திருவிளையாடல்’ திரைப்படத்தில் வந்த சிவனையும் தருமியை நம்மால் மறக்கமுடியாது. அதற்குக் காரணம் சிவாஜியும் நாகேஷும்தான். தங்களது தெறிப்பான நடிப்பில் தமிழ் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தவர்கள் அவர்கள்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், தருமி கதை வந்தது திருவிளையாடல் படத்தில்தான் என்று. உண்மையில், அதற்கும் பல ஆண்டுகள் முன்பே ஒரு திரைப்படத்தில் இக்காட்சி வந்துவிட்டது என்பது தெரியுமா?
தருமி, நக்கீரனுடனான சிவனின் திருவிளையாடலை தமிழ் சினிமா முன்னமே கண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல; அதிலும் சிவாஜி கலக்கியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
இங்கு வீடியோவில் இடம்பெற்றுள்ள ‘நான் பெற்ற செல்வம்’ என்ற பழைய திரைப்படத்தில் வரும் இந்த ஒரு காட்சியில் நீங்கள் காணப்போவது ஒன்றல்ல… இரண்டு ஆச்சரியங்கள்!
Source….www.tamil.thehindu.com and http://www.youtube.com
Natarajan