும் குழந்தைகள்
இரண்டு ….அவர் இரட்டையர் !
குழந்தைகள் முகம் பார்த்த உடன் தெரிந்து விடும்
அவர் இருவரும் இரட்டையர் என்று !
புறம் ஒரு முகம் அகத்தில் வேறு முகம்
என்று இரு முகம் கொண்டு ஒரே ஒரு
முகம் மட்டும் வெளியில் காட்டும் மனிதர்
சிலரும் உண்டே நம்மிடையே !
புரட்டி புரட்டிப் பேசும் இந்த “இரட்டியரை”
சொல்ல முடியுமா “இவர் இரட்டியர் ” என்று ?
Natarajan K in http://www.dinamani.com dated
22/05/2019
Stunning ISS pass above Rome
Source: Stunning ISS pass above Rome
வாரம் ஒரு கவிதை …” முதல் முத்தம் ” 3
முதல் முத்தம் ..3
+++++++++++++
இதயத்தில் ஒரு பட படப்பு ..ஒரு
எதிர்பார்ப்பு ! புது மணப்பெண்ணின்
புத்தாடை நளினம் ,சுகந்த மலர் நறுமணம் !
இதழும் என் கையில் இதமாக !
அவசரம் அவசரமாக இதழில்
தேடினேன் ! தேடியது கிடைத்ததும்
இமை மூடாமல் கொடுத்தேன் அந்த
இதழுக்கு ஒரு அன்பு முத்தம் ! ஆம்
முதல் முதலாக என் கவிதையை
அச்சில் பார்த்த நான் அந்த வார
இதழுக்கு மகிழ்ச்சியில் கொடுத்த முத்தமே
என் முதல் முத்தம் !
K.natarajan
15/05/2019
வாரம் ஒரு கவிதை…..முதல் முத்தம் ” 2
முதல் முத்தம் ..2
+++++++++++++
அன்னையர் தினம் என்று என் காலத்தில்
எதுவும் இல்லை! எல்லா நாளும் அன்னையர்
தினம்தான் !
அன்னையர் தினம் இன்று எல்லோரும் சொல்லும்
போதும் அவரவர் அம்மாவுக்கு ஒரு பரிசு
கொடுக்கும் போதும் நான் தேடுகிறேன்
என் அம்மாவை ! என் அம்மா எதுவும்
என்னைக் கேட்டது இல்லை ! நானும்
அம்மாவுக்கு பரிசு என்று எதுவும்
கொடுத்தது இல்லை !
நிஜமாய் இருந்த என் அம்மா நிழலாக
புகைப்படத்தில் இன்று ! அன்னையர் தினம்
இன்று அம்மா நான் உன் நிழலுக்கு
தருகிறேன் ஒரு பரிசு ! கண்ணில் நீர் மல்க
தருகிறேன் உன் பிள்ளை நான் உனக்கு ஒரு
அன்பு முத்தம் உன் புகைப் படத்துக்கு !
இதுவே என் முதல் முத்தம் உனக்கு அம்மா !
Natarajan.K
15/05/2019
வாரம் ஒரு கவிதை ….” முதல் முத்தம் “
முதல் முத்தம்
++++++++++++++
சுட்டெரிக்கும் வெயில் … அனல் பறக்கும் காற்று
தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் என் நகர மக்கள் !
வாடும் பயிர் பார்த்து வானம் பார்த்தான் விவசாயி
அன்று ! வறண்டு கிடைக்கும் குடிநீர் ஏரி கண்டு
கதி கலங்கி மிரண்டு கிடக்கிறான் நகரவாசி இன்று !
மிரட்டியது போதும் ! இயற்கை அன்னையே !
கரு மேகம் திரட்டி ஒரு கோடை மழை என் நகருக்கு
பெரு மழை யாய் பொழிந்து விடு அம்மா !
உன் அருள் மழை என் மண்ணை முத்தமிடும்
நேரம் நானும் என் மண்ணில் மண்டியிட்டு குனிந்து
என் மண்ணை முத்தமிடுவேன் ! என் நகர மண்ணுக்கு
நான் கொடுக்க இருக்கும் முதல் முத்தம் அதுவே !
சீக்கிரமே உன் அருள் மழை ஒரு பெரு மழையாய் மாறி
முத்தமிடவேண்டும் என் மண்ணை மாரி தாயே !
Natarajan.K
in http://www.dinamani.com dated 15/05/2019