” “தமிழிலே தான்பேசணும்.தமிழ் தாய்மொழி .தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக் கூடாது.”

“தமிழிலே தான்பேசணும்.தமிழ் தாய்மொழி

.தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை

மறக்கக் கூடாது.”

18698_10153209347029244_3030028360467212073_n.jpg

நடு வயதுத்தம்பதிகள்.நான்கு குழந்தைகள்

எல்லாம் நவீன ஆடை-அலங்காரம்,

நவீனத் தோற்றம்.பெண் குழந்தைகளுக்கு

கழுத்து வரை மட்டுமே கூந்தல்.

எல்லையோரச் செடிகளை,இடுப்பளவு

உய்ரத்துக்கு மேல் வளராதபடி கத்தரிக்கோலால்

வெட்டி விட்ட மாதிரி , நுனி நாக்கில் ஆங்கிலம்

விளையாடியது. கான்வென்ட் படிப்பு.

பெரியவா,அந்தக் குழந்தைகளைத் தன் அருகில்

வரச் சொன்னார்கள்.-வந்தன

“பேரென்ன? எங்கே படிக்கிறே” என்று

விசாரணையாய் உரையாடல்.

குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன:

உற்சாகமாக,தயக்கமில்லாமல் பதில்

சொல்லிக் கொண்டிருந்தன.
அருகிலிருந்த பழத் தட்டைக் காட்டி,

“யாருக்கு என்ன பழம் வேணுமோ,

எடுத்துக்கலாம்” என்று சொன்னார்கள்.

குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.

Thanks – என்று சொல்லிவிட்டுப் பழங்களை

எடுத்துக் கொண்டன.

பெரியவா சொன்னார்கள் : “ஒரு request

நான் சொன்னா, கேட்பேளா?”

ஒரே குரலில்,”Oh Yes! certainly we will do”

என்று குழந்தைகள் கூறின.

“வெளி இடத்திலே,பள்ளிக்கூடத்திலே

அல்லது வேறு மனுஷ்யாளிடத்திலே

பேசறபோது இங்கிலீஷ்லே பேசு, உங்க

வீட்டிலே, அப்பா – அம்மா, சுவாமிகளா

இருக்கிற நான்; அப்புறம்,பகவான்

இவாளிடம் தயவு பண்ணி,தமிழிலே தான்
பேசணும்.தமிழ் தாய்மொழி,தாய்தான்

முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக்

கூடாது.”

குழந்தைகள், “இனிமே, அப்பா -அம்மா-குரு

தெய்வத்துக்கிட்டே தமிழிலேயே பேசறோம்

Promise என்றன.

பெரியவா முகத்தில் கோடி சூர்யப் பிரகாசம்

பண்டிதர்களுடன் அத்வைத விசாரம்

பண்ணும்போது பளீரிடும் ஒளியைக்

காட்டிலும் நூறு மடங்குப் பிரகாசம்.

Read more: http://periva.proboards.com/thread/10392/#ixzz3pMiWwZF3

source….www.periva.proboards.com

Natarajan

 

Leave a comment