“இனி ஒரு விதி செய்வோம் “
……………………..
எம்மதமும் எமக்கு சம்மதமே என எல்லா மதமும் சொன்னாலும்
மதம் பிடித்த களிறு போல் வெறியாட்டம் ஆடுது ஒரு
உன்மத்தக் கூட்டம் …அவர் வைக்கும் வாதம் விதண்டாவாதம்
அது தீவிர வாதம் … நம் ஒற்றுமைக்கு உலை வைக்கும்
பயங்கர வாதம் …அதன் சிறகொடித்து வேரறுக்க வேண்டாமா நாம் ?
வாள் எடுக்க வேண்டாம் நாம் அவர் சிறகொடிக்க …
தாள் பணியவும் தேவையில்லை நாம் அவர் முன்னால் ! இந்த
நாள் ஒரு புது விதி செய்வோம் நாம் !…சாதி மத இன
பேதம் யாவும் நாம் மறந்து, துறந்து, வாழ்ந்து காட்டுவோம் ஒரு
இந்தியனாக ! இப்படி சாதிப்போம்
சமத்துவம் , சகோதரத்துவம் , மனித நேயம் ! மறக்காமல்
போதிப்போம் நம் இளைய தலை முறைக்கும் …
“உன் தாய் பாரதம் , உன் மதம் பாரதம் , உன் மொழி பாரதம்
உன் இனம் பாரதம் …நீயே பாரதம் ” !
வித்தாக நாம் விதைக்கும் இப்புது விதியால் தப்பாமல்
பிறக்கும் ஒரு முத்தான ஒளிமிகு புதிய பாரதம் !
Source…..MY Kavithai Published in http://www.dinamani.com….kavithaimani on 11 jan 2016
Natarajan
interesting and meaningful kavithai. enjoyed reading it.