இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There are no any short routes to reach the Feet of God.
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பிரிட்டிஷ் இந்திய போலீஸ் அதிகாரியான எஃப். ஹெச். ஹம்ப்ரீஸ் என்பவர் பகவானை முதலில் பார்த்ததும் தனக்கு எப்படி இருந்தது என்ற உணர்வை அப்படியே எழுதியிருக்கிறார்.அதை பழம் பெரும் எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். அதை இப்போது பார்க்கலாம்.
”குகையை அடைந்ததும் நான் அவரது காலடியில் வாய் திறக்காமல் உட்கார்ந்தேன். இப்படி ரொம்ப நேரம் மௌனமாக இருந்ததால் நான் என் வசமிழந்து என்னுள் ஓர் எழுச்சி உண்டாவதை உணர்ந்தேன். அரை மணி நேரம் நான் மகரிஷியின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆழ்ந்த தியானத்தில் இருந்த அவரது கண்கள் அசையவே இல்லை. புனித ஆவியின் ஆலயமே உடல் என்பதை நான் உணரத் துவங்கினேன்.என் எதிரே அமர்ந்திருந்த மகரிஷியின் உடல், அவர் அல்ல என்கிற உணர்வு தோன்றியது, கடவுளின் செயற்கருவியே அவர். எதிரே சும்மா அசைவற்று உட்கார்ந்த பாணியில் உள்ள உருவம் உயிரற்ற உடல் மட்டுமே. அந்த உடல் மூலம் கடவுள், சரம் சரமாகக் கதிரொளியைப் பரப்புகிறார்.என்னுள் எழுந்த எண்ணங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.’’
பாருங்கள். ஒரு கிறிஸ்துவர், அதுவும் கடுமையான பணி புரியும் காவல் துறை அதிகாரி எப்படி உணர்கிறார் பாருங்கள். அவர் மட்டுமல்ல, அன்று மட்டுமல்ல., இன்றைக்கும் நீங்கள் திருவண்ணாமலை ரமணாச்ரமம் சென்று அவரது சன்னதியின் முன்னால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்கள். நீங்களும் ஹம்ப்ரீஸ் போல் உணர்வீர்கள்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
SOURCE::::www.balhanuman.wordpress.com
Natarajan
Jan 9 2015
