நடு வயது தம்பதிகள். நான்கு குழந்தைகள். எல்லாம் நவீன ஆடை – அலங்காரம்; நவீனத் தோற்றம். பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டும் கூந்தல் – எல்லையோர செடிகளை, இடுப்பளவு உயரத்துக்கு மேல் வளராதபடி கத்திரிகோலால் வெட்டி விட்ட மாதிரி; நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு.
பெரியவா, அந்த குழந்தைகளை தன் அருகில் வரச்சொன்னார்கள். வந்தன. “பேரென்ன? எங்கே படிக்கிறே? என்று விசாரணையாய் உரையாடல்.
குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன; உற்சாகமாக, தயக்கமில்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தன.
அருகில் இருந்த பழத்தட்டை காட்டி, ‘யாருக்கு என்ன பழம் வேணுமோ எடுத்துக்கலாம்’ என்று சொன்னர்கள்.
குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
Thanks – என்று சொல்லிவிட்டு பழங்களை எடுத்துகொண்டன.
பெரியவா சொன்னார்கள்” “ஒரு request நான் சொன்ன கேட்பேளா?”
ஒரே குரலில், “Oh yes! certainly we will do” என்று குழந்தைகள் கூறின.
‘வெளி இடத்திலே, பள்ளிகூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்தில் பேசறபோது இங்கிலீஷ்லே பேசு. உங்க வீட்டிலே, அப்பா – அம்மா, சுவமிகளா இருக்கிற நான்; அப்புறம், பகவான் இவாளிடம் தயவு பண்ணி தமிழிலே தான் பேசணும். தமிழ் தாய்மொழி. தாய் தான் முதல் கடவுள். தமிழ் பேச்சை மறக்க கூடாது.”
குழந்தைகள். ‘இனிமே அப்பா – அம்மா , குரு, தெய்வத்துகிட்டே தமிழிலேயே பேசறோம். Promise!’ என்றன.
பெரியவா முகத்தில் கோடி சூர்ய பிரகாசம். மகா பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியை காட்டிலும் நூறு மடங்கு பிரகாசம்!
source:::: http://www.periva.proboards.com
natarajan