ஒரு நாள் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி திருவண்ணாமலை மலையில் ஒரு தனி வழியே ஏறும் போது அவரது கால் ஒரு பெரிய குளவிக் கூட்டில் பட்டு விட்டது. உடனே குளவிகள் ‘புஸ்’ஸென்று எழுந்து கோபத்துடன் அந்தக் காலையே பலமாகக் கொட்டின. திரும்பத் திரும்ப குளவிகள் கூட்டமாக வந்து அவரது காலைப் பதம் பார்த்தன. பகவான் நடந்த களைப்புடன் அங்கேயே உட்கார்ந்து, ஆம், ஆம் நன்றாகக் கொட்டுங்கள். இந்தக் கால் தானே உங்கள் கூட்டைக் கலைத்தது. அதனால் நன்றாகக் கொட்டுங்கள். அது வருந்தட்டும்!” என்று சொல்லி சாந்தமாயிருந்தார். அந்தக் குளவிக் கூட்டம் ஆத்திரம் தீர அவரது கால் சதையைத் துளைத்துக் கொட்டி விட்டுத் திரும்பிச் சென்றது. வலியைப் பொறுத்துக் கொண்டு ஆசிரமம் திரும்பினார் ஸ்ரீரமணர். பொறுமை, பொறுமை, இதனினும் பொறுமை ஏது?

ஆசிரமவாசிகள் பதறிப் போய் பகவானைக் கேட்க, ஆம்… அவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் போனோம். அவர்களைத் துன்புறுத்த நமக்கு பாத்தியமில்லை!” என்று புன்னகையுடன் கூறினார்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
SOURCE:::: Balhanuman Blog @ wordpress.com
Natarajan